சோபியா (இயந்திர மனிதன் - தானியங்கி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம், ஜெனீவாவில் நடைபெற்ற நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு உலக மாநாட்டில் (2018) பேசும் சோபியா

சோபியா (Sophia), ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட இயந்திர மனிதத் தானியங்கி படைப்பாகும். முனைவர். டேவிட் ஆன்சன் என்பவரால் 2013 ஆம் ஆண்டு ஆன்சன் தானியங்கியல் நிறுவனம் நிறுவப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும் ஆவார்.

சோபியா பொதுமக்கள் முன்பான தனது முதல் அறிமுகத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் 2016 ஆம் ஆண்டின் மார்ச்சு மாத மத்தியில் தென்மேற்கால் தெற்கு (South by Southwest - SXSW) என்ற விழாவில் நிகழ்த்தியது.[1]. ஆவ்ட்ரி எப்பன் மற்றும் டேவிட் ஆன்சனின் மனைவி ஆகியோரால் சோபியா ஆக்கம் பெற்றது. முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19 ஆம் நாள் இது செயல்படத் தொடங்கியது. சோபியாவின் தோல் ஃப்ரப்பரால் (தானியங்கியலில் பயன்படுத்தப்படும் மீட்சித் தன்மையுள்ள இயற்கை மீள்மம் அல்லது இரப்பர்)ஆக்கப்பட்டதாக இருப்பதால் 62-இற்கும் மேற்பட்ட முகபாவனைகளை வெளிக்காட்ட இயலும்.[2][3].

அக்டோபர் 2017இல் சோபியாவிற்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இதனால், உலகின் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை சோபியாவிற்கு கிடைத்துள்ளது.[4] நவம்பர் 2017 இல், சோபியா ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் எப்பொழுதிற்கும் முதலான புதுமைகளின் வெற்றியாளர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் கிடைக்கப் பெற்ற முதல் மனிதரல்லாத ஒரு பொருள் இதுவேயாகும். [5].

மேற்கோள்கள்[தொகு]