சோன்புரி மாகாணம்
சோன்புரி மாகாணம்
Chonburi Province ชลบุรี | |
|---|---|
பட்டாயா வானுயரக் கட்டிடங்களின் காட்சி, சத்தியத்தின் காப்பகம், கோ சிச்சாங்கின் பிரா சுதாதுத் அரண்மனை | |
| குறிக்கோளுரை: அழகிய கடல்கள். சுவையான 'காவ் லாம்'. இனிப்பான கரும்பு. நேர்த்தியான நெசவு. எருமைப் பந்தயத் திருவிழா. ทะเลงาม ข้าวหลามอร่อย อ้อยหวาน จักสานดี ประเพณีวิ่งควาย | |
சோன்புரி தாய்லாந்து | |
| ஆள்கூறுகள்: 13°13′N 101°11′E / 13.217°N 101.183°E | |
| நாடு | |
| மாகாணம் | சோன்புரி மாகாணம் |
| நிலப்பகுதி | கிழக்கு தாய்லாந்து |
| தலைநகரம் | சோன்புரி |
| பெரிய நகரம் | சிறீ ராசா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 4,508 km2 (1,741 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 47-ஆவது |
| ஏற்றம் | 50 m (160 ft) |
| மக்கள்தொகை (2024)[2] | |
| • மொத்தம் | |
| • தரவரிசை | 6-ஆவது |
| • அடர்த்தி | 363/km2 (940/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 10-ஆவது |
| மனிதச் சாதனை குறியீடு[3] | |
| • HAI (2022) | 0.6896 1-ஆவது |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி[4] | |
| • மொத்தம் | ฿976 பில்லியன் (US$33 பில்லியன்) (2019) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| அஞ்சல் குறியீடு | 20xxx |
| தொலைபேசி | 038 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | TH-20 |
| வாகனப் பதிவு | เชียงใหม่ |
| இணையதளம் | chonburi chon |
சோன்புரி மாகாணம் (ஆங்கிலம்: Chonburi Province; தாய்: ชลบุรี) என்பது தாய்லாந்தின் 77 மாகாணங்களில் (சாங்வாட் Changwat) ஒன்றாகும். கிழக்கு தாய்லாந்தில்[5] அமைந்துள்ள இந்த மாகாணத்தின் தலைநகரமும் சோன்புரி என்றே பெயரிடப்பட்டு உள்ளது. இதன் அண்டை மாகாணங்களாக சச்சோங்சா, சந்தாபுரி மற்றும் ராயோங் ஆகியவை அமைந்துள்ளன.
அதே வேளையில் இந்த மாகாணத்தின் மேற்கில் பேங்காக் வளைகுடா (Bay of Bangkok) அமைந்துள்ளது. தாய்லாந்தின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயா, நாட்டின் முதன்மைச் கடல் துறைமுகமான லேம் சாபாங் (Laem Chabang) துறைமுகம் ஆகியவை சோன்புரி மாகாணத்தில் உள்ளன. இதன் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து சுமார் 1.7 மில்லியனாக உள்ளது. இதில் பெரும் பகுதியினர் தற்காலிகமாக வசிப்பவர்கள் அல்லது பதிவு செய்யப்படாத பட்டியலில் உள்ளவர்கள் ஆவர். 31 திசம்பர் 2024 நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மக்கள் தொகை 1.635 மில்லியனாக இருந்தது.[2]
இந்த மாகாணத்தில் மக்கள் குடியேற்றம் புதிய கற்காலம் முதலே இருந்துள்ளது. துவாரவதி காலத்தைச் சேர்ந்த முயேங் பிரா ரொட் மற்றும் முயேங் சிறீ பாலோ ஆகிய இரு நகரங்கள் பாங் பகொங் ஆற்றின் கயவாய்க்கு அருகில் அமைந்திருந்தன. மேலும் இக்கடற்கரைக்கு அப்பால் செப்புக் கட்டிகளை ஏற்றிச் சென்ற கப்பல் சிதைவுகளும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. கோ சிசாங் பகுதி 1892-ஆம் ஆண்டிலிருந்து அரச தங்குமிடமாகப் பயன்பட்டது. 2012-ஆம் ஆண்டில் இந்த மாகாணத்திற்கு சுமார் ஒன்பது மில்லியன் பார்வையாளர்கள் வந்து சென்றதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெயரியல்
[தொகு]சோன் (Chon - ชล) என்ற தாய் மொழிச் சொல் சமசுகிருதச் சொல்லான ஜலம் (जल - நீர்) என்பதில் இருந்தும்; புரி (Buri - บุรี) என்ற சொல் சமசுகிருதச் சொல்லான புரி (पुरी - நகரம்) என்பதில் இருந்தும் தோன்றியவை ஆகும். எனவே, இந்த மாகாணத்தின் பெயர் நீரின் நகரம் என்று பொருள்படுகிறது.
