உள்ளடக்கத்துக்குச் செல்

சோமசுந்தர் காடவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமசுந்தர் காடவராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் வட்டத்தில் அமைந்த செம்மங்குடி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கந்தசாமி காடவராயர் ஆவார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

[தொகு]

4.1.1932-ம் ஆண்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த தருணம், ஆங்கிலேய அரசால், காந்தியடிகள் கைது செய்யப்பட்ட செய்தி நாடெங்கும் காட்டுத் தீயாக பரவிக்கொண்டிருந்தது. நாடு முழுக்கப் பரவிக்கிடந்த மகாத்மா காந்தியின் தொண்டர்கள் பலரும் ஒன்றுகூடி, ஆங்கிலேய அரசை எதிர்த்து ஆங்காங்கே கண்டனப் போராட்டம் நடத்தவும் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்தார்கள்.[2] அதன்படி காவல்துறையின் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மீறி 1932-ம் வருடம் ஜனவரி 10-ம் தேதி, நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றார், இதில் கைது செய்யப்பட்டு ஆங்கிலேய அரசால் 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.
  2. "'நமக்கான சுயராஜ்ஜியம் எப்போது..?'". ஆனந்த விகடன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமசுந்தர்_காடவராயர்&oldid=4118593" இலிருந்து மீள்விக்கப்பட்டது