சோடியம் சிடீயரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஆக்டாதெக்கோணேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 822-16-2 | |
| ChEBI | CHEBI:132109 |
| ChemSpider | 12639 |
| EC number | 212-490-5 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 2724691 |
| |
| UNII | QU7E2XA9TG |
| பண்புகள் | |
| C18H35NaO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 306.47 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| மணம் | மங்கிய, கொழுப்பு போன்ற மணம் |
| அடர்த்தி | 1.02 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 245 முதல் 255 °C (473 முதல் 491 °F; 518 முதல் 528 K) |
| கரையும் | |
| கரைதிறன் | சிறிதளவு எத்திலீன் கிளைக்கால் கரைப்பானில் கரையும் |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 176 °C (349 °F; 449 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சோடியம் சிடீயரேட்டு (Sodium stearate) என்பது சிடீயரிக் அமிலத்தின் சோடியம் உப்பாகும். C18H35NaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. சோடியம் ஆக்டாதெக்கோணேட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது. வெண்மை நிறம் கொண்ட இந்தத் திண்மப் பொருள், மிகவும் பரவலாகப் பயன்படும் ஒரு சோப்பாகும். பல வகையான திண்ம வடிவ வியர்வை நீக்கிகள், இரப்பர்கள், மரப்பால் வண்ணப்பூச்சுகள் மற்றும் மைகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. மேலும், சில உணவுச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் உணவுச் சுவையூட்டிகளின் ஓர் அங்கமாகவும் உள்ளது.[1]
தயாரிப்பு
[தொகு]எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளை ஒரு வலுவான காரத்துடன் (NaOH அல்லது KOH) சேர்த்து சோப்பாக்கம் செய்யும் போது சோடியம் சிடீயரேட்டு சோப்பின் ஒரு முக்கிய அங்கமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சோடியம் சிடீயரேட்டின் சதவீதம் மூலப்பொருள் கொழுப்புகளைப் பொறுத்து அமைகிறது. உயர்ந்த அமிலக் கொழுப்பான தாலோ குறிப்பாக அதிக அளவு சிடீயரிக் அமிலத்தைக் (டிரைகிளிசரைடாக) கொண்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலான கொழுப்புகள் சிறு சதவீதங்களை மட்டுமே கொண்டுள்ளன. சிடீயரினிலிருந்து (சிடீடியரிக் அமிலத்தின் டிரைகிளிசரைடு) சோடியம் சிடீடியரேட்டு உருவாவதற்கான இலட்சியப்படுத்தப்பட்ட சமன்பாடு பின்வருமாறு:
- (C17H35CO2)3C3H5 + 3 NaOH → C3H5(OH)3 + 3 C17H35CO2Na
சிடீயரிக்கு அமிலத்தை சோடியம் ஐதராக்சைடு கொண்டு நடுநிலையாக்குவதன் மூலமும் சோடியம் சிடீயரேட்டைத் தயாரிக்கலாம்.[2]
- C17H35COOH + NaOH → C17H35COONa + H2O
பாதுகாப்பு
[தொகு]பல வணிக சோப்புகளில் காணப்படும் சிடீயரேட்டு உப்புகள் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை, எனவே அவை வீட்டு உபயோகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பீட்டளவில் இவை மெதுவாக உயிரியல் சிதைவு அடைவதாலும், அதிக உயிரியல் ஆக்சிசன் தேவையை ஏற்படுத்துவதாலும் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Ullmann's Encyclopedia of Industrial Chemistry".. (2000). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a24_247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30385-4.
- ↑ Snell, Foster Dee (1942). "Soap and Glycerol". Journal of Chemical Education 19 (4): 172. doi:10.1021/ed019p172. Bibcode: 1942JChEd..19..172S. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1942-04_19_4/page/172.