சோனல் சுக்லா
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
சோனல் சுக்லா | |
|---|---|
| பிறப்பு | 1941 வாரணாசி |
| இறப்பு | 2021 |
| பணி | பெண்ணியவாதி, எழுத்தாளர், சமூக சேவகர் |
சோனல் சுக்லா (Sonal Shukla 1941-2021) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதியும், ஆசிரியரும், எழுத்தாளரும், சமூக சேவகரும் ஆவார். இந்தியாவின் மும்பையில், பெண் அறிஞர்களுக்காக ஒரு நூலகத்தை நிறுவிய தனியார் அமைப்பான வாச்சா அறக்கட்டளையை நிறுவியதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். மதுரா பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான பெண்ணியப் போராட்டங்களில் முக்கிய உறுப்பினராகவும், 1980களில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான இந்தியாவின் சட்டங்களைச் சீர்திருத்துவதற்கான இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்திய பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மன்றத்தின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]சுக்லா 1941 ஆம் ஆண்டு, இந்தியாவின் வாரணாசியில் பிறந்தார். இவரின் தந்தை நினு மஜூம்தார் ஓர் இசைக்கலைஞரும், வானொலி தொகுப்பாளராருமாவார். அவர் இந்தியாவின் தேசிய ஒளிபரப்பான அகில இந்திய வானொலியின் விவித் பாரதி நிலையத்தை உருவாக்கினார். இவரின் தாயார் கௌமுதி முன்ஷி, ஒரு பாரம்பரியப் பாடகர் ஆவார்.[1] இவர் உடன்பிறந்தவர்கள் மீனா, ரஜுல் மற்றும் உதய் ஆகிய மூவரும் ஆவார்.[2] இவர் மருத்துவரான இமான்சூ சுக்லாவை மணந்தார். சுக்லா, 2021 இல் மாரடைப்பால் காலமானார்.[3]
வேலை
[தொகு]சுக்லா ஒரு ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், இலக்கியத்தில் முதுகலை (எம். ஏ.) மற்றும் எம். எட். ஒப்பீட்டுக் கல்வியில் [4] பட்டம் பெற்றவர். இவர் தனது ஆரம்பகால வாழ்க்கையில், மும்பையில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டு பூர்வீக மீனவ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டார். குடும்ப வன்முறையை எதிர்க்கும் வகையில், இவர் தனது சொந்த வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு குடும்ப வன்முறையிலிருந்து தப்பிய பெண்களுக்கான புகலிடமாக மாற்றினார்.[5][6]
சுக்லா 1970கள் மற்றும் 1980களில் பெண்கள் அமைப்புகளில் செயல் உறுப்பினராக இருந்தார். 1977 ஆம் ஆண்டில், இவர் சோசலிஸ்ட் மகளிர் குழுவை நிறுவினார், அது 'ஃபெமினிஸ்ட் நெட்வொர்க்' என்ற அச்சிடப்பட்ட செய்திமடலை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டது. 1979 ஆம் ஆண்டு மதுரா பாலியல் பலாத்கார வழக்கைத் தொடர்ந்து, இந்தச் செய்திமடலில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் பரவலான எதிர்ப்பை உண்டாக்கின, மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான இந்தியச் சட்டங்களைப் பற்றிய விமர்சனம் நான்கு சட்டப் பேராசிரியர்களால் எழுதப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் மதுரா பாலியல் பலாத்கார வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளைக் கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பான பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான மன்றத்தின் இணை நிறுவனராக இருந்தார், இவ்வமைப்பு பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான இந்தியச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என வெற்றிகரமாகப் பரப்புரை செய்தது.[2][7]
