சோடியம் பெராக்சிநைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பெராக்சிநைட்ரேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் பெராக்சிநைட்ரேட்டு
பண்புகள்
NaNO4
வாய்ப்பாட்டு எடை 100.99421 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் பெராக்சிநைட்ரேட்டு (Sodium peroxynitrate) என்பது NaNO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெராக்சிநைட்ரிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் பெராக்சிநைட்ரேட்டு எனக் கருதப்படுகிறது. இருப்பினும் NaNO3.H2O2.8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட சோடியம் பெராக்சிநைட்ரேட்டு எண் நீரேற்று என்ற ஒரேயொரு சோடியம் பெராக்சிநைட்ரேட்டு மட்டுமே இதுவரையில் அறியப்பட்டுள்ளது [1].

சோடியம் நைட்ரேட்டின் காரக் கரைசலுடன் ஐதரசன் பெராக்சைடு சேர்த்து வினைப்படுத்தினால் சோடியம் பெராக்சிநைட்ரேட்டு உருவாகிறது. படிகங்கள் உருவாகும்வரை கரைசல் ஆவியாக்கப்படுகிறது. பின்னர் கரைசலை ஆல்ககாலுடன் சேர்த்தால் எண்நீரேற்று படிகங்கள் உருவாகின்றன [1].

மேற்கோள்கள்[தொகு]