சோனாலி குல்கர்னி (பெண் தொழிலதிபர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  சோனாலி குல்கர்னி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்தவரும், மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தியின் கொள்ளுபேத்தியுமாவார். இவர், ஜப்பானிய தொழில்துறை ரோபோக்கள் தயாரிப்பாளரான பானுக் (FANUC) இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாவார், இந்நிறுவனம் ஜப்பானின் பானுக் கார்ப் (Fanuc Corp) எனப்படும் பெருநிறுவனத்தின் இந்திய கிளையாகும். [1] சோனாலி, கணினி எண் கட்டுப்பாடு(CNC), ரோபோக்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அவற்றின் அமைப்பு உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான விற்பனை, சந்தைப்படுத்தல், ஒருங்கிணைப்பு மற்றும் வணிக மேம்பாடு ஆகியவற்றை நேரடியாக பொறுப்பேற்று மேற்பார்வையிட்டு வருகிறார். [2] [3]

சோனாலி, 2014 ஆம் ஆண்டில் உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரவி வெங்கடேசனை, சோனாலி மணந்துள்ளார். மேலும் இவர், சுமித்ரா காந்தி குல்கர்னியின் மகளும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூர்பா காந்தியின் கொள்ளுபேத்தியுமாவார்.

கல்வி[தொகு]

சோனாலி, ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ளார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு போன்றவைகளில் ஈடுபாடு மிகுந்த இவர், இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்திலும், அமெரிக்க சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர்கள் கழகத்திலும் உறுப்பினராக உள்ளார். [5]

தொழில்[தொகு]

சோனாலி, ஆரம்பத்தில் அமெரிக்காவில் நிதி ஆய்வாளராகப் பணிபுரிந்தார், [1] [5] 2006 ஆம் ஆண்டிலிருந்து பானூக் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]