சோடியம் டிரைபுளோரோமெத்தேன்சல்பினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் டிரைபுளோரோமெத்தேன்சல்பினேட்டு
சோடியம் டிரைபுளோரோமெத்தேன்சல்பினேட்டு கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டிரைபுளோரோமெத்தேன்சல்பினேட்டு
இனங்காட்டிகள்
2926-29-6
ChemSpider 2059266
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23690734
பண்புகள்
CF3NaO2S
வாய்ப்பாட்டு எடை 156.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் டிரைபுளோரோமெத்தேன்சல்பினேட்டு (Sodium trifluoromethanesulfinate ) என்பது CF3NaO2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரைபுளோரோமெத்தேன்சல்பினிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் டிரைபுளோரோமெத்தேன்சல்பினேட்டு என்று கருதப்படுகிறது. ஓர் ஆக்சிகரணியான மூவிணைய பியூட்டைல் ஐதரோபெராக்சைடுடன் சேர்க்கப்பட்டு இச்சேர்மம் ஒரு பொருத்தமான வினையாக்கியாக கரிம வேதியியலில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையாக்கியினால் எலக்ட்ரான் மிகு அரோமாட்டிக் சேர்மங்களில் டிரைபுளோரோமெத்தில் தொகுதிகளை அறிமுகம் செய்ய முடிகிறது. இலேங்கு இலாயிசு வினையாக்கி என்ற பெயராலும் இக்கலவை அறியப்படுகிறது. தனி இயங்குறுப்பு வினை வழிமுறையில் இவ்வினை நிகழ்கிறது [1].

இவ்வினையாக்கியும் இருமுக நிலைப்பொருள் நிபந்தனைக்குட்பட்ட டிரைபுளோரோமெத்திலேட்டு எலக்ட்ரான்-குறைபாடுள்ள அரோமாட்டிக் சேர்மமாக மாறவியலும்[2]. இதனுடன் தொடர்புடைய பல்லுருவ ஒருங்கிணைவு அணைவுச்சேர்மமான துத்தநாக டைபுளோரோமெத்தேன்சல்பினேட்டால், அரோமாட்டிக் சேர்மங்களில் அதே இருமுக நிலைப்பொருள் நிபந்தனைக்குட்பட்டு டைபுளோரோமெத்தில் குழுக்களை அறிமுகம் செய்ய இயலும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Langlois, Bernard R.; Laurent, Eliane; Roidot, Nathalie (1991). "Trifluoromethylation of aromatic compounds with sodium trifluoromethanesulfinate under oxidative conditions". Tetrahedron Lett. 32 (51): 7525. doi:10.1016/0040-4039(91)80524-A. 
  2. Ji, Y.; Brueckl, T.; Baxter, R. D.; Fujiwara, Y.; Seiple, I. B.; Su, S.; Blackmond, D. G.; Phil S. Baran (2011). "Innate C-H trifluoromethylation of heterocycles". Proc. Natl. Acad. Sci. 108 (35): 14411–5. doi:10.1073/pnas.1109059108. பப்மெட்:21844378. 
  3. Fujiwara, Yuta; Dixon, Janice A.; Rodriguez, Rodrigo A.; Baxter, Ryan D.; Dixon, Darryl D.; Collins, Michael R.; Blackmond, Donna G.; Baran, Phil S. (2012). "A New Reagent for Direct Difluoromethylation". J. Am. Chem. Soc. 134 (3): 1494–7. doi:10.1021/ja211422g. பப்மெட்:22229949.