சோபியா ரோமன்சுகாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோபியா ரோமன்சுகாயா (Sofia Romanskaya) ஓர் உருசிய வானியல் அறிஞராவார். இந்த துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய முதல் உருசிய பெண்களில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார். சோபியா 1886 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சோபியா வாசிலீவ்னா வோரோசிலோவா-ரோமன்சுகாயா என்றும் அழைக்கப்படும் இவர் செயின்ட் பீட்டர்சுபர்க் நகரில் பிறந்தார். உருசியப் பேரரசின் ஒரு முக்கியமான பெண்கள் கல்வி நிறுவனமான பெசுடுசேவ் நிறுவனத்தில் படித்துப் பட்டம் பெற்றார். [1] 1908 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை புல்கோவோ வான் ஆய்வகத்தில் பணியாற்றினார். [2] இங்கு பணிபுரியும்போது துருவ இயக்கம் குறித்த தனது ஆய்வுகளில் 20,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அட்சரேகை அவதானிப்புகளை மேற்கொண்டார். [3] அனைத்துலக வானியல் ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த சோபியா 1958 ஆம் ஆண்டு மாசுகோவில் நடந்த பொதுச் சபையில் கலந்து கொண்டார். [4] 1936 ஆம் ஆண்டில் கிரிகோரி நியூச்மின் கண்டுபிடித்த சிறுகோளுக்கு (3761) ரோமன்சுகாயா என்று ரோமன்சுகாயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெள்ளி கோளில் இருக்கும் ஒரு கிண்ணக்குழிக்கும் இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ворошилова-Романская Софья Васильевна". Astronet. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  2. "(3761) Romanskaya". IAU Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  3. Rykhlova, L. K. (1995). "Women-Astronomers of Former USSR". Highlights of Astronomy Vol. 10: 98-100. https://studyres.com/doc/21032436/women-astronomers-of-former-ussr-l.v.-rykhlova. பார்த்த நாள்: 17 March 2019. 
  4. Sadler, D. H., தொகுப்பாசிரியர் (1960). Transactions of the International Astronomical Union: Volume X, Tenth General Assembly Held At Moscow. Cambridge University Press. பக். 66, 271, 275, 767. https://books.google.com/books?id=gC88AAAAIAAJ. 
  5. "Venus Crater Database, Romanskaya". Lunar and Planetary Institute. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_ரோமன்சுகாயா&oldid=3155239" இலிருந்து மீள்விக்கப்பட்டது