உள்ளடக்கத்துக்குச் செல்

சோனியா சிர்சாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியா சிர்சாத்
2025ஆம் ஆண்டில் சிர்சாத்
பிறப்பு1980
போண்டா, கோவா (மாநிலம்), இந்தியா
பணி
  • பாடகி
  • பேராசிரியர்
விருதுகள்யுவா சுருஜன் புரஸ்கார்(2011)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்பாடோ
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்2003–தற்போது

சோனியா சிர்சாத் (Sonia Shirsat பிறப்பு: 1980) இந்தியப் ஃபாடோ பாடகி ஆவார்.[1] இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக கோவா மாநிலத்தில் நடைபெறும் பண்பாட்டு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவர் 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். கோவாவில் பல்வேறு இடங்களில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்தி, ஃபாடோ இசையைப் பரப்புவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]
2009ஆம் ஆண்டில் சோனியா சிர்சாத்

தொழில்முறைப் பாடகியாக மாறுவதற்கு முன்பு, சிர்சாத் சட்ட விரிவுரையாளராகப் பணியாற்றினார். பாடகராக அறிமுகமாகும் முன்னரே, பேச்சுத் திறனுக்காக பன்னாட்டு விருதைப் பெற்றிருந்தார்.

இவர் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் பொழுதுபோக்காகப் பாடத் தொடங்கிய இவர், 1999ஆம் ஆண்டு முதல் தொழில்முறைப் பாடகியாக செயல்பட்டு வருகிறார். இவரது தாயார் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர், தந்தை இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

ஃபாடோ இசைப் பயணம்

[தொகு]

இந்தியாவில் ஃபாடோ இசையில் சிறந்து விளங்கும் மிகச் சில கலைஞர்களில் சிர்சாத் ஒருவராவார். 1820-களில் அல்லது அதற்கு முன்னரே போர்த்துகல் நாட்டில் தோன்றிய இவ்விசை வடிவை, சில ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் கித்தார் பயிற்சி அளித்த போர்த்துகீசிய இசைக்கலைஞர் அந்தோனி சைனோ தமக்கு அறிமுகப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். அவர் நடத்திய பயிற்சிப் பட்டறையின் நிறைவில் ஃபாடோ பாடலைப் பாடுவதற்காக ஒருவரைத் தேர்வு செய்தபோது, சிர்சாத்தின் குரல் அதற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. அந்த நிகழ்வே அவரது ஃபாடோ இசைப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

2016, இவர் கோவா (மாநிலம்), தமன், பெங்களூர், மும்பை, தில்லி, கொல்கத்தா, லக்சம்பர்க், மக்காவு, குவைத்து, பிரான்சு, சிங்கப்பூர், ஹவாய், நேபாளம், கனடா, இலண்டன், துபாய், மஸ்கத், லிஸ்பன் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நகரங்களிலும் நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • 2016ஆம் ஆண்டு கோவா தியாதர் அகாதமி வழங்கிய சிறந்த பெண் பாடகிக்கான விருது.[2]
  • 2016ஆம் ஆண்டு பாரம்பரிய இசைப் பிரிவில் சங்கீத நாடக அகாதமி வழங்கிய உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாடோ பாடகி". inktalks. Retrieved சூன் 26, 2026.
  2. Achrekar, Pratima (27 February 2013). "It's all about memories: Sonia Shirsat". The Times of India. Retrieved 13 September 2016.
  3. D'Cruz, Dolcy (6 Dec 2017). "Crowning glory for the Fadista of Goa". O Heraldo. https://www.heraldgoa.in/Cafe/Crowning-glory-for-the-Fadista-of-Goa/123596.
  4. "Sangeet Natak Akademi". 26 May 2017. http://sangeetnatak.gov.in/uploads/2017-18/PressReleaseUBYP2016.pdf.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_சிர்சாத்&oldid=4580935" இலிருந்து மீள்விக்கப்பட்டது