சோனாலி முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோனாலி முகர்ஜி (Sonali Mukherjee) என்பவர் இந்தியாவிலுள்ள தன்பாத்தை சேர்ந்த அமிலத் தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி பெண். 2003ஆம் ஆண்டு 18 வயதில் அமிலத் தாங்குதலால் இவரது முகம் நிரந்தரமாகச் சிதைந்தது.[1][2] இவரது குடும்பத்தினர் தங்களுடைய சேமிப்பு முழுவதையும் இவரது சிகிச்சைக்காகச் செலவிட்டனர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

முகர்ஜி தன்பாத்தில் பிறந்தார். இவர் ஒரு தேசிய மாணவர் படையினைச் சேர்ந்தவர். இந்தத் தாக்குதல் காரணமாக இவர் இந்த அமைப்பிலிருந்து விலக வேண்டியிருந்தது. 

சம்பவம்[தொகு]

2003ஆம் ஆண்டில், இந்த சம்பவத்திற்குக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மூன்று தாக்குதல்காரர்கள் - தபசு மித்ரா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சஞ்சய் பாசுவான் மற்றும் பிரம்மதேவ் அஜ்ரா - முகர்ஜி ஒரு கமாண்டி (திமிர்பிடித்த) என்றும், அவருக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் கூறினார். இதனையறிந்த முகர்ஜி தந்தை, மூன்று பேரின் குடும்பத்தினரிடம் புகார் அளித்தார். ஏப்ரல் 22 அன்று, முகரிஜி தனது வீட்டின் கூரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார். எரிந்த முகம் மற்றும் பிற கடுமையான காயங்களுடன் தனது காயமடைந்த சகோதரியுடன் சிகிச்சைபெற்றார்.[3]

பின்விளைவு[தொகு]

குற்றவாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது பிணை வழங்கப்பட்டது. முகர்ஜியின் குடும்பத்தினர் சார்க்கண்ட்டு முதல்வர், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நீதிமன்றத்தையும் பல்வேறு அதிகாரிகளையும் நீதிக்காக அணுகினர். ஆனால் "ஆஸ்வாசன் (உறுதிகள்) ... வேறொன்றுமில்லை" என வருத்தத்தினை பெற்றோர்கள் தெரிவித்தனர்.[3]

சோனாலியின் தந்தை சந்திதாசு முகர்ஜி பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். . . எதுவும் நடக்கவில்லை. அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர், ஆனால் விரைவில் விடுவிக்கப்பட்டனர். இப்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்வாகக் கழிப்பதில் மும்முரமாக உள்ளனர். அமில வீச்சுக்காரர்களுக்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். இல்லையெனில், நம்மிடம் இன்னும் பல சோனாலிகள் இருப்பார்கள்."[4]

பிப்பரவரி 2014-ல், சார்க்கண்டு மாநில அரசு பொகாரோ துணை ஆணையர் அலுவலகத்தின் நலன்புரி பிரிவில் நிலை III எழுத்தராக சோனாலி முகர்ஜியை நியமித்தது.

நீங்களும் கோடிசுவராக ஆகலாம் நிகழ்ச்சியில்[தொகு]

முகர்ஜி கருணைக்கொலைக்கு முறையிட்டபோது உலக கவனத்தை ஈர்த்தார். அமிதாப் பச்சனை கவுன் பனேகா க்ரோர்பதி,[5] 6 நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்ததன் அடிப்படையில் 2012-ல் அமிதாப் பச்சனை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் லாரா தத்தாவுடன் சேர்ந்து, சோனாலி விளையாடி 2.5 மில்லியன் (US$31,000) வென்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாலி_முகர்ஜி&oldid=3675135" இருந்து மீள்விக்கப்பட்டது