உள்ளடக்கத்துக்குச் செல்

சோனி லிவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோனி லிவ் (SonyLIV) என்பது சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு இந்தியா (கல்வர் மேக்ஸ் என்டர்டெயின்மென்ட்) நிறுவனத்திற்குச்[1] இந்நிறுவனமே அலைப்பேசி வழியே நேரலை ஒலிப்பரப்பினை இந்தியவில் முதன்முதலில் அறிமுகம் செய்தது. (2014 FIFA World Cup)[2] சொந்தமான இந்திய ஓவர்-தி-டாப் (OTT) நிகழ்படச் சேவை தளமாகும்.[3] 2013-ஆம் ஆண்டு சனவரி 23 அன்று தொடங்கப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட மேலதிக ஊடக சேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[4].

உள்ளடக்கம்

[தொகு]

இந்தத் தளம் சோனி குழுமத்தின் தொலைக்காட்சித் தொடர்கள், 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், 40,000 மணிநேரத்திற்கும் மேலான நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. குறிப்பாக துடுப்பாட்டம், கால்பந்து, மேற்கத்திய மல்யுத்தம் (WWE) போன்ற விளையாட்டு நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதில் இது முன்னணியில் உள்ளது. மேலும், லயன்ஸ்கேட் (Lionsgate) போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஆங்கிலத் திரைப்படங்களையும் வழங்குகிறது.

வளர்ச்சி

[தொகு]

2020-ஆம் ஆண்டு சூன் மாதம் இந்தத் தளம் புதிய வடிவமைப்புடன் (revamp) புதுப்பிக்கப்பட்டது[5] இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் சோனி லிவ் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. 'ஸ்கேம் 1992', 'மகாராணி' போன்ற புகழ்பெற்ற அசல் தொடர்கள் இதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, இது சுமார் 32.7 மில்லியன் கட்டணச் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Multiscreen Media Launches Liv Sports". The Hindu Business Line. 2 June 2014. Archived from the original on 2 June 2014. Retrieved 2 June 2014.
  2. "2018 FIFA World Cup Russia Live Online Streaming Available Through Sony LIV Application". 2018-02-14 இம் மூலத்தில் இருந்து 18 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181218145643/https://www.indiantvinfo.com/2018-fifa-world-cup-india-telecast-rights/. 
  3. Laghate, Gaurav (2013). "Sony Launches Video on Demand". Business Standard India இம் மூலத்தில் இருந்து 14 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210614090329/https://www.business-standard.com/article/pti-stories/sony-launches-digital-entertainment-platform-sony-liv-113012200570_1.html. 
  4. [[1](https://www.google.com/search?q=https://www.business-standard.com/article/companies/sony-launches-video-on-demand-113012200051_1.html) "Sony launches video-on-demand"]. Business Standard. 2013-01-22. [2](https://www.google.com/search?q=https://www.business-standard.com/article/companies/sony-launches-video-on-demand-113012200051_1.html). 
  5. "SonyLIV". Sonyliv.com. Archived from the original on 6 October 2021. Retrieved 22 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_லிவ்&oldid=4470087" இலிருந்து மீள்விக்கப்பட்டது