1987 ஆம் ஆண்டில், சுக்லா மும்பையில் வாச்சா அறக்கட்டளையை நிறுவினார், அது ஓர் தனியார் அமைப்பாகும். அது பெண்ணிய ஆராய்ச்சியை ஆதரிப்பதற்கும், பெண் மாணவர்களுக்கு தரவுகளை (அக்காலத்தில் இந்தியாவில் எளிதாகக் கிடைக்கப் பெறாத சர்வதேச வெளியீடுகள்) வழங்குவதற்கும் ஒரு நூலகத்தை நிறுவியது.[3] ஆரம்பத்தில் இவரது வீட்டிலிருந்த அறக்கட்டளை பின்னர் ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டது. அங்கு, சுக்லா நூலகத்தை ஒரு சுயாதீன நிறுவனமாக நிறுவினார். இந்த நூலகத்தில் 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன, மேலும் 1991 ஆம் ஆண்டில், இந்தியச் சுதந்திர இயக்கத்தில் பெண்களின் பங்கு குறித்த இசைத் தொகுப்புகள் மற்றும் ஆவணப்படங்களை வெளியிட்டது. அந்த நூலகம், இந்தியாவில் பெண்ணிய எழுத்து மற்றும் இலக்கியத்தின் காப்பகமாகவும், பெண்கள் பத்திரிகைகள் மற்றும் பெண்களின் பிற எழுத்துக்களைச் சேகரித்துச் செயல்படுகிறது.[7]
சுக்லா, வாச்சாவின் மூலம் பல புத்தகங்களையும், உரைகளையும் வெளியிட்டார், இது பால்மைப் படிவார்ப்புகள் தன்மைகளுக்குச் சவாலாக அமைந்தது. வாச்சாவுடன் சேர்ந்து, சுக்லா பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்காக இலவச பள்ளி வகுப்புகளையும் நடத்தினார்.[7] 1995 ஆம் ஆண்டில், சுக்லா மும்பையில் உள்ள நகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நிறுவன ஆதரவை வழங்கும் வகையில் வாச்சாவை விரிவுபடுத்தினார், மும்பையின் சேரிகளில் 15 மையங்களை உருவாக்கினார், அங்கு ஆங்கில மொழி பேச்சு, புகைப்படம் எடுத்தல் மற்றும் கணினிகள் உள்ளிட்ட திறன்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட்டன.[8] இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, சுக்லா வாச்சாவுடன் தன்னார்வலர்கள் குழுவை ஏற்பாடு செய்தார், இலவச உணவு மற்றும் மாதவிடாய் சுகாதார பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களைத் தேவைப்படும் குடும்பங்களுக்கு மும்பையில் வழங்கினார்.[9]
சுக்லா 1980 முதல் 2021ல் இறக்கும் வரை ஒரு குஜராத்தி செய்தித்தாளில் வாராந்திர கட்டுரையை வெளியிட்டார், அதில் இவர் உணவு முதல் இலக்கியம், அரசியல், பெண்ணிய கருத்துக்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுதினார்.[7][10] குஜராத்தி எழுத்தாளர் கோவர்தன்ராம் திரிபாதி பற்றிய இவரது சில எழுத்துக்கள் இந்திய இலக்கியம் குறித்த விரிவான ஆய்வுகளின் ஓர் பகுதியாக வெளியிடப்பட்டுள்ளன.[11][12] இவர் பெண்ணியத்தின் கண்ணோட்டத்தில் கற்பித்தல் மற்றும் கல்வி பற்றியும், ஆசிரியர் சங்கங்கள் பற்றியும், இந்தியாவில் நாட்டுப்புற இலக்கியத்தில் பெண்கள் மற்றும் குடும்பங்களின் சித்தரிப்பு பற்றியும் எழுதியுள்ளார்.[13]
2021 ஆம் ஆண்டில், இவர் ஃபிரெட்ரிக் எபர்ட் அறக்கட்டளையினால் ஒரு 'பாலினச் சின்னமாக' அங்கீகரிக்கப்பட்டார், மேலும் இவரது நினைவாக ஜோதி புன்வானி எழுதிய இவரது வாழ்க்கையைப் பற்றிய விளக்கப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டது.[14][15] இந்தியக் கவிஞரும் எழுத்தாளருமான இரவீந்திரநாத் தாகூர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் தனது படைப்புகளில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியதாக சுக்லா மேற்கோள் காட்டியுள்ளார்.[16]
வெளியீடுகள்
[தொகு]- (2008) சோனல் சுக்லா, 'பெண்ணிய பாடல்களில் குடும்பம்: நாட்டுப்புற இலக்கியத்துடன் ஒரு தொடர்ச்சி' ஜாய் தேஷ்முக்-ரானதீவ் பதிப்பில்., டெமொகரசி இன் த ஃபமிலி: இன்சைட்ஸ் ஃப்ரம் இந்தியா (SAGE வெளியீடுகள் ISBN பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-132-10004-2
- (2008) சோனல் சுக்லா, 'ஆசிரியர் சங்கத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்: ஒரு மகளிர் குழுவின் பங்கு' ஜாக்கி கிர்க் பதிப்பில்., விமன் டீச்சிங் இன் சவுத் எசியா (SAGE வெளியீடுகள் ISBN பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-132-10072-7
