சோன்மார்க் சுரங்கப்பாதை
சோன்மார்க் சுரங்கப்பாதையின் மேற்கு பகுதி | |
| மேலோட்டம் | |
|---|---|
| அமைவிடம் | சோன்மார்க் & போரஜத் ககாங்கிர், காந்தர்பல் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
| ஆள்கூறுகள் | 34°18′24″N 75°11′00″E / 34.30667°N 75.18333°E |
| தற்போதைய நிலை | நிறைவுபெற்றது |
| வழித்தடம் | |
| தொடக்கம் | 10 ஏப்ரல் 2023[1] |
| செய்பணி | |
| பணி ஆரம்பம் | மே 2015 |
| இயக்குபவர் | தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் |
| Traffic | மின் வாகனங்கள் |
| தொழினுட்பத் தகவல்கள் | |
| தண்டவாளங்களின் எண்ணிக்கை | இருவழிச்சாலை |
![]() | |
சோன்மார்க் சுரங்கப்பாதை (Sonamarg Tunnel) என்பது வட இந்தியாவில் சம்மு-காசுமீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள போரஜத் ககாங்கிர் கிராமத்தையும், அதே மாவட்டத்தில் உள்ள சோன்மார்க்க்கையும் இணைக்கும் 6.5 கிலோ மீட்டர் நீளமுள்ள 2 வழிச் சுரங்கப்பாதை சாலையாகும். இச்சுரங்கப்பாதை மாற்றப்பட்ட Z-வடிவச் சாலையின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இசட்-மோர்க் ஆங்கிலத்தில் "Z-turn" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சாலை பனிச்சரிவு ஏற்படக்கூடியதாக இருந்தது. கடுமையான பனிப்பொழிவு காரணமாகக் குளிர்கால மாதங்களில் போக்குவரத்து தடைப்பட்டது. ஆனால் இசட்-மோர்க் சுரங்கப்பாதை சோன்மார்க் சுற்றுலா நகரத்திற்கு அனைத்துக் காலங்களிலும் தொடர் இணைப்பை வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.[2] முந்தைய வளைந்து நெளிந்து செல்கின்ற சாலையின் பயண நேரத்துடன் ஒப்பிடும்போது 6.50 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதையில் பயணிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
சிறீ நகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சுரங்கப்பாதை, பால்தால் (அமர்நாத் குகை, கார்கில், இலடாக்கில் உள்ள பிற இடங்களுக்கும் ஆண்டு முழுவதும் அனைத்து வானிலை சூழலிலும் சாலை இணைப்பையும் வழங்குகிறது. இந்திய இராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்லவும் மேம்படுத்தப்பட்ட அணுகலையும், சுற்றுலா, உள்ளூர் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறது. இது 31 சாலை சுரங்கங்களில் ஒன்றாகும். இதில் சம்மு காசுமீரில் 20-ம் இலடாக்கில் 11 சுரங்கங்களும் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து 14,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.
நன்மைகள்
[தொகு]இந்திய ஒன்றியப் பிரதேசமான சம்மு காசுமீரின் காந்தர்பல் மாவட்டத்தில் ககங்கீர் அருகே அமைந்துள்ள இந்தச் சுரங்கப்பாதை, இந்தியாவுக்குப் பெரும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது ஜோஜி-லாவுக்கு விரைவான அணுகலை ஆண்டு முழுவதும் வழங்கும். முன்பிருந்த பழைய சாலை ஆபத்தான பனிப்பொழிவு, பனிச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடியது. இதனால் வருடத்தில் பல மாதங்களுக்குச் சாலை மூடப்படும். லே நோக்கி மேற்கே 325 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள ஜோஜி-லா சுரங்கப்பாதை இசட்-மோர் சுரங்கப்பாதை, சிறீ நகர்-கார்கில் இடையே தடையற்ற இணைப்பை உறுதி செய்யும். இசட்-மோர்க் சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டதால் சிறீ நகர்-லே இடையேயான பயண நேரமும் கணிசமாகக் குறையும். ஏனெனில் பயணிகள் இனி கார்கிலில் இரவு முழுவதும் தங்க வேண்டிய அவசியமில்லை.
இந்தச் சுரங்கப்பாதை இப்பகுதி முழுவதும் சமூக, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். தாஜிவாசு பனிப்பாறை, சிந்து ஆறு, வெள்ளை நீர் சறுக்குப்படகுப் பயணம் போன்ற செயல்பாடுகளைக் கொண்ட சோனாமார்க்கின் சுற்றுலாவை அதிகரிக்கும்.
