சோமர்பீல்டு கோசல் இடப்பெயர்ச்சி விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமர்பீல்டு கோசல் இடப்பெயர்ச்சி விதி (Sommerfeld–Kossel displacement law) என்பது “ஒரு தனிமத்தின் தனித்த அயனியாக்கப்பட்ட கூறிலிருந்து வெளியிடப்படும் நிறமாலையானது தனிம வரிசை அட்டவணையில் அத்தனிமத்திற்கு முந்தைய தனிமத்தின் நடுநிலையான அணுக்கருவினால் வெளியிடப்படும் நிறமாலையுடன் அனைத்து விதங்களிலும் ஒத்த தன்மை உடையதாக இருக்கிறது” என்ற கூற்றைத் தெரிவிக்கிறது. அதே போன்று இருமுறை அயனியாக்கப்பட்ட தனிமத்தின் அணுக்கூறிலிருந்து வெளியிடப்படும் நிறமாலையானது தனிம வரிசை அட்டவணையில் அதன் முந்தைய தனிமத்தின் ஒருமுறை அயனியாக்கப்பட்ட அணுக்கூறிலிருந்து வெளியிடப்படும் நிறமாலையையோ அல்லது தனிம வரிசை அட்டவணையில் அதை விட இரண்டு அணு எண் குறைந்த தனிமத்தின் நடுநிலையான அணுவிலிருந்து வெளியிடப்படும் நிறமாலையுடனோ அனைத்து விதங்களிலும் ஒத்த தன்மை உடையதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. [1]

இந்த விதியானது அர்னால்டு சோமர்பீல்டு மற்றும் வால்தெர் கோசல் ஆகியோரால் 1919 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. Herzberg, 1945, p. 81.
  2. Mehra, 1982, p. 330.