சோடியம் நாப்தலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் நாப்தலீனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Sodium naphthalenide
முறையான ஐயூபிஏசி பெயர்
சோடியம் நாப்தலீன்-1-னைடு
இனங்காட்டிகள்
ChemSpider 10004279 N
EC number 222-460-3
InChI
  • InChI=1S/C10H8.Na/c1-2-6-10-8-4-3-7-9(10)5-1;/h1-8H;/q-1;+1 N
    Key: NCVIXNVCXNGGBW-UHFFFAOYSA-N N
  • InChI=1/C10H8.Na/c1-2-6-10-8-4-3-7-9(10)5-1;/h1-8H;/q-1;+1
    Key: NCVIXNVCXNGGBW-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11829632
SMILES
  • c1ccc2=C[CH][CH-]C=c2c1.[Na+]
பண்புகள்
C10H8Na
வாய்ப்பாட்டு எடை 151.16 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் சைக்ளோபென்டாடையீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

சோடியம் நாப்தலீனைடு (Sodium naphthalenide) என்பது C10H8Na என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் நாப்தலைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கரிம உப்பான இச்சேர்மத்தின் அயனிக் கட்டமைப்பு Na+C10H8− என்று எழுதப்படுகிறது. ஆய்வகங்களில் கரிம, கரிமவுலோக, கனிம வேதியியல் பிரிவுகளில் ஓர் ஒடுக்கியாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு திண்மமாக இதை தனிமைப்படுத்த இயல்வதில்லை. ஆனால் வழக்கமாக பயன்படுத்துவதற்கு சற்று முன்பாக இச்சேர்மத்தை தயாரித்துக் கொள்வர்[1].

தயாரிப்பும் பண்புகளும்[தொகு]

டெட்ராஐதரோபியூரான் அல்லது டைமெத்தாக்சியீத்தேன் போன்ற ஈதர் கரைப்பானில் கரைக்கப்பட்ட நாப்தலீனுடன் உலோகத்தை இட்டு நன்கு கலக்குவதன் மூலமாக கார உலோக நாப்தலீனைடுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வினையில் உருவாகும் உப்பு அடர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது [2][3]. எதிர்மின் அயனி ஒர் இயங்குறுப்பு ஆகும். ஒடுக்கத்திறல் மதிப்பு 2.5 V என்ற மதிப்புக்கு அருகில் சாதாராண ஐதரசன் மின்வாயுடன், g = 2.0 என்ற மதிப்புக்கு அருகில் வலிமையான அயக்காந்த ஒத்திசைவு குறிப்பை இச்சேர்மம் அளிக்கிறது. ஆழ்ந்த பச்சை நிறம் 463,735 நானோமீட்டர் ஈர்ப்பு மையத்தில் தோன்றுகிறது.

எதிர்மின் அயனி ஒரு வலிமையான காரத்தன்மையுடைய அயனியாகும். குறிப்பாக படியிறக்க வழிமுறையானது தண்ணீருடன் வினை மற்றும் தொடர்புடைய புரோட்டான் மூலங்களை உள்ளடக்கியுள்ளது. இவ்வினைகள் டை ஐதரோநாப்தலீனை வழங்க உதவுகின்றன.

2 NaC10H8 + 2 H2O → C10H10 + C10H8 + 2 NaOH

தொடர்புடைய முகவர்கள்[தொகு]

சில செயற்கைச் செயல்முறைகளில் சோடியம் நாப்தலீனைடு அளவுக்கு மீறிய ஒடுக்கத்தை அளிக்கின்றன. இம்மாதிரியான நிகழ்வுகளில் மிதமான ஒடுக்கிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான வளையங்கள் கொண்டவை மிதமான ஒடுக்கியாகச் செயல்படுகின்றன. சோடியம் அசிநாப்தலீனைடு 0.75 வோல்ட்டு அளவுக்கு மிதமான ஒடுக்கியாகும். இதேபோல இதனையொத்த இலித்தியம் உப்பும், இலித்தியம் நாப்தலீனைடாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. N. G. Connelly and W. E. Geiger, "Chemical Redox Agents for Organometallic Chemistry", Chem. Rev. 1996, 96, 877-910. எஆசு:10.1021/cr940053x
  2. Cotton, F. Albert; Wilkinson, Geoffrey (1988), Advanced Inorganic Chemistry (5th ed.), New York: Wiley-Interscience, p. 139, ISBN 0-471-84997-9
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_நாப்தலீனைடு&oldid=2954790" இலிருந்து மீள்விக்கப்பட்டது