இந்த மாகாணத்திற்கான உள்ளூர்ச் சீனப் பெயர் வான்-புட்-சோய் (萬佛歲 - Bān-pu̍t-sòe) ஆகும். இது முவாங் சான்புரி மாவட்டத்தின் முந்தைய பெயரான பாங் பிளா சோய் (Bang Pla Soi - บางปลาสร้อย) என்பதன் மொழியாக்க வடிவமாகும். இப்பெயர் இன்றும் அம்மாவட்டத்தின் ஒரு துணை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
வரலாறு
[தொகு]துவாரவதி 600–1000
கெமர் பேரரசு 802–1052
லாவோ இராச்சியம் 1052–1351
அயூத்தியா இராச்சியம் 1351–1767
தோன்புரி இராச்சியம் 1767–1782
சயாமிய இராச்சியம் 1782–1932
தாய்லாந்து இராச்சியம் 1932–தற்போது

இந்த மாகாணத்தில் மனிதக் குடியேற்றம் கற்காலம் வரை பழைமையானது. அக்காலத்தின் தொடக்க கால குடியேறிகள், தற்போதைய பான் தாங் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்தாங் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.[6]
துவாரவதி காலத்தில், இன்றைய பனத் நிகோம் மாவட்டத்தில் உள்ள பாங் பகோங் ஆற்றின் (Bang Pakong River) கயவாய்க்கு அருகில் முவாங் பிரா ரோட் (Mueang Phra Rot) என்ற நகரம் நிறுவப்பட்டது. இந்நகரம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு, அகழியால் சூழப்பட்டு இருந்தது.
கி.பி. 600-கள் முதல் 1000-கள் வரை செழித்திருந்த முவாங் பிரா ரோட் நகரம், சீனாவின் தாங் அரசமரபு மற்றும் சொங் அரசமரபு ஆகிய அரசமரபுகளிடம் இருந்தும்; பாரசீகம் அல்லது கீழ் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் இருந்தும் வணிகப் பொருட்களை இறக்குமதி செய்தது. பிராந்திய மக்களின் தேவைகளை நிறைவு செய்வதிலும் வணிகப் பலன்களைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்தது.[7]
கோ சிசாங் தீவு
[தொகு]1892-ஆம் ஆண்டில், பெரும் நிலப்பரப்பிற்கு அப்பால் அமைந்துள்ள கோ சிசாங் தீவு, மன்னர் சுலலாங்கொர்ன் மற்றும் அவரின் மனைவி அரசி சாவோவபா போங்சிறீ (Saovabha Phongsri) ஆகியோரின் விடுமுறைத் தலமாக விளங்கியது. பின்னர், சுலலாங்கோர்ன் மன்னர் கோ சிசாங் தீவில் பிறந்த தன் மகனான இளவரசர் சுதாத்துத் தாராதிலோக் (Prince Chudadhuj Dharadilok) என்பவரின் நினைவாக பிரா சுதாத்துத் அரண்மனை (Phra Chuthathut Palace) என்ற பெயரில் ஒரு கோடைகால அரண்மனையைக் கட்டினார்.
1893-ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சு-சயாமிய நெருக்கடியின் போது, கோ சிசாங் தீவு பிரெஞ்சுப் படைகளால் கைப்பற்றப்பட்டது. அக்காலக் கட்டத்தில் சமுத் பிரகான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த இத்தீவு, பின்னர் 1943 சனவரி 1 அன்று சோன்புரி மாகாணத்தின் சிறீ ராசா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு துணை மாவட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, 1994 சூலை 4 அன்று கோ சிசாங் தீவு ஒரு தனி மாவட்டமாகத் தகுதி பெற்றது.[8]
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கடற்கரை நகரங்கள், சீனாவின் ஆங் சிலா மக்கள், தியோசூ மக்களின் வருகையை அதிகளவில் கண்டன.[9] வியட்நாம் போரின் காரணமாக, அமெரிக்க இராணுவ வீரர்கள் குறிப்பாக பட்டாயா பகுதிக்கு பெருமளவில் வரத் தொடங்கினர். இது, பிற்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சோன்புரி மாகாணம்[10] பெரும் புகழ்பெற்று விளங்குவதற்குக் காரணியாக அமைந்தது.
