சோம் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோம் ஆறு
சோம் ஆறு
பெயர்सोम नदी (இந்தி)
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுசிவாலிக் மலை, அரியானா
நீளம்40 km (25 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுபத்ரால தடுப்பு, மேற்கு யமுனா கால்வாய், அரியானா
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுபத்ரால ஆறு (பாலி நதி)
நீர்தேக்கங்கள்தாதுபூர் தடுப்பணை

சோம் ஆறு என்பது (இந்தி: सोम नदी) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் ஓடும் யமுனை ஆற்றின் கிளை ஆறு ஆகும்.[1]

தோற்றம் மற்றும் பாதை[தொகு]

அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள யமுனநகர் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் ஆதி பத்ரி (அரியானா) எனும் இடத்தில் இந்த ஆறு உருவாகிறது.

1875-76 ஆம் ஆண்டில் அரியானாவில் மேற்கு யமுனா கால்வாயை சோம் நதி சந்திக்கும் இடமான தாதுபூரில் பத்ராலா தடுப்பணை கட்டப்பட்டது.[2]

இந்த ஆற்றின் வடிநில இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை, காதிர் மற்றும் பங்கர் ஆகும். இதில் பங்கர் மழைப் பருவத்தில் வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாவதில்லை. தாழ் நில வெள்ளை பாதிப்புக்குள்ளாகும் பகுதி காதர் ஆகும்.[1]

நீர்ப்பாசனம் மற்றும் நீர் சக்தி[தொகு]

மேற்கு யமுனா கால்வாயில் பல தடுப்பணைகள் உள்ளன. இவை யமுனாநகர் மாவட்டத்தில் உள்ளன. பத்ராலா அணையில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பயன்படுகிறது.[2]வேறு சில அணைகளும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வேத நதிகளுடன் அடையாளம் காணல்[தொகு]

இங்குச் செல்லும் சோம் நதி இருக்கு வேத சரசுவதி நதியின் போக்கைப் பின்பற்றுவதாகச் சிலர் கருதுகின்றனர்.[3][தலைப்பு காணவில்லை][ ஆசிரியர் தெரியவில்லை] 

படம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 HaryanaOnline - Geography of Haryana பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 "Western yaumna Canal Project". Archived from the original on 2017-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
  3. Early Harappans and Indus Sarasvati Civilization, 2 Vols. by Sharma, D P and Madhuri Sharma (ed) 2006

 

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்_ஆறு&oldid=3824889" இலிருந்து மீள்விக்கப்பட்டது