சோடியம் டெட்ராசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் டெட்ராசல்பைடு
WikiNa2S4.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம்டெட்ராசல்பைடு
வேறு பெயர்கள்
டைசோடியம்டெட்ராசல்பைடு, சோடியம் சல்பைடு, இருசோடியம்டெட்ராசல்பைடு
இனங்காட்டிகள்
12034-39-8 Yes check.svgY
EC number 234-805-5
பண்புகள்
Na2S4
வாய்ப்பாட்டு எடை 174.24 கி/மோல்
தோற்றம் அடர் சிவப்பு, இலேசான பாகுத்தன்மை மிக்க நீர்மம் அல்லது மஞ்சள் நிற படிகத்தூள்
அடர்த்தி 1.268 கி/செ.மீ3 15.5 °செ இல்
உருகுநிலை
நீரில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடனும், சூடுபடுத்தினால் வெடிக்கும் தன்மையும் பெற்றுள்ளது. அமிலங்கள் அல்லது ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரிவதால் நச்சு வாயுக்கள் வெளியாகின்றன. உள்ளிழுக்கப்பட்டால் இவ்வாயுக்கள் தீங்கு செய்கின்றன.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1] [1]
Autoignition
temperature
பொருந்தாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் டெட்ராசல்பைடு (Sodium tetrasulfide) என்பது Na2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் நீராற்பகுப்பு அடைந்து கரைகிறது [2]. சில சிறப்புமிக்க பலபடிகளைத் தயாரிப்பதற்கு இது முன்னோடிச் சேர்மமாக பயன்படுகிறது. சோடியம்- கந்தகம் மின்கலன்களில் முன்மாதிரி இடைநிலையாகவும் இது பயன்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

தனிமநிலை கந்தகம் மற்றும் ஆல்ககால் கரைசலிலுள்ள சோடியம் ஐதரோசல்பைடு ஆகியன வினைபுரிந்து சோடியம் டெட்ராசல்பைடு உருவாகிறது:[3]

2NaSH + 4 S → Na2S4 + H2S

கட்டமைப்பு[தொகு]

கந்தக அணுக்களின் கோணல்மாணலான சங்கிலிகளை பல்சல்பைடு எதிர்மின் அயனிகள் ஏற்றுக் கொள்கின்றன. S-S பிணைப்புகளின் பிணைப்பு இடைவெளி 2.05 Å ஆகவும் S-S-S-S பிணைப்புகளின் இருமுகக் கோண அளவு கிட்டத்தட்ட 90° ஆகவும் அமைகின்றன.[4]

வினைகள் மற்றும் பயன்கள்[தொகு]

சோடியம் டெட்ராசல்பைடுடன் அமிலங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் ஐதரசன் சல்பைடும் தனிமநிலை கந்தகமும் தோன்றுகின்றன. ஆல்க்கைலேற்றும் முகவர்களுடன் சேர்த்து சூடுபடுத்தினால் கரிம பல்சல்பைடுகள் உருவாகின்றன. குறுக்குப் பிணைப்பு முகவரான பிசு(டிரையீத்தாக்சிசிலில்புரோப்பைல்)டெட்ராசல்பைடை உற்பத்தி செய்ய பயன்படுவது இதன் வர்த்தகப் பயனாகும் :[5]

Na2S4 + 2 ClC3H6Si(OEt)3 → S4[C3H6Si(OEt)3]2 + 2 NaCl

சிலசமயங்களில் ஒரு கலவையாக பிற பல்சல்பைடுகளுடன் சோடியம் டெட்ராசல்பைடைப் பயன்படுத்துகிறார்கள். தயோகொல் என்ற பலபடியைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. எத்திலீன் குளோரைடுடனான ஆல்க்கைலேற்றும் வினை இம்முறையில் பங்கேற்கிறது.

Na2S4 + C2H4Cl2 → 1/n (C2H4)Sx]n + 2 NaCl

(C2H4)Sx]n (x ~ 4) என்ற தோராயமான வாய்ப்பாட்டால் இத்தகைய சேர்மங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவை அமிலங்கள், கரைப்பான்களால் உண்டாகும் தரங்குறைப்பு வினைகளை தீவிரமாக எதிர்க்கின்றன.[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Safety Data Sheet, Sodium Tetrasulfide". Pfaltz & Bauer.
  2. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 365.
  3. D. R. Brush (2000). "Kirk-Othmer Encyclopedia of Chemical Technology". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. DOI:10.1002/0471238961.1915040902211908.a01. ISBN 0471238961. 
  4. R. Tegman "The crystal structure of sodium tetrasulphide, Na2S4" Acta Crystallogr. (1973). B29, 1463-1469 எஆசு:10.1107/S0567740873004735
  5. Thurn, Friedrich; Meyer-Simon, Eugen; Michel, Rudolf "Verfahren zur Herstellung von Organosiliziumverbindungen (Continuous manufacture of bis[3-(triethoxysilyl)propyl] tetrasulfide)" Ger. Offen. (1973), DE 2212239 A1 19731004.
  6. Sulfides, Polysulfides, and Sulfanes" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry Ludwig Lange and Wolfgang Triebel, 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_443

.