சோனி வேகஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனி வேகஸ்
உருவாக்குனர் VEGAS Creative Software
பிந்தைய பதிப்பு 17.0 Build 284 / 5 ஆகத்து 2019; 16 மாதங்கள் முன்னர் (2019-08-05)
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோசு
வகை Video Editing Software
அனுமதி Proprietary
இணையத்தளம் Vegas Creative Software

சோனி வேகஸ் (Sony Vegas) அல்லது வேகஸ் புறோ (Vegas Pro) என்பது காணொளி/நிகழ்பட தொகுப்பு மென்பொருள் ஆகும். இதனை முதன் முதலில் சோனிக் பௌண்றி (Sonic Foundry) நிறுவனம் வெளியிட்டது. 2003ம் ஆண்டு சோனிக் பௌண்றி நிறுவனமானது சோனி கிரியேட்டிவ் சொப்ட்வேயர் (Sony Creative Software) நிறுவனத்தினால் உள்வாங்கப்பட்டு சோனி வேகஸ் என வெளியிடப்பட்டது. பின்னர் மே 2016 சோனி தனது வேகஸ் உட்பட்ட பெரும்பான்மையான கிரியேட்டிவ் சொப்ட்வேயர் தயாரிப்புக்களை மஜிக்ஸ் (Magix) நிறுவனத்திற்கு விற்றதாக அறிவித்தது. அதன் பின்னரனா வேகஸ் மேம்படுத்தல்கள் மற்றும் ஆதரவு என்பன மஜிக்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.


ஆரம்பத்தில் ஒலி தொகுப்பு மென்பொருளாக உருவாக்கப்பட்ட இது தனது 2ம் பதிப்பிலிருந்து காணொளி தொகுப்பு மென்பொருளாக பரிணாமம் எடுத்தது. அதன் பின்னர் பல புது புது அம்சங்களுடன் வெளியிடப்பட்டது. வேகஸ் புறோ இன் சமீபத்தைய நிலையான பதிப்பு வேகஸ் புறோ 17.0 ஆகும். இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்கு தளத்திற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும்.

சிறப்பம்சங்கள்[தொகு]

இதில் 4K ஆதரவு, 5.1 ஒலி ஆதரவு, முப்பரிமான (3D) நிகழ்படத்தொகுப்பு, RED கமெரா ஆதரவு, மோஷன் ட்ரகிங், 360° ஆதரவு மற்றும் HDR ஆதரவு என பல நிகழ்ப்பட தொகுப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_வேகஸ்&oldid=2897736" இருந்து மீள்விக்கப்பட்டது