அம்சங்கள்
[தொகு]- இசட் மோர்க் சுரங்கப்பாதை என்பது ககங்கீர் - சோன்மார்க் இடையேயான தேசிய நெடுஞ்சாலை 1-இல் 69.5 கி.மீ. பகுதியில் தொடங்கி 81.3 கி.மீ. தொலைவில் முடிவடையும் இரு வழிச் சாலை சுரங்கப்பாதையாகும்.
- இந்தச் சுரங்கப்பாதை 6.5 கி.மீ. நீளமும், சுரங்கப்பாதையின் நுழைவாயில்கள், தேசிய நெடுஞ்சாலை 1 ஆகியவற்றுக்கு இடையேயான அணுகுமுறை சாலைகளின் நீளம் 6.05 கிமீ ஆகும்.
- இந்தச் சுரங்கப்பாதை 10 மீட்டர் அகலமுடையது. இது 7.50 மீட்டர் அகலம் உடையது. இதற்கு இணையான அவசரக் கால சுரங்கப்பாதையையும் அமைந்துள்ளது. இதனை அவசரக்காலத்திலும் தொடருந்து சுரங்கப்பாதையாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 80 கி. மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 2,637 மீட்டர் (8,652 ) உயரத்தில் அமைந்துள்ளது.
- இத்திட்டத்தின் மொத்த மூலதனச் செலவு சூலை 2012-இல் 27 பில்லியன் ரூபாயாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் நிலச் செலவு, மீள்குடியேற்றம், மறுவாழ்வு, கட்டுமானத்திற்கு முந்தைய பிற நடவடிக்கைகளுக்கான ₹1 கோடி அடங்கும்.
- இந்தச் சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
- சுரங்கப்பாதையின் மேற்குப்பகுதி நுழைவாயில் (சிறீ நகருக்கு அருகில்) ககங்கீருக்குப் பிறகு ரெசின் லா கிராமத்தில் (34°17′43″N 75°11′49″E / 34.295291°N 75.197063°E) கிழக்குப் பகுதி ஷேத்காரி கிராமத்தில் (34°18′20″N 75°15′41″E / 34.305525°N 75.261309°E) அமைந்துள்ளது. இரண்டு நுழைவாயில்களுக்கு இடையில் ஆதிட்டில் காற்றோட்டச் சுரங்கப்பாதை உள்ளது.
- பலவீனமான இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு என்ஏடிஎம் சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

வளர்ச்சியும் கட்டுமான நிறுவனமும்
[தொகு]ஆரம்பத்தில், இசட்-மோர் சுரங்கப்பாதை என்பது 450 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டமாக, சிறீ நகர்-சோனாமார்க் சுரங்கப்பாதை லிமிடெட் என்ற உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் (ஐஎல் & எஃப்எஸ்) நிறுவனத்தால் வடிவமைப்பு, கட்டுதல், நிதி, இயக்குதல், பரிமாற்றம் முறையின் கீழ் பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.
முன்னதாக, இந்தத் திட்டம் உரிமையாளரும், கட்டுமான நிறுவனமான பி. ஆர். ஓ, வினால் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், இது இப்போது என். எச். ஐ. டி. சி. எல்-க்கு மாற்றப்பட்டுள்ளது.[3]
ஐடிஎன்எல் (ஐஎல் & எஃப்எஸ் குழும நிறுவனம்) ஈபிசி ஒப்பந்தக்காரராக நியமிக்கப்பட்டார். இது திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தக்காரராக ஆப்கோ-டைட்டனை (ஜாயின்ட் வென்ச்சர்) நியமித்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாகக் கட்டுமான ஒப்பந்தக்காரரால் சூலை 2018-இல் பணி நிறுத்தப்பட்டது.
