சோனியா சாகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியா சாகால்
Sonia Chahal
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்புநிமிரி கிராமம், பிவானி மாவட்டம், அரியானா,இந்தியா
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
எடை வகுப்புஇறகு எடை (57 கி.கி)
பதக்கத் தகவல்கள்
மகளிர் குத்துச்சண்டை போட்டி
நாடு  இந்தியா- வெள்ளிப் பதக்கம்
உலகக் குத்துச்சண்டை போட்டி

சோனியா சாகால் (Sonia Chahal) ஓர் இந்திய தொழில்சாரா குத்துச்சண்டை வீரர் ஆவார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் கோப்பை போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிறப்பும் தொடக்க்காலமும்[தொகு]

அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்திலுள்ள [1] நிம்ரி கிராமத்தில் சோனியா சாகால் பிறந்தார். கவிதா சாகலிடமிருந்து பெற்ற உத்வேகம் காரணமாக 2011 ஆம் ஆண்டில் தனது குத்துச்சண்டை வாழ்வை இவர் தொடங்கினார். பிகானி குத்துச்சண்டைக் கழகத்தில் பயிற்சியாளர் சக்தீசு சிங்கிடம் பெற்ற ஆறு மாத கால பயிற்சிக்குப் பின்னர், அதே ஆண்டு பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான தேசிய சாம்பியன் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்த மூன்று ஆண்டுகள் இவர் பிகானி குத்துச் சண்டை கழகத்திலேயே பயிற்சியைத் தொடர்ந்தார்[2][3].

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் கோப்பை போட்டியில் 54-57 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்கேற்ற சேகால் செருமனியைச் சேர்ந்த ஓர்நெல்லா வாக்னரிடம் தோல்வியடைந்தார் என்பதால் இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Paul, Abhishek (21 November 2018). "Women’s Boxing World Championships: Sonia Chahal, Simranjit Kaur aim to punch for the future". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 24 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181124123232/https://www.hindustantimes.com/other-sports/women-s-boxing-world-championships-sonia-chahal-simranjit-kaur-aim-to-punch-for-the-future/story-yXhWT1Dz8gLHVvR3XB7hlN.html. பார்த்த நாள்: 24 November 2018. 
  2. Padmadeo, Vinayak (18 November 2018). "‘Other’ Sonia packs a punch". The Tribune (Chandigarh). Tribune News Service இம் மூலத்தில் இருந்து 24 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181124123234/https://www.tribuneindia.com/news/sport/-other-sonia-packs-a-punch/685081.html. பார்த்த நாள்: 24 November 2018. 
  3. "World Boxing Championships: Sonia enters pre-quarterfinals". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Press Trust of India (PTI). 17 November 2018 இம் மூலத்தில் இருந்து 24 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181124123353/https://timesofindia.indiatimes.com/sports/boxing/world-boxing-championships-sonia-enters-pre-quarterfinals/articleshow/66668392.cms. பார்த்த நாள்: 24 November 2018. 
  4. "Women’s World Boxing Championship: Sonia Chahal settles for silver in 57kg category". Hindustan Times. 24 November 2018 இம் மூலத்தில் இருந்து 24 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181124124220/https://www.hindustantimes.com/other-sports/women-s-world-boxing-championship-sonia-chahal-settles-for-silver-in-57kg-category/story-uPM7OXDxPgDgudl2w0lhOK.html. பார்த்த நாள்: 24 November 2018. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_சாகால்&oldid=3418784" இலிருந்து மீள்விக்கப்பட்டது