உள்ளடக்கத்துக்குச் செல்

சோபத்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபத்பூர் மாவட்டம்
ضلع صحبت پور
மாவட்டம்
Location of சோபத்பூர் மாவட்டம்
மாகாணம்பலூசிஸ்தான்
கோட்டம்நசீராபாத்
நிறுவப்பட்ட ஆண்டுமே 2013
தலைமையிடம்சோபத்பூர்
அரசு
  வகைமாவட்டத் துணை ஆணையாளர்
பரப்பளவு
  Total802 km2 (310 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
  Total2,40,106
  அடர்த்தி300/km2 (780/sq mi)
  நகர்ப்புறம்
14,728
  நாட்டுப்புறம்
2,25,378
எழுத்தறிவு
  சராசரி எழுத்தறிவு41.02%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இணையதளம்https://pildat.org/wp-content/uploads/2025/01/SohbatpurDistrictProfile.pdf?

சோபத்பூர் மாவட்டம் (Sohbatpur District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான்மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். ஜாப்ராபாத் மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைக் கொண்டு சோபத்பூர் மாவட்டம் மே 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]இதன் நிர்வாகத் தலைமையிடம் சோபத்பூர் நகரம் ஆகும். சோபத்பூர் நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கே 316.8 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 999.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

சோபத்பூர் மாவட்டத்திற்கு வடக்கில் தேரா புக்தி மாவட்டம், கிழக்கில் சிந்து மாகாணம், தெற்கில் ஜாப்ராபாத் மாவட்டம், வடக்கில் நசீராபாத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

சோபத்பூர் மாவட்டம் கீழ்கண்ட வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு

(2023)[5]

ஒன்றியக் குழுக்கள்
பரிதாபாத் வட்டம் 137 68,948 503.27 41.09% ...
ஹயர்வி வட்டம் 73 16,891 231.38 42.60% ...
மஞ்சிபூர் வட்டம் 82 23,624 288.10 43.85% ...
சாகித் முகமது கன்ரானி வட்டம் 77 18,175 236.04 45.90% ...
பன்வார் வட்டம் 99 47,624 481.05 35.38% ...
சோபத்பூர் வட்டம் 334 64,844 194.14 42.30% ...

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,734 குடியிருப்புகள் கொண்ட சோபத்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 240,106 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.06% ஆண்கள் வீதம் உள்ளனர்.[6][7]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 103,225 (42.99%) ஆக உள்ளனர்.[8]நகர்புறங்களில் 14,728 (6.13%) மக்கள் வாழ்கின்றனர்.[6]

சமயம்

[தொகு]

இம்மாவாட்டத்தில் இசுலாமியர்கள் 98.99% மற்றும் இந்துக்கள் 0.75% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.26% வாழ்கின்றனர்.[1]

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 67.39%, சிந்தி மொழியை 17.63%, பிராகுயி மொழியை 7.92%, சராய்கி மொழியை 6.38% மற்றும் பிற மொழிகளை 0.68% பேசுகின்றனர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  3. "PM Khoso inaugurates new district of Sohbatpur in Balochistan". Paktribune. Archived from the original on 2017-11-16. Retrieved 2025-07-07.
  4. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  5. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  6. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  9. "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபத்பூர்_மாவட்டம்&oldid=4589828" இலிருந்து மீள்விக்கப்பட்டது