உள்ளடக்கத்துக்குச் செல்

சோண்டா, கருநாடகம்

ஆள்கூறுகள்: 14°43′35″N 74°47′57″E / 14.72639°N 74.79917°E / 14.72639; 74.79917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதே
கிராமம்
சோதே is located in கருநாடகம்
சோதே
சோதே
கருநாடாகாவில் சொதேவின் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 14°43′35″N 74°47′57″E / 14.72639°N 74.79917°E / 14.72639; 74.79917
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வடகன்னட மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
 • பிராந்தியம்சிர்சி கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகேஏ 31
அருகிலுள்ள நகரம்சிர்சி

சோண்டா (Sonda) அல்லது சொதே எனவும் அறியப்படும் இது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் வடகன்னட மாவட்டத்திலுள்ள சிர்சி நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.

அமைவிடம்

[தொகு]

சொதே என்பது மலைநாடு பிராந்தியத்தில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு கிராமமாகும். இது சிர்சியிலிருந்து 22 கி. மீ தொலைவிலும், ஹுலேகலிலிருந்து 13 கி. மீ. தொலைவிலும் உள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

[தொகு]

சொதே அருகே வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1] [2] இது கிமு 1-ஆம் ஆயிரமாண்டைச் சேர்ந்த வேலைப்பாடுகள் மற்றும் வரைபடங்களைக் கொண்டுள்ளது. அவற்றில், சுழல்களுடன் கூடிய இருபக்க சதுரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன/ வரையப்பட்டுள்ளன. இதுபோன்ற வரைபடங்கள் கருநாடகாவின் காவலியில் உள்ள ஹைர் பெனக்கலிலும் காணப்பட்டன.[1] அவை இன்றைய நிறக்கோலத்துடன் ஓரளவு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

வரலாறு

[தொகு]

சொதே அல்லது சோண்டா பதிவு செய்யப்பட்ட ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. சோண்டா இராச்சியம் 1555 ஆம் ஆண்டில் சொதே இனத்தலைவரான அரசப்பா நாயக்கர் என்பரால் நிறுவப்பட்டது. சோண்டா நாயக்கர்களால் சொதே இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளப்பட்டது ( 1555-1763). 1565 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானகளிடம் விஜயநகரம் வீழ்ச்சியடையும் வரை, விஜயநகர வம்சத்தின் ஆட்சியாளராக அரசப்ப நாயக்கர் இருந்தார். 1598-இல் தான் இறக்கும் வரை சுல்தானகத்தின் கீழ் ஆட்சியாளராகத் தொடர்ந்தார். அரசப்ப நாயக்கர் சோண்டாவில் வாதிராஜ மடத்தை நிறுவினார். அது இன்றும் உள்ளது. மராட்டியப் பேரரசர் சிவாஜி 1674இல் சோண்டாவைக் கைப்பற்றி அதை சோண்டா ஆட்சியாளரான சதாசிவ நாயக்கரிடம் ஒப்படைத்தார். மைசூர் சுல்தானான ஐதர் அலி 1763-இல் சோண்டாவைத் தாக்கி அதை முற்றிலுமாக அழித்தார். சோண்டாவின் கடைசி தலைவரான இம்மோதி சதாசிவராயர் போர்த்துகேய கோவாவுக்கு தப்பிச் சென்றார்.[3] சோண்டாவைப் பாதுகாத்து வந்த கோட்டையின் இடிபாடுகள் புதர்களின் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன.[3] தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா என்ற நூலின் கூற்றுப்படி, சுமார் 3 அடி உயரமுள்ள ஐந்து செதுக்கப்பட்ட தூண்கள் சோண்டா அரண்மனையின் எச்சங்களாக உள்ளன.[3]

சைனக் கோயில்கள், சவாதி சைன மடம் மற்றும் திகம்பரர் சைனக் கோயில்களும் சொதேவில் அமைந்துள்ளன.[3]

சிறீ சொதே வாதிராஜ மடத்தின் தலைமை மடம் கிராமத்தில் அமைந்துள்ளது. மத்துவரால் அமைக்கப்பட்ட எட்டு மடங்களின் ஒரு பகுதியாக இந்த மடம் உள்ளது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Dr. A, Sundara. "Pre historic art in Karnataka". Indira Gandhi National Centre for Arts(IGNCA). Archived from the original on 15 July 2013. Retrieved 6 August 2012.
  2. kannada, classical.org. "Mural Paintings of Karnataka". classicalkannada.org. Archived from the original on 12 April 2013. Retrieved 6 August 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "Sonda:Imperial Gazetteer of India, Vol.23, (1908)". uchicago.edu. p. 82. Retrieved 6 August 2012.
  4. "The Eight Tulu Monasteries of Udupi". Shivalli Brahmins. Retrieved 1 November 2023.
  5. "Udupi Paryaya Utsava". Karnataka Tourism. Retrieved 1 November 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோண்டா,_கருநாடகம்&oldid=4317946" இலிருந்து மீள்விக்கப்பட்டது