சோனாதியா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோனாதியா தீவு (Sonadia Island) வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்தில் அமைந்துள்ள காக்சு பசார் கடற்கரையோரத்தில் சிறிது தொலைவில் உள்ள ஓரு தீவாகும். இத்தீவின் பரப்பளவு 9 சதுரகிலோமீட்டர் அல்லது 3.5 சதுர மைல் ஆகும்.

போக்குவரத்து[தொகு]

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள ஓர் ஆழ்கடல் துறைமுகமாக சொனாதியா தீவு கருதப்படுகிறது. இந்தியா, சீனா, மியான்மர் ஆகிய நாடுகளின் நிலம் சூழ் பகுதியாக இத்தீவு உருவாகியுள்ளது [1]. இரயில் பாதை இணைப்புகள் இன்னும் இத்தீவுக்கு அமைக்கப்படவில்லை என்றாலும் பின்வரும் அளவுகளில் இரயில் போக்குவரத்திற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

  • 1,676 மி.மீ (66 அங்குலம்) - வங்காளதேசம், இந்தியா
  • 1,000 மி.மீ (39 அங்குலம்) - வங்காளதேசம், இந்தியா, மியான்மர், தாய்லாந்து, இத்யாதி.
  • 1,435 மி.மீ (56 அங்குலம்) - சீனா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sonadia, Kutubdia channels selected for deep seaport". Archived from the original on 2017-04-21. பார்க்கப்பட்ட நாள் 2018-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாதியா_தீவு&oldid=3556336" இலிருந்து மீள்விக்கப்பட்டது