சோடியம் பியூட்டைரேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் பியூட்டேனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
சோடியம் பியூட்டைரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
156-54-7 | |
ChEBI | CHEBI:64103 |
ChEMBL | ChEMBL62381 |
ChemSpider | 8727 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5222465 |
| |
பண்புகள் | |
C4H7NaO2 | |
வாய்ப்பாட்டு எடை | 110.09 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் பியூட்டைரேட்டு (Sodium butyrate) என்பது Na(C3H7COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பியூட்டைரிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் பியூட்டைரேட்டு என்றழைக்கப்படுகிறது. மிகை இணப்பெருக்கத்தைத் தடுத்தல், வேறுபாடுகளைத் தூண்டுதல், மரபணு ஒடுக்கத்தைத் தூண்டுதல் போன்ற பல்வேறு உயிரியல் விளைவுகளை வளர்ப்பு பாலுட்டிகளின் செல்களில் உண்டாக்குகிறது [1]. இதனடிப்படையில் இந்த விளைவுகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டு வர ஆய்வகத்தில் சோடியம் பியூட்டைரேட்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செல்களில் மேற்கொள்ளப்படும் பியூட்டைரேட்டு சிகிச்சையினால் இசுட்டோன் புரதம் மிகை அசிட்டைலேற்றம் அடைகிறது. மற்றும் பியூட்டைரேட்டே வகை 1 இசுட்டேன் டி அசிட்டைலேசின் நடவடிக்கையைத் தடுக்கிறது [2]. வகை 1 இசுட்டேன் டி அசிட்டைலேசு, வகை 2 இசுட்டேன் டி அசிட்டைலேசு, வகை 3 இசுட்டேன் டி அசிட்டைலேசு நொதிகளில் குரோமேட்டின் கட்டமைப்பையும் செயல்பாடுகளையும் இசுட்டோன் டி அசிட்டைலின் பங்கை நிர்ணயிப்பதில் பியூட்டைரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இசுட்டேன் டி அசிட்டைலேசின் செயல்பாடுகளைத் தடுப்பது பாலுட்டிகளின் மரபணுக்களில் 2% அளவிற்கே பாதிக்கப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது [3].
ஆய்வகத்தில் சோடியம் பியூட்டைரேட்டு பொதுவாக வெள்ளை நிறத்தில் நீரில் கரையக்கூடிய படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. இவ்வேதிச் சேர்மம் மிகவும் வலுவான, விரும்பத்தகாத மணத்தைக் கொண்டிருக்கிறது. சோடியம் பியூட்டைரேட்டைப் பயன்படுத்தும்போது கையுறைகள், கண் பாதுகாப்பு மற்றும் சுவாச முகமூடி ஆகியவற்றை பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது [4] இந்தச் சேர்மம் மனித உணவில் காணப்படுகிறது,
குறிப்பாக குடலில் உள்ள நார்ச்சத்திலும் மற்றும் பாலைடைக்கட்டி மற்றும் வெண்ணெய் ஆகியவற்றில் இருந்து பேரளவில் உற்பத்தி செய்யப்படுகிறது [5]. இருப்பினும், குடலில் காணப்படும் சோடியம் பியூட்டைரேட்டின் மிகவும் பொதுவான ஆதாரம் பருப்பு நுகர்வுகளால் கிடைப்பதாகும். இது இழைச்சத்துடன் சேர்ந்து வயது முதிர்வை தள்ளிப்போடவும் உடல் நலனுக்கு பயனளிப்பதிலும் தொடர்பு கொண்டுள்ளது [6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kruh, Jacques (1981). "Effects of sodium butyrate, a new pharmacological agent, on cells in culture". Molecular and Cellular Biochemistry 42 (2): 65–82. doi:10.1007/BF00222695. பப்மெட்:6174854.
- ↑ Candido, E; Reeves, Raymond; Davie, James R. (1978). "Sodium butyrate inhibits histone deacetylation in cultured cells". Cell 14 (1): 105–13. doi:10.1016/0092-8674(78)90305-7. பப்மெட்:667927.
- ↑ Davie, James R. (2003). "Inhibition of Histone Deacetylase Activity by Butyrate". The Journal of Nutrition 133 (7 Suppl): 2485S–2493S. பப்மெட்:12840228. http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=12840228.
- ↑ "Sodium butyrate ≥98.5% (GC) | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ http://diabetes.diabetesjournals.org/content/61/4/797
- ↑ https://www.wsj.com/articles/want-great-longevity-and-health-it-takes-a-village-1432304395