சோபி சோல்
சோபி சோல் (ஆங்கிலம்: Sophia Magdalena Scholl - பிறப்பு 9 மே 1921 - 22 பெப்ரவரி 1943) ஒரு யேர்மனிய மாணவர், புரட்சிவாதி, வன்முறையற்ற வெள்ளை ரோசா இயக்கத்தின ஒரு செயற்பாட்டாளர். நாசி யேர்மனிக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் போர் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகித்தற்காக தேசத் துரோகக் குற்றம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1970 களின் பின்பு இவர் ஒரு யேர்மனிய மாவீராகக் கொண்டாப்படுகிறார்.