சோன்பத்ரா படுகொலை
சோன்பத்ரா படுகொலை (Sonbhadra massacre) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உப்பா கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று நிகழ்ந்தது.[1] இப்படுகொலை சம்பவத்தில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர்.[2] ஆதிக்கம் செலுத்தும் குச்சார் சமூகத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் யாக்யாதத்து உரிமை கோரிய நிலத்தை காலி செய்ய கோண்டு பழங்குடியினர் மறுத்துவிட்டனர். தங்கள் நிலத்தை கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், யாக்யாதத்து குண்டர்களைக் கொண்டு வந்து கோண்டுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அடுத்த நாள், உத்தரபிரதேசத்தின் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. இந்த சம்பவம் சாதி அடிப்படையிலான கொலைகளின் எடுத்துக்காட்டாக தேசிய சீற்றத்தை விரைவாகப் பெற்றது.[3] மேலும் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்து தலைமையிலான பாரதிய சனதா கட்சி அரசாங்கத்தின் "காட்டு இராச்சியம்" வகை அரசாட்சிக்கு எடுத்துக்காட்டாக எதிர்க்கட்சிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னணி
[தொகு]படுகொலையின் மையத்தில் உள்ள நிலப் பிரச்சினை பல தசாப்தங்களுக்கு, கிட்டத்தட்ட சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முந்தையதாகும். இந்த காலகட்டத்தில், வட இந்தியாவின் பெரும்பகுதியைப் போலவே, பழங்குடி நிலங்களும் திருடப்பட்டு தொண்டு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டன. உப்பாவில், இந்த அறக்கட்டளை ஆதிகாரி சகாரி சமிதி, 1955 ஆம் ஆண்டில் நிலத்தை கையகப்படுத்தியது, இறுதியில் அது பிரபாத் குமார் மிசுரா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த நிலம் 2017 ஆம் ஆண்டில் யாக்யாதத்துக்கு விற்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rashid, Omar (17 July 2019). "9 killed, many injured as Uttar Pradesh village head, supporters open fire over land dispute". தி இந்து. https://www.thehindu.com/news/national/many-killed-in-gunfight-in-uttar-pradesh-village-over-land-dispute/article28517147.ece. பார்த்த நாள்: 20 July 2019.
- ↑ "Sonbhadra massacre death toll rises to 11, critically injured tribal dies in hospital". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-01. Retrieved 2022-02-07.
- ↑ Press Trust of India (19 July 2019). "Sonbhadra killings: SC/ST panel orders invocation of NSA". தி இந்து. https://www.thehindu.com/news/national/other-states/sonbhadra-killings-scst-panel-orders-invocation-of-nsa/article28565884.ece. பார்த்த நாள்: 20 July 2019.
- ↑ Trivedi, Divya (8 August 2019). "The Sonbhadra massacre". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2020-10-22.