உள்ளடக்கத்துக்குச் செல்

சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 26°53′39″N 92°20′45″E / 26.89417°N 92.34583°E / 26.89417; 92.34583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம்
Sonai Rupai Wildlife Sanctuary
அசாமிய மொழி: সোনাই ৰূপাই অভয়াৰণ্য
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம் Sonai Rupai Wildlife Sanctuary
Map showing the location of சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம் Sonai Rupai Wildlife Sanctuary
சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயத்தின் இருப்பிடம். அசாம், இந்தியா
Map showing the location of சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம் Sonai Rupai Wildlife Sanctuary
Map showing the location of சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம் Sonai Rupai Wildlife Sanctuary
சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம் (இந்தியா)
அமைவிடம்அசாம், இந்தியா
அருகாமை நகரம்தேஜ்பூர்தேச்பூர்
ஆள்கூறுகள்26°53′39″N 92°20′45″E / 26.89417°N 92.34583°E / 26.89417; 92.34583
பரப்பளவு175 சதுரகிலோமீட்டர்
நிறுவப்பட்டது1998
நிருவாக அமைப்புஅசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை

சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம் (Sonai Rupai Wildlife Sanctuary) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் . இந்த வனவிலங்கு சரணாலயம் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் [1][2] இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி 1998 ஆம் ஆண்டு ஒரு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தேச்பூர் நகரத்திலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் குவகாத்தியில் இருந்து 193 கி.மீ. தொலைவிலும் சோனாய் ரூபாய் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. கபாரு, கெல்கெலி, சோனாய் மற்றும் ரூபாய் என்ற நான்கு ஆறுகள் சரணாலயத்தின் வழியாக பாய்கின்றன:[3]

பல்லுயிர் பெருக்கம்

[தொகு]

புலி, சிறிய பூனைகள், யானை, இந்தியக் காட்டெருது, காட்டுப்பன்றி, குள்ள காட்டுப் பன்றி, சதுப்பு மான் மற்றும் கேளையாடு போன்ற பாலூட்டிகள் இங்கு காணப்படுகின்றன.[4]

வெள்ளை இறக்கைகள் கொண்ட மர வாத்து, இருவாய்ச்சி , பெலிகன் எனப்படும் கூழைக்கடா மற்றும் பல்வேறு புலம்பெயர்ந்த பறவைகள் இச்சரணாலயத்தில் வாழ்கின்றன.

மலைப்பாம்பு, கண்ணாடி விரியன் போன்ற ஊர்வன விலங்குகள் சரணாலயத்தில் உள்ளன. .

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. enajori.com. "Sonai Rupai Wildlife Sanctuary". enajori.com. Archived from the original on 2013-07-03. Retrieved 2013-06-02.
  2. "Sonai Rupai Wildlife Sanctuary in Assam". Assamspider.com. 2011-10-31. Archived from the original on 2012-10-15. Retrieved 2013-06-02.
  3. "BirdLife Data Zone". datazone.birdlife.org. Retrieved 2021-07-02.
  4. Wahid Saleh. "Indiawijzer". Indiawijzer.nl. Retrieved 2013-06-02.

புற இணைப்புகள்

[தொகு]