உள்ளடக்கத்துக்குச் செல்

சோம யாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோம யாகம் அல்லது சோம யக்ஞம் (Somayajna')' (சமசுகிருதம்:सोमयज्ञ)[1] என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்கு முறைகளில் ஒன்றாகும். வேதம் கூறும் இந்த யாகம் சந்திரனின் சுழற்சியுடன் தொடர்புடைய ஒரு வகை வேள்வி ஆகும். மேலும் இது அண்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காகச் செய்யப்படுவதாகக் கருதப்படுகிறது.[2]இந்த வேள்வியின் முடிவில் சோம பானம் ஆகுதியாக[3]செலுத்தப்படுகிறது. வேத மந்திரங்கள் கற்றிந்தவர்களால் செய்யப்படும் சோம யாகம் தெய்வங்களை அமைதிப்படுத்தும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.[4]இந்த யாகத்தை நடத்தும் தலைமை புரோகிதரை சோமயாஜி என்று அழைப்பர்.

வகைகள்

[தொகு]

சோம யாகம் ஏழு வகையாக கொண்டுள்ளது. அவைகள்::[5]

  • அக்னிசோம யாகம் – இது முதன்மையான சோம யாகம் ஆகும்.
  • உக்தியா
  • சோடசி
  • அத்தியாக்னிஸ்தோமா
  • அதிராத்திரா
  • ஆப்டோரியாமா
  • வாஜபேய யாகம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gonda, Jan (1975). A History of Indian Literature: Vedic Literature (Saṃhitās and Brāhmaṇas). Vol. 1. Wiesbaden: Otto Harrassowitz. p. 328.
  2. Irby, Georgia L. (2019-12-05). A Companion to Science, Technology, and Medicine in Ancient Greece and Rome, 2 Volume Set (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 953. ISBN 978-1-119-10070-6.
  3. ஆகுதி
  4. Lidova, Natalia (1994). Drama and Ritual of Early Hinduism (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 38. ISBN 978-81-208-1234-5.
  5. Renou, Louis (1947). Vedic India. Susil Gupta. pp. 106–107.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம_யாகம்&oldid=4225772" இலிருந்து மீள்விக்கப்பட்டது