சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது இந்தியாவின் மும்பை, மகாராட்டிரத்தில்சோனி நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு இசைப் பதிவு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1997ல் செயல்பாட்டைத் தொடங்கியது. இது 100% வெளிநாட்டு உரிமையாளர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் பதிவு நிறுவனமாகும். சோனி ஒரு சப்பானிய நிறுவனமாக இருக்கிறது. டிசம்பர் 2013 முதல் மார்ச் 2020 வரை, வார்னர் மியூசிக் இந்தியா பிரிவு உருவாக்கப்படும் வரை, இந்நிறுவனம் இந்திய மற்றும் தெற்காசிய சந்தைக்கான வார்னர் மியூசிக் குரூப் வெளியீடுகளை விநியோகித்து வந்தது.[1]
சோனி மியூசிக் சவுத், சோனி மியூசிக் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. இது தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் சுயாதீன இசைத்தொகுப்புகளுக்காக குறிப்பாக உருவாக்கப்பட்டது. அவர்கள் தற்போது சென்னையில் இருந்து செயல்படுகிறார்கள்.