திட்ட ஆணையம் (என். எச். ஐ. டி. சி. எல்) சிறீநகர் சோனாமார்க் சுரங்கப்பாதை லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தம்/ஒப்பந்தத்தை முன்கூட்டியே அறிவித்தது. மீதமுள்ள பணிகளை நிர்மாணிப்பதற்கான ஏலத்தைச் சூன் 2019-இல் மீண்டும் வெளியிட்டது. திருத்தப்பட்ட (நிலுவையிலுள்ள பணிகள்) மொத்தத் திட்டச் செலவு 2,378 கோடி ரூபாய் (340 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். குறித்த பணி குறித்த திகதியில் முதல் 42 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஆகத்து 2019-இல், பன்னாட்டு ஏல நடைமுறையில் மிகக் குறைந்த ஏலக்காரராக ஆப்கோ உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு திசம்பர் 2019-இல், திட்ட ஆணையம் பணிக்கான ஆணைக் கடிதத்தை வழங்கியது..
நிலை புதுப்பிப்புகள்
[தொகு]- அக்டோபர் 2012: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி. பி. ஜோசி, சம்மு காசுமீர், முதலமைச்சர் உமர் அப்துல்லா, இராகுல் காந்தி ஆகியோர் இணைந்து இசட் மோர் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினர்.
- மே 2015: கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
- சூலை 2018: 22% வேலை முடிந்தது,
- அக்டோபர் 2018: "நிதி நெருக்கடியை" கருத்தில் கொண்டு ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழுமத்தின் குழுவை அரசாங்கம் மாற்றியது.
- மார்ச் 2019: ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டது
- சூன் 2019: எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்காக ஒரு புதிய ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுப்பதற்காக வருடாந்திர அடிப்படையில் ஏலங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியது. திருத்தப்பட்ட மொத்தத் திட்டச் செலவு (மீதமுள்ள பணிகளுக்கு) ₹ 2,378 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஆகத்து 2019: ஆப்கோ இன்ப்ராடெக் ₹ 2,378 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றது. 3 ஆண்டுகளில் சுரங்கப்பாதை கட்டப்படும் இலக்கு 2023 திசம்பர்க்குள் நிறைவடையும்.[4]
- சூலை 2020: புதிய ஒப்பந்ததாரர் ஆப்கோ இன்ப்ராடெக் மீண்டும் பணியினைத் தொடங்கியது.[5] சுரங்கப்பாதையின் இரண்டு முனைகளும் சூன் 2021 இறுதிக்குள் முடிந்துவிட்டன.[6]
- கட்டுமானத்தை ஆய்வு செய்த பின்னர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நவம்பர் 2021க்குள் சுரங்கப்பாதை கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்காக (இராணுவம் மற்றும் அவசரகால சேவைகளுக்காக) ஓரளவு திறக்கப்படும் என்று அறிவித்தார்.[7]
- 10 ஏப்ரல் 2023: அமைச்சர் நிதின் கட்கரி, சம்மு காசுமீர் துணைநிலை ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரங்கப்பாதையை ஆய்வு செய்தனர். 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த சுரங்கப்பாதையினைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். இசட் மோர்க் சுரங்கப்பாதை சோனாமார்க் சுற்றுலா நகரத்திற்கு அனைத்துக் காலங்களிலும் இணைப்பையும் வழங்கும்.[2]
- 13 சனவரி 2025: பிரதமர் நரேந்திர மோடி சுரங்கப்பாதையினைத் திறந்து வைத்த பின்னர், போக்குவரத்து சுரங்கப்பாதையில் செயல்படத் தொடங்கியது.[8]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gadkari to inaugurate 6.5 km Z-Morh tunnel today". www.risingkashmir.com. Rising Kashmir. 2023-04-10. Archived from the original on 2023-04-10.
- ↑ 2.0 2.1 "Press Release: Press Information Bureau".
- ↑ "Z-Morh tunnel unlikely to meet 2020 deadline". 21 April 2017. Archived from the original on 21 April 2017.
- ↑ "Concession Agreement signed for construction of Z-Morh tunnel in J&K". pib.gov.in.
- ↑ "Work resumes on Z-Morh tunnel on Srinagar-Leh road after a year". www.thepublish.in.
- ↑ "Strategic Z-Morh tunnel in Kashmir to be completed by Jun 2021: Official". 20 July 2020. Archived from the original on 22 April 2021. Retrieved 22 April 2021.
- ↑ "6.5-km Z-Morh Tunnel is set for early completion; will link Sonmarg, Srinagar all year - The Financial Express". www.financialexpress.com. 2021-09-28. Retrieved 2021-09-29.
- ↑ "India’s Modi inaugurates a strategic tunnel in disputed Kashmir". https://apnews.com/article/india-kashmir-modi-tunnel-ladakh-5d84f263b526263213c7edb9a1535bc9.
