உள்ளடக்கத்துக்குச் செல்

சோபியா குரேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்னல்

சோபியா குரேசி
2015-இல் சோபியா குரேசி
பிறப்புஏப்ரல் 18, 1971 (1971-04-18) (அகவை 55)
வடோதரா, குஜராத், இந்தியா
சார்பு இந்தியா
சேவை/கிளைஇந்தியத் தரைப்படை
தரம்கர்னல்
படைப்பிரிவுசிக்னல் படையணி
கட்டளைஐ. நா. அமைதி காக்கும் படை (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)
இந்தியத் தரைப்படை இணையக் குற்றத் தாக்குதல் கட்டளையகம்
தரைப்படையின் அதிரடிப் படைப் பிரிவு
போர்கள்/யுத்தங்கள்2025 இந்தியா-பாக்கித்தான் மோதல்கள்
விருதுகள்சிறப்புச் சேவை பதக்கம்
விஜய் நடவடிக்கை பதக்கம்
பராக்கிரம நடவடிக்கை பதக்கம்
சைனிய சேவா பதக்கம்
விதேஷ் சேவா பதக்கம்
ஐ. நா. பதக்கம்
வேறு செயற்பாடுகள்தேசியப் பாதுகாப்புக் கல்லூரியின் கௌவர விரிவுரையாளர்

கர்னல் சோபியா குரேசி (Colonel Sofiya Qureshi) (பிறப்பு: 1971)[1] இந்தியத் தரைப்படையின் கர்னல் பதவி வகிக்கும் மூத்த பெண் இராணுவ அதிகாரி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் பணியில் முழுக்க முழுக்க ஆண்களைக் கொண்ட இந்தியப் படையை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர். 2025 பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாக்கித்தான் மற்றும் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டுவரும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் தேசிய கவனத்தைப் பெற்றார்.

இராணுவ தகவல் தொடர்பு மற்றும் சைபர் போரில் நிபுணரான, சோபியா குரேசி, இந்திய இராணுவத்தின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்களை நவீனமயமாக்குவதில் முன்னோடியாகப் பங்காற்றியுள்ளார். மேலும் ஆயுதப் படைகளில் பாலினத் தடைகளை உடைத்துள்ளார்[2]. மேலும், 2025 பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாக்கித்தான் மற்றும் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டுவரும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து 2025 சிந்தூர் படை நடவடிக்கை குறித்து ஊடக சந்திப்பிற்கு இவர் இணைந்து தலைமை தாங்கினார்.[3][3]

இளமை வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

சோபியா குரேசி 1981 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் வடோதராவில் ஒரு குடிசார் பொறியியலாளரான முகமது குரேசிக்கும், கணிதப் பேராசிரியரான அமினா குரேசிக்கும் மகளாகப் பிறந்தார்.[1][4] பள்ளிப் படிப்பு மற்றும் இளநிலை அறிவியல் படிப்பை முடித்த சோபியா குரேசி, பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[5][6]

இராணுவ வாழ்க்கை

[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகள்

[தொகு]

1994 ஆம் ஆண்டு இராணுவத்தின் தகவல் அல்லது வழிமுறைகளை தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் சைகை படையில் நியமிக்கப்பட்ட சோபியா குரேசி, சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு, இராணுவத்தின் முதல் எண்ணிம தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்க உதவினார்.[7] 2008 ஆம் ஆண்டு லெப்டினன்ட் கர்னலாக, இராணுவத் தலைமையகத்தில் உள்ள சைகை புலனாய்வுப் பிரிவில் நவீனமயமாக்கலுக்கு தலைமை தாங்கினார்.[8]

ஐ.நா. அமைதி காக்கும் பணி (2016–2017)

[தொகு]

2016 ஆம் ஆண்டில், கர்னலாக, இவர் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதியை உறுதிப்படுத்தும் பணியில் 500 க்கும் மேற்பட்ட இந்திய துருப்புக்களை வழிநடத்தினார் - முழுக்க முழுக்க ஆண்களைக் கொண்ட இந்திய அமைதி காக்கும் பிரிவைத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி இவர்.[9] இவரது படைப்பிரிவு கொந்தளிப்பான வடக்கு கிவுவில் அமைதியைப் பராமரித்து ஆயுதக் குறைப்பை நடத்தியது. மேலும், மனிதாபிமான உதவிகளைச் செய்தது.

