சோம்பு சிகரம்
தோற்றம்
| சோம்பு சிகரம் Chombu | |
|---|---|
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 6,362 m (20,873 அடி) |
| ஆள்கூறு | 27°53′58″N 88°38′41″E / 27.899531°N 88.644679°E |
| புவியியல் | |
| அமைவிடம் | சிக்கிம், இந்தியா |
| ஏறுதல் | |
| முதல் மலையேற்றம் | பதிவுகள் இல்லை |
சோம்பு சிகரம் (Chombu) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு வடக்கே அமைந்துள்ள 6,362 மீ (20,873 அடி) உயரமுள்ள ஒரு மலைச் சிகரமாகும்.
அமைவிடம்
[தொகு]சோம்பு சிகரம் வடக்கு சிக்கிமுடன் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், தங்கு-யுமேசாண்டோங்கு கணவாய்க்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இதன் மேற்புடைப்பு 1,034 மீ (3,392 அடி) ஆகும்.[1]
மலையேற்றம்
[தொகு]சோம்பு சிகரத்தின் மீது ஏறுதல்கள் பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. மேலும், திபெத்திய எல்லைக்கு அருகாமையில் இருப்பதால், இச்சிகரத்தில் ஏறுவதும் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
மலையேறும் முயற்சிகள்
[தொகு]2019 [2] மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், இலண்டனைச் சேர்ந்த இரண்டு மலையேறுபவர்கள் இச்சிகரத்தை ஏற மூன்று முறை முயற்சித்தனர். ஆனால் அவை தோல்வியடைந்தன. சிகரம் இன்னும் ஏறப்படவில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chombu". PeakVisor (in ஆங்கிலம்). Retrieved 2022-05-23.
- ↑ "Chombu – "Sometimes Things Don't Go Quite According To Plan"". berghaus-en (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-06-11. Retrieved 2022-05-23.
- ↑ "British mountaineers make three unsuccessful attempts to summit Mount Chombu". Sikkimexpress (in ஆங்கிலம்). Retrieved 2022-05-23.