சோனம் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனம் மாலிக்
Sonam Malik
Sonam Malik.jpg
மல்யுத்த விளையாட்டு வீராங்கனை
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு14 ஏப்ரல் 2002
மதினா கிராமம், சோனிபட், ஹரியானா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமல்யுத்தம்,எடைபிரிவு:62 கி.கி

சோனம் மாலிக் (Sonam Malik) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீராங்கனையாவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார்.[1] தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது மட்டுமின்றி உலக இளையோர் மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் 2 தங்கங்களை வென்றுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கை தோற்கடித்து [2] டோக்கியோ [3] ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அரியானா மாநிலத்திலுள்ள சோனிபத் நகரத்தின் மதினா என்ற கிராமத்தில் சோனம் மாலிக் பிறந்தார். தந்தை ராச் மாலிக்கும் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் மல்யுத்த வீர்ர்களாவர். எனவே 12 ஆம் வயதிலிருந்தே சோனம் மல்யுத்தம் கற்க ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு முதல் சுபாசு சந்திரபோசு விளையாட்டு வளாகத்தில் அச்மீர் மாலிக் என்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் சோனம் பயிற்சி பெற்றார்.

சாதனைகள்[தொகு]

  1. 2016 தேசிய பள்ளிகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  2. 2017 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் ஏதென்சு நகரில் நடைபெற்ற உலக இளையோர் மல்யுத்தப் போட்டியில் சோனம் தங்கப் பதக்கம் வென்றார்.[4]
  3. 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆக்ராவில் நடைபெற்ற உலக பள்ளிகளுக்கு எதிரான மல்யுத்தப் போட்டியில் சோனம் தங்கப் பதக்கம் வென்றார். இதைதவிர 2017 ஆம் ஆண்டில் தேசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.[5]
  4. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மற்றும் ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  5. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய பல்கலைக்கழகங்க இடையிலாலான போட்டியில் தங்கமும், ஆசிய இளையோர் போட்டியில் வெண்கலமும், உலக இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிபிசி தமிழ்".
  2. PTI. "Sonam Malik downs Sakshi again, makes cut for Olympic qualifiers". Sportstar (in ஆங்கிலம்). 2021-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "ஒலிம்பிக் கனவு: கைகள் செயலிழந்த பின்னும் மல்யுத்தக் களத்தில் சாதித்த சோனம் மாலிக்". BBC News தமிழ். 2021-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Sonam Malik Clinches Gold At World Cadet Wrestling Championship - SheThePeople TV" (in ஆங்கிலம்). 2021-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Sonam Malik wrestled with paralysis to see out her destiny". Olympic Channel. 2021-02-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனம்_மாலிக்&oldid=3306815" இருந்து மீள்விக்கப்பட்டது