சோடியம் டங்சுடேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சோடியம் டங்சுடேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 13472-45-2 | |
| ChemSpider | 24266 |
| EC number | 236-743-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 26052 |
| வே.ந.வி.ப எண் | YO7875000 |
| |
| UNII | 64LRH4405G |
| பண்புகள் | |
| Na2WO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 293.82 கி/மோல் (நீரிலி) 329.85 கி/மோல் (இருநீரேற்று) |
| தோற்றம் | White சாய்சதுர பிழம்புரு படிகங்கள் |
| அடர்த்தி | 4.179 கி/செ.மீ3 (நீரிலி) 3.25 கி/செ.மீ3 (இருநீரேற்று) |
| உருகுநிலை | 698 °C (1,288 °F; 971 K) |
| 57.5 கி/100 மி.லி (0 °செல்சியசு) 74.2 கி/100 மி.லி (25 °செல்சியசு) 96.9 கி/100 மி.லி (100 °செல்சியசு) | |
| கரைதிறன் | அமோனியாவில் சிறிதளவு கரையும் எத்தனால், காடி ஆகியவற்றில் கரையாது. |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | சாய்சதுரம் (நீரிலி) நேர்சாய்சதுரம் (இருநீரேற்று) |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H302 | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் டங்சுடேட்டு சீசியம் டங்சுடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் டங்சுடேட்டு (Sodium tungstate) என்பது Na2WO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். டங்சுடிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பான இச்சேர்மம் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. திண்மப் பொருளான இச்சேர்மம் நீரில் கரையும். தங்குதன் தயாரிப்பதற்கு ஒரு மூலப்பொருளாகப் பயன்படுகிறது. தங்குதன் தாதுக்களை உலோகமாக மாற்றுவதில் இது ஓர் இடைநிலை வேதிப் பொருளாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]தங்குதனின் தாதுக்களை சோடியம் ஐதராக்சைடு காரத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மூலம் சோடியம் டங்சுடேட் பெறப்படுகிறது. இதில் பொருளாதார ரீதியாக முக்கியமான டங்சுடேட்டுகள், கார நிலையில் உள்ளன. ஊல்பிரமைட்டு கனிமத்திலிருந்து சோடியம் டங்சுடேட்டை பிரித்தெடுப்பது ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.[1]
- Fe/MnWO4 + 2 NaOH + 2 H2O → Na2WO4·2H2O + Fe/Mn(OH)2
இதே போல கால்சியம் டங்சுடேட்டு தாதுவான சீலைட்டு கனிமத்தை சோடியம் கார்பனேட்டுடன் வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.
சோடியம் நைட்ரேட்டு மற்றும் சோடியம் ஐதராக்சைடு சேர்மத்துடன் தங்குதன் கார்பைடைச் சேர்த்து இணைவுச் செயல்பாட்டில் வினைபுரியச் செய்வதன் மூலமும் சோடியம் டங்சுடேட்டை உற்பத்தி செய்யலாம். வினையின் அதிக வெப்ப உமிழ்வை இவ்வினை கடக்கிறது.
அமைப்பு
[தொகு]திட நிலையில் வேறுபட்ட பண்புகளைக் கொண்ட பல்வேறு படிக வடிவங்களில் சோடியம் டங்சுடேட்டு காணப்படுகிறது. அவற்றில் மூன்று வடிவங்கள் ஒரே வளிமண்டல அழுத்தத்தில் உள்ளன. அவை நான்முகி ஆர்த்தோடங்சுடேட்டு ஈரெதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளன. ஆனால் பொதி மையக்கருத்தில் இவை வேறுபடுகின்றன. WO2−4 எதிர்மின் அயனி சல்பேட்டு (SO2−4) போன்ற ஓர் அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[2]
வினைகள்
[தொகு]சோடியம் டங்சுடேட்டை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்தும்போது தங்குதன்(VI) ஆக்சைடு அல்லது அதன் அமில நீரேற்றுகள் உருவாகின்றன:
- Na2WO4 + 2 HCl → WO3 + 2 NaCl + H2O
- Na2WO4 + 2 HCl → WO3·H2O + 2 NaCl
இவ்வினை நீரிய சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினை புரியச் செய்தால் தலைகீழாகிறது.
