சோமேசர் முதுமொழி வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமேசர் முதுமொழி வெண்பா ஒரு தமிழ் நீதி நூல். இதனை இயற்றியவர் சிவஞான முனிவர். திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள நீதிகளை, எடுத்துக்காட்டுக் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளின் அதிகாரத்துக்கு ஒன்றாக 133 பாக்கள் இதில் உள்ளன. இதன் பாக்கள் வெண்பா வகையைச் சேர்ந்தன.

வெளி இணைப்புகள்[தொகு]