சைபர் பாதுகாப்பு கட்டளை (2017–2022)

[தொகு]

இந்தியாவின் சைபர் பாதுகாப்பு கட்டளையின் படைப்பகுதித் தலைவர் மற்றும் தலைமை துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர், இந்தியாவின் இராணுவ சைபர் கோட்பாட்டை வரையறுக்க உதவினார். சைபர் பயிற்சி வரம்புகளை உருவாக்கினார். மேலும், அச்சுறுத்தல் கண்டறிதல் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.[10]

முக்கியத் தலைமைத்துவ பதவி உயர்வு

[தொகு]

2022 ஆம் ஆண்டில், சோபியா குரேசி மேஜர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்[சான்று தேவை]. மின்னணுப் போர் மற்றும் சைபர் செயலிகள் ஒருங்கிணைப்பதை மேற்பார்வையிடும் முக்கியத் தகவல் தொடர்புப் பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.[11]

2025 இந்தியா-பாக்கித்தான் மோதலில் பங்கு

[தொகு]

மேற்குப் பகுதியில் சைபர்-ஒருங்கிணைந்த விரைவுப் படைப் பிரிவை சோபியா குரேசி வழிநடத்தினார். இவரது பிரிவு இராணுவத் தகவல்தொடர்புகளைப் பாதுகாத்தது. மேலும், மூலோபாய அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்களை முறியடித்தது.[12]

சொந்த வாழ்க்கை

[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சோபியா குரேசி, கர்னல் தாஜுதீன் பாகேவாடி என்பவரை மணந்தார்.[9] இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Raja, Aditi (2025-05-08). "'We spoke yesterday… she did not mention a word': Col Sofiya Qureshi's twin sister". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-09.
  2. "Supreme Court praised Colonel Sofiya Qureshi in 2020 ruling on Permanent Commission to women Army officers" (in en-IN). The Hindu. 8 May 2025. https://www.thehindu.com/news/national/supreme-court-praises-colonel-sofiya-qureshi-in-2020-ruling-on-permanent-commission-to-women-army-officers/article69552366.ece.
  3. 1 2 Joint Media Briefing By Vikram Misri, Sofia Qureshi, Vyomika Singh
  4. Meet Colonel Sofiya Quraishi's 'all-rounder' twin sister Shyna Sunsara. She is a model, fashion designer, economist, and environmentalist
  5. "Operation Sindoor: Internet hails Colonel Sofiya Qureshi, IAF Wing Commander Vyomika Singh, who led media briefing". The Indian Express (in ஆங்கிலம்). 2025-05-07. Retrieved 2025-05-09.
  6. Who is Lt. Colonel Sophia Qureshi? Check Education Qualification, Career Details, Awards and Honours
  7. "Colonel Sophia Qureshi's achievements in Supreme Court verdict". Mathrubhumi (in ஆங்கிலம்). 2025-05-09. Retrieved 2025-05-09.
  8. Jukanti, Prasad (2025-05-07). "Sofia Qureshi: Discussion on Colonel Sofia Qureshi's religion.. Indians' counter to Pakistani girl". www.dishadaily.com (in தெலுங்கு). Retrieved 2025-05-09.
  9. 1 2 Service, Express News (2025-05-08). "Family proud of Belagavi's daughter-in-law Col Sofia Qureshi who unveiled Operation Sindoor's success". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-09.
  10. "Sophia Qureshi: Who is Lieutenant Colonel Sophia Qureshi, who told the whole story of 'Operation Sindoor'". Amar Ujala (in இந்தி). Retrieved 2025-05-09.
  11. Apoorvanand (2025-05-08). "Sofia Qureshi Is the Face of Indian Nationalism—But Fathima Was Left to Die Unseen". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2025-05-09.
  12. "Sofia Qureshi - Belagavi’s proud daughter-in-law" (in en-IN). The Hindu. 2025-05-08. https://www.thehindu.com/news/national/karnataka/sofia-qureshi-belagavis-proud-daughter-in-law/article69553490.ece.
  13. "Colonel Sofia Qureshi's Family Tree: Service To The Nation Since The Revolt Of 1857". News18 (in ஆங்கிலம்). Retrieved 2025-05-09.
  14. "SC Cited Col Sofia Qureshi's Achievements in Landmark Ruling for Women Army Officers". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-05-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_குரேசி&oldid=4589824" இலிருந்து மீள்விக்கப்பட்டது