பயன்கள்
[தொகு]சோடியம் டங்சுடேட்டின் ஆதிக்கம் செலுத்தும் பயன்பாடு, அதன் தாதுக்களிலிருந்து டங்சுடனைப் பிரித்தெடுப்பதில் ஓர் இடைநிலை வேதிப் பொருளாக உள்ளது என்பதுதானாகும். இவை அனைத்தும் டங்சுடேட்டுகளாகும். சோடியம் டங்சுடேட்டு குறிப்பிட்ட பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது.
கரிம வேதியியலில், சோடியம் டங்சுடேட் ஆல்க்கீன்களின் எபாக்சிசனேற்றத்திற்கும், ஆல்ககால்களை ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்களாக ஆக்சிசனேற்றுவதற்கும் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை இது வெளிப்படுத்துகிறது.[3]
சோடியம் மற்றும் இலித்தியம் மெட்டாடங்சுடேட்டுகளின் கரைசல்கள் அடர்த்திப் பிரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கரைசல்கள் புரோமோஃபார்ம் மற்றும் மெத்திலீன் அயோடைடை விட குறைவான நச்சுத்தன்மை கொண்டவை. ஆனால் இயற்கையாக இணைக்கப்பட்ட பல தாதுக்களுக்கு இடையில் இவற்றின் அடர்த்தி உள்ளது.[4]
சோடியம் டங்சுடேட்டு மாலிப்டினத்தின் போட்டித் தடுப்பானாகும். ஏனெனில் இது தனிமவரிசை அட்டவணையில் மாலிப்டினத்திற்கு நேர் கீழே இருக்கிறது. இது ஒத்த மின்வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. டங்சுடன் உணவு திசுக்களில் மாலிப்டினத்தின் செறிவைக் குறைக்கிறது.[5]
சில பாக்டீரியாக்கள் தங்கள் சுவாசச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாலிப்டினம் துணைக்காரணியைப் பயன்படுத்துகின்றன. இந்த நுண்ணுயிரிகளில், டங்சுடேட்டு மாலிப்டினத்தை மாற்றும். காற்றுச் சுவாசம் மூலம் ஆற்றல் உற்பத்தியைத் தடுக்கும். எனவே, சோதனை உயிரியலில் சோடியம் டங்சுடேட்டின் ஒரு முக்கிய பயன்பாடு உள்ளது. எலிகளின் குடிநீரில் சோடியம் டங்சுடேட்டைச் சேர்ப்பது அவற்றின் குடலில் உள்ள எதிர்மறை பாக்டீரிய குடும்பத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.[6]
மலட்டுத்தன்மைக்கு சோடியம் டங்சுடேட்டு ஒரு சாத்தியமான சிகிச்சையாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tungsten, Tungsten Alloys, and Tungsten Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, 2005, doi:10.1002/14356007.a27_229
- ↑ "Phase diagrams of sodium tungstate and sodium molybdate to 45 kbar.". The Journal of Chemical Physics 44 (12): 4532–4537. June 1966. doi:10.1063/1.1726669. Bibcode: 1966JChPh..44.4532P.
- ↑ "The antidiabetic agent sodium tungstate activates glycogen synthesis through an insulin receptor-independent pathway". The Journal of Biological Chemistry 278 (44): 42785–42794. October 2003. doi:10.1074/jbc.M308334200. பப்மெட்:12925525. https://archive.org/details/sim_journal-of-biological-chemistry_2003-10-31_278_44/page/42784.
- ↑ Skipp GL, Brownfield IK (1993). Improved density gradient separation techniques using sodium polytungstate and a comparison to the use of other heavy liquids (PDF) (Report). US Geological Survey.
- ↑ Considine GD, ed. (2005). "Molybdenum". Van Nostrand's Encyclopedia of Chemistry. New York: Wiley-Interscience. pp. 1038–1040. ISBN 978-0-471-61525-5.
- ↑ "Precision editing of the gut microbiota ameliorates colitis". Nature 553 (7687): 208–211. January 2018. doi:10.1038/nature25172. பப்மெட்:29323293. Bibcode: 2018Natur.553..208Z.
- ↑ "Sodium tungstate increases embryo adhesion through a direct effect on endometrial cells.". Human Reproduction 36 (Supplement_1). 2021. doi:10.1093/humrep/deab130.402.
- ↑ "Oral administration of sodium tungstate to a swine model improves embryo implantation rate.". Human Reproduction 36 (Supplement_1). 2021. doi:10.1093/humrep/deab130.355.
- ↑ Devlin H (7 July 2024). "Fertility drug could lead to 7% increase in live births after IVF, trials show". The Guardian.