- (2010) சோனல் சுக்லா மற்றும் பிரத்ன்யா ஸ்வர்கோன்கர், 'தி அடோலசன்ட் கேர்ள்' விபூதி படேல், பதிப்பு., கேல்ஸ் அண்டு கேல்ஹுடுஸ் அட் த்ரெஸ்ஹொல்டு அஃப் யுத் அண்டு ஜென்டர்—எ வாச்சா இனிசியெடிவ் (தில்லி, தி வுமன் பிரஸ் ISBN பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-189-11027-6
- 2010 சோனல் சுக்லா மற்றும் நிஷ்சின்ட் ஹோரா, எக்ஸ்பிரியென்சிங் கேல்ஹுட்: ஸ்டொரீஸ் ப்ரம் பாஸ்டிஸ் இன் மும்பை (வாச்சா தொண்டு நிறுவனம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "At 93, 'Nightingale of Gujarat' passes away due to Covid". The Indian Express (in ஆங்கிலம்). 2020-10-14. Retrieved 2021-12-25.
- ↑ 2.0 2.1 "Sonal Shukla (1941–2021)" (in en). Economic and Political Weekly 56 (43): 7–8. 2015-06-05. https://www.epw.in/journal/2021/43/commentary/sonal-shukla-1941-2021.html.
- ↑ 3.0 3.1 "Sonal Shukla, noted feminist and educator, dies of cardiac arrest at 80". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-10. Retrieved 2021-12-25.
- ↑ Deshmukh-Ranadive, Joy (2008-03-11). Democracy in the Family: Insights from India (in ஆங்கிலம்). SAGE Publishing India. ISBN 978-93-5280-116-9.
- ↑ "Noted women's rights activist Sonal Shukla passes away". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-09-09. Retrieved 2021-12-25.
- ↑ "Noted women's rights activist Sonal Shukla dead" (in en-IN). 2021-09-10. https://www.thehindu.com/news/national/other-states/noted-womens-rights-activist-sonal-shukla-dead/article36394387.ece.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Sonal Shukla: a feminist who worked to empower girls from deprived communities". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-14. Retrieved 2021-12-25.
- ↑ Punwani, Jyoti (17 October 2013). "Girls will be girls here". @businessline (in ஆங்கிலம்). Retrieved 2021-12-25.
- ↑ "Mumbai: Over 1,500 girls help feed 820 families as part of NGO drive". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-10. Retrieved 2021-12-25.
- ↑ PUNWANI, JYOTI. "A Feminist Messiah Passes Into The Ages". Rediff (in ஆங்கிலம்). Retrieved 2021-12-25.
- ↑ MENON, PARVATHI (3 August 2001). "Of studies on women". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2021-12-25.
- ↑ Thorner, Alice; Raj, Maithreyi Krishna (2000). Ideals, Images, and Real Lives: Women in Literature and History (in ஆங்கிலம்). Orient Blackswan. ISBN 978-81-250-0843-9.
- ↑ Deshmukh-Ranadive, Joy (2008-03-11). Democracy in the Family: Insights from India (in ஆங்கிலம்). SAGE Publications India. ISBN 978-81-321-0004-1.
- ↑ "Noted women's rights activist Sonal Shukla passes away in Mumbai". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-09. Retrieved 2021-12-25.
- ↑ "An icon of the Women's movement in India and across the globe!". india.fes.de (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-25.
- ↑ Gunjal, Geeta (2021-10-24). "Sonal Shukla: Writer, Educator And Iconic Feminist | #IndianWomenInHistory". Feminism In India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2021-12-25.