சோமாலியா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் சோமாலியா கடற்கரை

சோமாலியா கடற்கரை (Somalia coastline) 3025 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நீண்ட கடற்கரையாகும் [1]. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் நீண்ட கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். சோமாலிய நாட்டின் தலைநகரமான மொகடிசு சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலும் ஏடன் வளைகுடாவும் இக்கடற்கரையின் பெரும்பகுதியை பகிர்ந்து கொள்கின்றன. மீன்பிடித்தல் மற்றும் வர்த்தகம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பராமரிப்பதில் இக்கடற்கரை முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் மற்ற அனைத்து துறைகளிலும் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதாக இல்லை [2]. ஆப்பிரிக்காவில் மடகாசுகர் கடற்கரைக்கு (4828 கிலோமீட்டர்) அடுத்ததாக இரண்டாவது பெரிய கடற்கரையாக சோமாலியா கடற்கரை திகழ்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு திசைகளுக்கு இடையில் இக்கடற்கரை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு முனை மேற்கில் உள்ள டிபூட்டியிலும் கிழக்கு முனை அதன் தெற்கிலுள்ள கென்யாவிலும் சந்திக்கின்றன [3]. சோமாலியாவின் கடலோரப் பகுதிகளில் பல தீவுகள் உள்ளன. ராசு கேசிர் ( கார்டாஃபு முனை) சோமாலியாவின் கிழக்குப் பகுதியில்கடைசியாக உள்ளது. இது ஏடன் வளைகுடாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.

புவியியல் தோற்றங்கள்[தொகு]

சோமாலியா கடற்கரையின் நீளம் முழுவதும் வெவ்வேறு நிலைமைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகத் திகழும் இக்கடற்கரை ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரையின் கடைசிப்பகுதியாகவும், இந்தியப் பெருங்கடலின் வடமேற்குக் கடற்கரையாகவும், ஏமன் நாட்டின் சாக்கோத் தீவுகளுக்கு அருகாமையிலுள்ள கடற்கரையாகவும் உள்ளது. இதன் தொடர்ச்சியான கண்டத்திட்டு 32500 கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. வடக்கு கடற்கரை டிபூட்டியிலிருந்து இருந்து தொடங்கி கிழக்கு வரை விரிவடைகிறது, மற்றும் கிழக்கு கடற்கரை வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை நீண்டு இறுதியாக கென்யாவை அடைகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Field Listing: Coastline". The World Factbook (in ஆங்கிலம்). U.S. Central Intelligence Agency. Archived from the original on 16 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Metz, Helen Chapin (1992). Somalia - Geography. Washington: GPO for the Library of Congress. http://countrystudies.us/somalia/33.htm. 
  3. "Somalia". www.nationsencyclopedia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 October 2017.
  4. Carbone, Federico; Accordi, Giovanni (2000). "The Indian Ocean Coast of Somalia". Marine Pollution Bulletin 41 (1–6): 141–59. doi:10.1016/S0025-326X(00)00107-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலியா_கடற்கரை&oldid=3556249" இலிருந்து மீள்விக்கப்பட்டது