சோனம் வாங்சூக்
சோனம் வாங்சூக் | |
|---|---|
2017ல் சோனம் வாங்சூக் | |
| பிறப்பு | 1 செப்டம்பர் 1966 அல்ச்சி, லே மாவட்டம், லாடக், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா |
| கல்வி | பி. டெக் (இயந்திரவியல்) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | சிறீநகர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் |
| பணி | பொறியாளர், கல்வியாளர் |
| அமைப்பு(கள்) | இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் |
| அறியப்படுவது | பனித்தூபி, புதிய நம்பிக்கை நடவடிக்கை, லடாக் மாநிலத் தகுதிக்கான போராட்டம் |
| பெற்றோர் |
|
| வாழ்க்கைத் துணை | கீதாஞ்சலி ஜெ. அங்மோ[1][2][3][4] |
| விருதுகள் | புதுப்பிக்க கட்டிடக்கலைக்கான உலகளாவிய விருது (2017)[5] பிரெட் எம். பக்கார்டு விருது (2016)[6] நிறுவனத்திற்கான ரோலக்ஸ் விருது (2016) ரியல் ஹிரோ விருது (2008) இலாப நோக்கற்ற அமைப்பிற்கான அசோகா விருது ரமோன் மக்சேசே விருது (2018) |
சோனம் வாங்சூக் (Sonam Wangchuk; பிறப்பு: 1 செப்டம்பர் 1966), இந்தியப் பொறியாளர், கல்வியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.[7][8][9][10][11][12] இவர் 1988ல் நிறுவப்பட்ட லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவன இயக்குநர் ஆவார்.[13]
1994 ஆம் ஆண்டில் சோனம் வாங்சூக் அரசுடன் இணைந்து லாடாக்கின் கிராமச் சமூகங்கள் மற்றும் பொதுச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக புதிய நம்பிக்கை நடவடிக்கை எனும் இயக்கத்தை தொடங்கி முக்கியப் பங்காற்றினார். நீரைச் சேமிக்கும் பொருட்டு பனி மலை போன்ற பனிக்கட்டி தூபிகளை நிறுவியதால், லடாக் பிரதேசத்தில் கோடைக்கால குடிநீர் வறட்சியை போக்கினார்.[14][15][16]
பிப்ரவரி 2021ல் சோனம் வாங்சூக் லடாக் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் தங்கும் கூடாரங்களில் குளிர்காலத்தில் வெப்பமூட்டுவதற்காக சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் நடமாடும் வெப்பமூட்டும் கருவிகளை நிறுவினார். இதனால் 50,000 இந்திய வீரர்கள் பயனடைந்தனர்.[17][18][19]
அரசியல்
[தொகு]2013ஆம் ஆண்டில் சோனம் வாங்சூக் தலைமையில் புதிய லடாக் மாணவர் இயக்கம் நிறுவப்பட்டது.[20] இவ்வமைப்பு புதுப்பிக்கதக்க கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கமாக கொண்டது.[21] சோனம் வாங்சூக் லாடக்கின் வளர்ச்சிக்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார்.[22]
சீனப் பொருட்களுக்கு தடை
[தொகு]சூன் 2020ல் நடைபெற்ற 2020–2021 இந்தியா–சீனா மோதல்களை முன்னிட்டு, சீனத் தயாரிப்பு பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு சோனம் வாங்சூக் கேட்டுக் கொண்டார்.[23]
மாநிலத் தகுதி கோரி போராட்டம்
[தொகு]லடாக் ஒன்றியப் பகுதிக்கு மாநிலத் தகுதி கோரியும் மற்றும் லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையின் இணைத்து மலை மாவட்ட தன்னாட்சி அந்தஸ்து கோரி, இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சோனம் வாங்சூக் 12 செப்டம்பர் 2025 முதல் இடைநில்லா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து இசட் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 2025 அன்று லே நகரத்தில் மாணவர்கள்-இளைஞர்கள் இந்திய அரசை எதிர்த்து போரட்டம் செய்தனர். போராட்டம் வன்முறையாக மாறி காவல்துறையினரின் வாகனங்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகங்களை தீவைத்து சூறையாடப்பட்டது.[24] 25 செப்டம்பர் 2025 அன்று இப்போராட்டத்தை தூண்டிவிட்டதாக இரண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் 50 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்தனர்.[25] மேலும் சோனம் வாங்சூக் லடாக் வன்முறை போராட்டத்திற்கு காரணம் எனக்கூறி 26 செப்டம்பர் 2025 அன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[26][27]
கைது & குற்றச்சாட்டுகள்
[தொகு]26 செப்டம்பர் 2025 அன்று சோனம் வாங்சூக் மீது லடாக் வன்முறையைத் தூண்டும் விதமாக பேச்சும், அவரது அமைப்பான இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (SECMOL) எனும் அரசு சாரா அமைப்பே காரணம் என இந்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியதுடன், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவரின் அமைப்பு வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது.[28][29][30]
சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சோனம் வாங்சுக் நிறுவிய இமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேடிவ்ஸ், லடாக் (Himalayan Institute of Alternatives (HIAL) நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதியுதவி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சோனம் வாங்சுக் 6 பிப்ரவரி 2025 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று வந்துள்ளார். இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.[31]
இதனையும் காண்க
[தொகு]- இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம்
- பனித்தூபி
- ஆறாம் அட்டவணை, இந்திய அரசியலமைப்பு
- இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Innovator, national asset: Anand Mahindra on meeting real life 'Phunsukh Wangdu' - BusinessToday". www.businesstoday.in. Retrieved 2025-08-02.
