சோபியா கௌட்ஸ்டிக்கர்
சோபியா கௌட்ஸ்டிக்கர் | |
---|---|
![]() | |
பிறப்பு | சோபியா கௌட்ஸ்டிக்கர் 15 சனவரி 1865 ராட்டர்டேம், நெதர்லாந்து |
இறப்பு | 20 மார்ச்சு 1924 மியூனிக், ஜெர்மனி | (அகவை 59)
தேசியம் | நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி |
பணி | ஜெர்மன் புகைப்படக்காரர் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1889–1924 |
அறியப்படுவது | fபுகைப்படம் எடுப்பதற்கான அரச உரிமம் பெற்ற முதல் பெண் |
சோபியா கௌட்ஸ்டிக்கர் ( Sophia Goudstikker; 15 ஜனவரி 1865 - 20 மார்ச் 1924) நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெர்மன் புகைப்படக் கலைஞரும், பெண்ணிய முன்னோடியும் ஆவார். நூற்றாண்டின் தொடக்கத்தில் மியூனிக்கில் முதன்மையான பெண்கள் உரிமை ஆர்வலர்களில் ஒருவராகவும், அனிடா ஆக்ஸ்பர்க்கின் வணிகப் பங்காளியாகவும் துணையாகவும் இருந்தார். இவர்களின் கூட்டாண்மை கலைந்தபோது, கௌட்ஸ்டிக்கர் மிகவும் மிதமான பெண்ணியவாதியாக ஆனார். மேலும் இகா புரூடன்பெர்க்குடன் கூட்டு சேர்ந்தார். பொதுவாக பெண்பால் குணாதிசயங்களை மீறிய ஆண்பால் பெண்ணின் மூன்று வெவ்வேறு எழுத்தாளர்களின் சித்தரிப்புகளுக்கு கௌட்ஸ்டிக்கர் உத்வேகம் அளித்தார். புகைப்படம் எடுப்பதற்கான அரச உரிமத்தைப் பெற்ற முதல் திருமணமாகாத ஜெர்மன் பெண்ணாவார். மேலும் இளைஞர் நீதிமன்றத்தில் வழக்குகள் வாதிட அனுமதிக்கப்பட்ட முதல் ஜெர்மன் பெண்ணும் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
சோபியா கௌட்ஸ்டிக்கர், 1865 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி நெதர்லாந்தின் ராட்டர்டேமில் கிரிட்ஜே (என்கிற கிளிசர்) மற்றும் சாலமன் எலியாஸ் கௌட்ஸ்டிக்கர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [1][2] 1867 இல், குடும்பம் ராட்டர்டாமை விட்டு வெளியேறி ஜெர்மனியின் ஆம்பர்குவில் குடியேறியது. அதன்பிறகு திரெசுடன் நகருக்கு குடிபெயர்ந்தனர், அங்கு சாலமன் 1892 இல் இறந்தார் [2] சோபியா திரெசுடனில் அனிடா ஆக்ஸ்பர்க்கின் சகோதரியால் இயக்கப்பட்ட ஒரு கலைப் பள்ளியில் பயின்றார்.
தொழில் மற்றும் பெண்ணியம்[தொகு]
1887 இல் [3] அனிடா ஆக்ஸ்பர்க்க்குடன் சேர்ந்து மியூனிக்கில் ஒரு புகைப்பட அரங்கை நிறுவினர்.[4] புகைப்படம் எடுப்பதற்கான அரச உரிமத்தைப் பெற்ற திருமணம் ஆகாத முதல் ஜெர்மன் பெண் ஆவார். இந்த அரங்கம் அவாண்ட்-கார்ட் [5] என்ற சோதனை கலைப் படைப்பு மற்றும் கலைப் படைப்பை உருவாக்கும் கலைஞர்கள் சந்திக்கும் இடமாக மாறியது மற்றும் பல பிரபலமான நபர்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். இசடோரா தங்கன், [6] மேரி-அடிலெய்ட், லக்சம்பேர்க்கின் கிராண்ட் டச்சஸ்,[7] ரெய்னர் மரியா ரில்கே,[8] போன்ற கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரச குடும்பத்தினரின் புகைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டன.[5][9] 1898 இல் இவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர், 1908 வரை கௌட்ஸ்டிக்கர் தனியாக அரங்கத்தை நடத்தினார் [10] இவரது தங்கையான மதில்டே நோரா, இவருடன் புகைப்படக் கலைஞராக பணியாற்றினார். [11] தனது வாழ்க்கையின் முடிவில், கௌட்ஸ்டிக்கர் தனது வணிகத்தை புகைப்படக் கலைஞர் எம்மா யுபிலிசென்னிடம் குத்தகைக்கு அளித்தார். ஆனால் முதலாம் உலகப் போரும் அதன் விளைவுகளும் பாரம்பரிய வாடிக்கையாளர்களை சிதறடித்தன.[12]
சான்றுகள்[தொகு]
- ↑ Rotterdam City Archives 1865, ப. A051.
- ↑ 2.0 2.1 Steinhäuser 2005.
- ↑ Muellner 2006.
- ↑ German National Library 2016.
- ↑ 5.0 5.1 Wildenthal 2001, ப. 66.
- ↑ Seidel 2015.
- ↑ Delcampe Luxembourg 2016.
- ↑ Freedman 1998, ப. 57.
- ↑ Hand 2008, ப. 120.
- ↑ Pfeiffer 2014, ப. 26.
- ↑ Freedman 1998, ப. 58.
- ↑ Haider 2006, ப. 143-148.
மேலும் படிக்க[தொகு]
- Freedman, Ralph (1998). Life of a Poet: Rainer Maria Rilke. Evanston, Illinois: Northwestern University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8101-1543-9. https://books.google.com/books?id=MRmu9Xy9aqkC&pg=PA57.
- Haider, Edgard (2006) (in German). Verlorene Pracht: Geschichten von zerstörten Bauten. Hildesheim, Germany: Gerstenberg. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-806-72949-8.
- Hand, Stacy (2008). Embodied Abstraction: Biomorphic Fantasy and Empathy Aesthetics in the Work of Hermann Obrist, August Endell, and Their Followers. Chicago, Illinois. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-549-56870-4. https://books.google.com/books?id=wa64FRS0yOcC&pg=PA120.[தொடர்பிழந்த இணைப்பு]
- Lybeck, Marti M. (2014). Desiring Emancipation: New Women and Homosexuality in Germany, 1890–1933. Albany, New York: State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4384-5221-0. https://books.google.com/books?id=JecHBAAAQBAJ&pg=PA55.
- Martin, Biddy (1991). Woman and Modernity: The (life)styles of Lou Andreas-Salomé. Ithaca, New York: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-9907-0. https://books.google.com/books?id=gYYS3SzluroC&pg=PA11.
- Mazón, Patricia M. (2003). Gender and the Modern Research University: The Admission of Women to German Higher Education, 1865-1914. Stanford, California: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8047-4641-0. https://books.google.com/books?id=_SKPLZtwulQC&pg=PA170.
- Muellner, Beth (2006). "The Photographic Enactment of the Early New Woman in 1890s German Women's Bicycling Magazines". Women in German Yearbook: Feminist Studies in German Literature & Culture (Lincoln, Nebraska: University of Nebraska Press) 22: 167–188. doi:10.1353/wgy.2006.0009. பன்னாட்டுத் தர தொடர் எண்:1058-7446.
- Pfeiffer, Zara S. (2014). "Die Geschichte der Frauenbewegung in München" (in German). ThemenGeschichtsPfade (Munich, Germany: Landeshauptstadt München). https://www.muenchen.de/rathaus/dms/Home/Stadtverwaltung/Kulturreferat/ns-dokumentationszentrum/TGP/Frauen/TGP_Frauenbewegung_komplett_screen/TGP_Frauenbewegung_2014.pdf. பார்த்த நாள்: 16 May 2016.