புவியியல்
[தொகு]இந்த மாகாணம் தாய்லாந்து வளைகுடாவின் வடமுனையான பேங்காக் வளைகுடாவில் அமைந்துள்ளது. காவோ கியாவ் மலைத்தொடர் இந்த மாகாணத்தின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு வரை நீண்டுள்ளது. வடக்குப் பகுதியின் சமவெளிகள் நீண்ட காலமாக வேளாண்மைக்குப் பயன்படுகின்றன.
சோன்புரி மற்றும் பட்டாயாவிற்கு இடையே அமைந்துள்ள லேம் சாபாங் துறைமுகம், தாய்லாந்தின் ஒரு சில ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகும். இந்த மாகாணத்தின் மொத்த வனப்பரப்பு 55 சதுர கிமீ; இது மாகாணப் பரப்பளவில் 12.2 விழுக்காடு[11] ஆகும்.
மக்கள்தொகை
[தொகு]சமயம்
[தொகு]2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி,[12] சோன்புரி மக்கள் தொகையில் ஏறக்குறைய 97.87 விழுக்காட்டினர் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து 1.56 விழுக்காட்டினர் இசுலாத்தையும், 0.60 விழுக்காட்டினர் கிறித்தவத்தையும் பின்பற்றுகின்றனர்.
| சமயம் | கணக்கெடுப்பு 2015[12] | % |
|---|---|---|
| பௌத்தம் | 1,256,081 | 97.87% |
| இசுலாம் | 20,000 | 1.56% |
| கிறிஸ்தவம் | 7,707 | 0.60% |
| வேறு சமயங்கள் | 800 | 0.06% |
மாகாண நிருவாகம்
[தொகு]
சோன்புரி மாகாணம் 11 மாவட்டங்களாக (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் மேலும் 92 துணை மாவட்டங்கள் (தம்போன்) 710 கிராமங்கள் (முபான்) என பிரிக்கப்பட்டுள்ளது.
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022
[தொகு]2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]
| நிலை | வகைப்பாடு |
| 1 - 13 | உயர்வு |
| 14 - 29 | சற்று உயர்வு |
| 30 - 45 | சராசரி |
| 46 - 61 | சற்று குறைவு |
| 62 - 77 | குறைவு |
| தாய்லாந்து மாகாணங்களின் மனிதச் சாதனை குறியீடு 2022 |
காட்சியகம்
[தொகு]சோன்புரி காட்சிப்படங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
- 1 2 "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025.
, year 2024, provincial level, Excel File, no.20
- 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024.
, page 22
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
- ↑ "About Chon Buri". Tourism Authority of Thailand (TAT). Retrieved 31 May 2015.
- ↑ "History". สำนักงานการท่องเที่ยวและกีฬาจังหวัดชลบุรี (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-09-10.
- ↑ "Mueang Phra Rot - Archeological site". RouteYou (in ஆங்கிலம்). Retrieved 2023-09-10.
- ↑ (in Thai)Royal Gazette 111 (21 ก): 32–35. 3 Jun 1994. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2537/A/021/32.PDF.
- ↑ "Ang Sila". www.tourismthailand.org (in ஆங்கிலம்). Retrieved 2023-09-11.
- ↑ "Pattaya history, Introduction to Pattaya, festivals and events". 2020-02-25. Archived from the original on 2020-02-25. Retrieved 2023-09-11.
- ↑ "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in Thai). 2019. Retrieved 6 April 2021.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 3 http://cbi.onab.go.th/index.php?option=com_content&view=article&id=327&Itemid=206 பரணிடப்பட்டது 2020-02-10 at the வந்தவழி இயந்திரம் Religion in Chonburi
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Chonburi Province சோன்புரி மாகாணம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிமூலத்தில் Chonburi சோன்புரி பற்றிய ஆக்கங்கள்
