உள்ளடக்கத்துக்குச் செல்

சோபிதா துலிபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபிதா துலிபாலா
2018 இல் துலிபாலா
பிறப்பு31 மே 1992 (1992-05-31) (அகவை 32)
தெனாலி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது வரை

சோபிதா துலிபாலா (Sobhita Dhulipala; பிறப்பு 31 மே 1992) ஓர் இந்திய நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் முதன்மையாக இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் "ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013" பட்டத்தை வென்றார். மேலும், மிஸ் எர்த் 2013-இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 (2016) என்ற அதிரடித் திரைப்படத்தில் துலிபாலா அறிமுகமானார். மேலும் இவர் தெலுங்கு உளவுத் திரைப்படமான குட்டாச்சாரி (2018) மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் நாடகத் தொடரான மேட் இன் ஹெவன் (2019) ஆகியவற்றிலும் நடித்தார்.[2][3]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

சோபிதா துலிபாலா 31 மே 1992 அன்று[4][5] ஆந்திரப் பிரதேசத்தின் தெனாலி நகரத்தில்[6] ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[7][8] பின்னர் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார்.[9] இவர் திரைப்படத் தொழிலைத் தொடர மும்பைக்குச் சென்றார். மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள எச்.ஆர். வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.[5][10]

குறிப்புகள்

[தொகு]
  1. "Miss India Diaries: I planted 30 saplings on World Environment Day, says Sobhita! - Beauty Pageants - Indiatimes". Femina Miss India. 6 June 2013. https://beautypageants.indiatimes.com/news/Miss-India-Diaries-I-am-representing-India-at-Miss-Earth-says-Sobhita/articleshow/20456753.cms. 
  2. IANS (26 June 2016). "Anurag Kashyap is all praises for 'Raman Raghav 2.0' actress Sobhita Dhulipala" (in en). indiatvnews.com. https://www.indiatvnews.com/entertainment/bollywood-anurag-kashyap-raman-raghav-2-0-actress-sobhita-dhulipala-praise-336589. 
  3. "'Made in Heaven' trailer: Big fat weddings and secrets in Amazon Prime Original series". Scroll.in. 14 February 2019. https://scroll.in/reel/913222/made-in-heaven-trailer-zoya-akhtar-amazon-prime-video-web-series.  before bagging the female lead role in the Malayalam biopic Kurup alongside Dulquer Salmaan.
  4. Chakraborty, Juhi (17 October 2020). "Sobhita Dhulipala: All difficulties lead us to some learning, so what's the point in crying?". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 28 July 2021. the 28-year-old asks
  5. 5.0 5.1 "I am an artist in service of the story: Sobhita Dhulipala". The Hindu. https://www.thehindu.com/entertainment/i-am-an-artist-in-service-of-the-story-sobhita-dhulipala/article30556559.ece. 
  6. "Sobhita Dhulipala: My work should speak for me". The New Indian Express. https://www.cinemaexpress.com/stories/interviews/2018/jul/31/sobhita-dhulipala-my-work-should-speak-for-me-7223.html. 
  7. "No matter where I am, I will be a Telugu ammayi, who craves pappu-annam: Sobhita Dhulipala". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/No-matter-where-I-am-I-will-be-a-Telugu-ammayi-who-craves-pappu-annam-Sobhita-Dhulipala/articleshow/53284591.cms. 
  8. "I embody the spirit of Vizag: Sobhita Dhulipala - Beauty Pageants - Indiatimes". Femina Miss India. https://beautypageants.indiatimes.com/miss-india/i-embody-the-spirit-of-vizag-sobhita-dhulipala/articleshow/19194670.cms. 
  9. "Sobhita Dhulipala's journey: From Vizag to Bollywood". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/300616/from-vizag-to-bollywood.html. 
  10. "I want to try everything, says Raman Raghav 2.0 actor Sobhita Dhulipala". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/bollywood/i-want-to-try-everything-says-raman-raghav-2-0-actor-sobhita-dhulipala-2877321/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபிதா_துலிபாலா&oldid=3946540" இலிருந்து மீள்விக்கப்பட்டது