- Griselda Pollock (2005). Generations and Geographies in the Visual Arts: Feminist Readings. London, England: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-76849-3. https://books.google.com/books?id=XgiGAgAAQBAJ&pg=PA62.
- Salokar, Rebecca Mae; Volcansek, Mary L. (1996). Women in Law: A Bio-bibliographical Sourcebook. Westport, Connecticut: Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-29410-5. https://books.google.com/books?id=gr0iKT-8RewC&pg=PA31.
- Seidel, Andrea Mantell (2015). Isadora Duncan in the 21st Century: Capturing the Art and Spirit of the Dancer's Legacy. Jefferson, North Carolina: McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7864-7795-1. https://books.google.com/books?id=RJ4hCwAAQBAJ&pg=PA153.
- Steinhäuser, Frauke (29 March 2005). "Thekla Hinkel 1875, Tornquiststraße 7 (Eimsbüttel, Eimsbüttel)" (in German). Hamburg, Germany: Projekt Stolpertonsteine Hamburg இம் மூலத்தில் இருந்து 15 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160515222232/http://stolpersteine-hamburg.de/en.php?&LANGUAGE=EN&MAIN_ID=7&p=88&BIO_ID=3411. ""Betje Goudstikker was born on 06/24/1850 in Rotterdam, the eldest daughter of the art dealer Salomon Elias Goudstikker and his wife Grietje, born Klisser. She had nine siblings, her second youngest sister Sophia was enumerated around the turn of the century as one of the most prominent representatives of the Munich women's movement.""
- Wildenthal, Lora (2001). German Women for Empire, 1884-1945. Durham, North Carolina: Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8223-2819-4. https://books.google.com/books?id=Ma_mFARina4C&pg=PA66.
- "Anita Augspurg" (in German). Zürich, Switzerland: Women's International League for Peace and Freedom. 2016 இம் மூலத்தில் இருந்து 16 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160516180617/http://www.wilpf.de/ueber-uns/friedensfrauen/anita-augspurg.html.
- "Auf Spurensuche zu Ika Freudenberg" (in German). Neuwied, Germany: Neuwied-Rhein Kurier. 3 September 2015 இம் மூலத்தில் இருந்து 16 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160516173426/http://www.nr-kurier.de/artikel/41261-auf-spurensuche-zu-ika-freudenberg.
- "BS Geboorte met Sophia Goudstikker" (in Dutch). Rotterdam, Netherlands: Centrum voor Familiegeschiedenis. 15 January 1865. https://www.wiewaswie.nl/personen-zoeken/zoeken/document/a2apersonid/322551485/srcid/2422281/oid/4.
- "Chroniken" (in German). Munich, Germany: Forum Homosexualität München. 5 February 2014 இம் மூலத்தில் இருந்து 16 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160516193636/http://www.forummuenchen.org/index.cfm?id=4655.
- "Goudstikker, Sophia". Frankfurt am Main, Germany: Naturmuseum Senckenberg. 2016. http://sdei.senckenberg.de/biographies/information.php?id=120403&sprache=_englisch.
- "Hof-Atelier Elvira (München)" (in German). Leipzig and Frankfurt am Main, Germany: Katalog der Deutschen Nationalbibliothek. 26 January 2016. https://portal.dnb.de/opac.htm?method=simpleSearch&query=007345399.
- "Marie-Adélaïde, Grand Duchess of Luxembourg - Hofatelier Elvira Munchen". Soignies, Belgium: Delcampe International. 11 March 2016. http://www.delcampe.net/page/item/id,366315675,var,Real-photo-ROYALTY-Luxemburg-Luxembourg-Marie-Adelaide-Grand-Duchess-of-Luxembourg-Hofatelier-Elvira-Munchen,language,E.html#description.[தொடர்பிழந்த இணைப்பு]