- ↑ "Modern education system has little room for curiosity, exploration: Sonam Wangchuk". www.newindianexpress.com. Retrieved 2025-08-02.
- ↑ "Redirecting..." indiapresentinfo.in. Retrieved 2025-08-02.
{{cite web}}: Cite uses generic title (help) - ↑ "Who Is Gitanjali J Angmo Wife Of Sonam Wangchuk, Biography, Age, Family, Children, Education And Religion - The SportsGrail". thesportsgrail.com. Retrieved 2025-08-02.
- ↑ Rana, Nikita (2 June 2017). "World Environment Day 2017: Sonam Wangchuk's ice stupas ensure there's water in Ladakh". Firstpost. http://www.firstpost.com/living/world-environment-day-2017-sonam-wangchuks-ice-stupas-ensure-theres-water-in-ladakh-3504143.html.
- ↑ "Packard Awardees". IUCN. 10 June 2020.
- ↑ "These 10 Innovators Are Changing the World, From Oceans to Eye Care". National Geographic. 25 November 2016 இம் மூலத்தில் இருந்து 16 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161116154957/http://news.nationalgeographic.com/2016/11/innovators-change-world-oceans-eye-care-rolex-laureates/.
- ↑ Khattar, Sakshi (26 July 2008). "Teach India: Think local, think Ladakhi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/Teach-India-Think-local-think-Ladakhi/articleshow/3281987.cms.
- ↑ "3 Idiots pato के असली फुनसुक वांगडू, फेल छात्र भी इनसे पढ़कर बनते हैं वैज्ञानिक" (in hi). Daily Bhaskar. 30 May 2015. https://www.bhaskar.com/news/jk-omc-jam-success-story-of-sonam-wangchuk-5007736-pho.html.
- ↑ "Meet the real life 'Phunsukh Wangdu' from '3 Idiots'". தி எகனாமிக் டைம்ஸ். 18 November 2016. http://economictimes.indiatimes.com/magazines/panache/meet-the-real-life-phunsukh-wangdu-from-3-idiots/articleshow/55472657.cms.
- ↑ Varghese, Shiny (22 December 2016). "The best solar device is timing". Indian Express. http://indianexpress.com/article/india/the-best-solar-device-is-timing-ice-stupa-ladakh-sonam-wangchuk-rolex-award-4435497/.
- ↑ Griffin, Peter (29 December 2014). "Ice Stupas: Conserving water the 3 Idiots way". Forbes India. http://www.forbesindia.com/article/checkin/ice-stupas-conserving-water-the-3-idiots-way/39265/1.
- ↑ Khanna, Aastha (24 November 2019). "There is greater need for basic intelligence than artificial intelligence, says Sonam Wangchuk". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/chandigarh/there-is-greater-need-for-basic-intelligence-than-artificial-intelligence-says-sonam-wangchuk/story-yy2CHfUNLb0gyO5cLijlnN.html.
- ↑ Lenin, Janaki (24 February 2015). "Artificial glacier could help Ladakh villagers adapt to climate change". https://www.theguardian.com/environment/2015/feb/24/artificial-glacier-could-help-ladakh-villagers-adapt-to-climate-change.
- ↑ Saxena, Siddharth (22 February 2015). "Ice stupas to end water woes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/Ice-stupas-to-end-water-woes/articleshow/46357875.cms.
- ↑ Ibrar, Mohammad (26 November 2016). "पानी की किल्लत से जूझते लद्दाख में सोनम वांगचुक का आइडिया किसानों के लिए साबित हो रहा गेमचेंजर" (in hi). Navbharat Times. http://navbharattimes.indiatimes.com/state/jammu-and-kashmir/jammu/sonam-wangchuk-creating-artifical-glaciers-in-leh-ladakh/articleshow/55630693.cms.
- ↑ "Ladakh-based engineer Sonam Wangchuk develops mobile solar-powered tent for Indian Army".
- ↑ "India's First Solar Heated Tent".
- ↑ "Innovator Who Inspired '3 Idiots' Develops Solar Heated Tent For Army".
- ↑ "New Ladakh Movement (NLM) announces to plunge in forthcoming LAHDC elections in Leh". Scoop News. 30 August 2016. http://www.scoopnews.in/det.aspx?q=50146.
- ↑ "New Ladakh Movement releases manifesto". Jammu: State Times. 24 February 2014. http://www.statetimes.in/epaper/uploads/2014/02/24/16.pdf.
- ↑ Pargal, Sanjeev (24 December 2015). "BJP creates history, wins two-third majority in Leh Council elections". Daily Excelsior. http://www.dailyexcelsior.com/bjp-creates-history-wins-two-third-majority-in-leh-council-elections/.
- ↑ Ganai, Naseer (30 May 2020). "Magsaysay Awardee Sonam Wangchuk Calls For 'Boycott Made in China'". Outlook India. Retrieved 6 June 2020.
- ↑ India imposes curfew in Ladakh after statehood protests turn violent
- ↑ Pre-Dawn Raids In Ladakh, 50 Arrested In Major Crackdown After Violence
- ↑ Sonam Wangchuk arrested: Action comes after violent protest in Ladakh
- ↑ Ladakh violence: I’m being made a scapegoat, do not fear arrest, says Sonam Wangchuk
- ↑ லடாக் GEN Z போராட்டம்: செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
- ↑ மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் தொடரும் வன்முறை; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது
- ↑ லடாக்கில் வன்முறையத் தூண்டியதாக சோனம் வாங்சூக் கைது
- ↑ லடாக் போராட்டம்: சோனம் வாங்சுக் கைது - தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை