சோடியம் அலுமினோசிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அலுமினோசிலிக்கேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் சோடியம் டையாக்சிடோ(ஆக்சோ)சிலேன்
வேறு பெயர்கள்
அலுமினோசிலிசிக் அமிலம், அலுமினியம் சோடியம் சிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
1344-00-9
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19758701
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் அலுமினோசிலிக்கேட்டு (Sodium aluminosilicate) என்பது சோடியம், அலுமினியம், சிலிக்கன், ஆக்சிசன் ஆகிய தனிமங்களால் ஆக்கப்பட்டு அத்துடன் சிறிதளவு தண்ணீரும் சேர்ந்திருக்ககூடிய ஒரு சேர்ம்ம் ஆகும். செயற்கை முறை படிக உருவமற்ற சோடியம் அலுமினோசிலிகேட்டு, இயற்கையாகத் தோன்றும் ஒரு சில தாதுக்கள் மற்றும் செயற்கை சியோலைட்டுகள் போன்றவையும் இதில் அடங்கும். செயற்கை முறை படிக உருவமற்ற சோடியம் அலுமினோசிலிகேட்டு ஐரோப்பிய ஒன்றிய எண் 554 என அடையாளம் கொடுக்கப்பட்டு ஓர் உணவு கூட்டுசேர் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

படிக உருவமற்ற சோடியம் அலுமினோசிலிகேட்டு[தொகு]

இந்தச் சேர்மம் பரந்த அளவிலான கலவைகளுடன் தயாரிக்கப்பட்டு பல வேறுபட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. உணவில் ஒரு கூட்டுசேர் பொருளாக ஐ 554 என அடையாளமிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இங்கு இது ஒரு கட்டியாதல் தடுப்பு முகவராக செயல்படுகிறது. பலவிதமான கலவைகளுடன் தயாரிக்கப்படுவதால், இது ஒரு நிலையான விகிதவியல் அளவு கொண்ட இரசாயன கலவை அல்ல[1]. 14SiO2•Al2O3•Na2O•3H2O,(Na2Al2Si14O32•3H2O).[2] என்ற கலவையே படிக உருவமற்ற சோடியம் அலுமினோசிலிக்கேட்டு என்று ஒரு அனுப்புனர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அந்நாட்டு சட்டப் பிரிவு 21 சி.எப்.ஆர் 182.2227 இன் கீழ் சோடியம் அலுமினோ சிலிக்கேட்டை நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வேதிப்பொருளாக அங்கீகரித்துள்ளது[3]. மருத்துவக் கொள்கலன்களில் சோடியம் அலுமினோசிலிக்கேட்டு மூலக்கூற்று சல்லடையாகப் பயன்படுகிறது. சோடியம் அலுமினோசிலிகேட்டு மேலும் பலவாறாகப் பட்டியலிடப்படுகிறது. :

 • அலுமினியம் சோடியம் உப்பு
 • சோடியம் சிலிக்கோஅலுமினேட்டு
 • அலுமினோசிலிசிக் அமிலத்தின் சோடியம் உப்பு
 • சோடியம் அலுமினியம் சிலிக்கேட்டு
 • அலுமினியம் சோடியம் சிலிக்கேட்டு
 • சோடியம் சிலிகோ அலுமினேட்டு
 • சாசில்

இயற்கையாகத் தோன்றும் கனிமங்களும் சிலசமயங்களில் வேதியல் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. அல்பைட்டு (NaAlSi3O8) மற்றும் யேதைட்டு (NaAlSi2O6) உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

செயற்கை சியோலைட்டுகள் சில நேரங்களில் சோடியம் அலுமினோசிலிக்கேட்டு[தொகு]

செயற்கை சியோலைட்டுகளின் அணைவுக் கட்டமைப்பும் உதாரணங்களும்:

 • Na12Al12Si12O48•27H2O, சியோலைட்டு ஏ –சலவைத் தொழிலில் பயன்படுகிறது.[4]
 • Na16Al16Si32O96•16H2O, அனால்சைம், ஐயுபிஏசி குறியீடு ஏ.என்.ஏ[4]
 • Na12Al12Si12O48•q H2O, லோசோடு[5]
 • Na384Al384Si384O1536•518H2O, லிண்டே வகை என்

மேற்கோள்கள்[தொகு]

 1. United Nations Environment Programme பரணிடப்பட்டது 2010-03-31 at the வந்தவழி இயந்திரம்
 2. Solvay link no longer works
 3. "Sec. 182.2727 Sodium aluminosilicate". U.S. Food and Drug Administration. 1 April 2012. 10 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 Alan Dyer, (1994),Encyclopedia of Inorganic Chemistry, ed R. Bruce King, John Wiley & Sons, ISBN 0-471-93620-0
 5. "Formation and Properties of Losod, a New Sodium Zeolite", Werner Sieber, Walter M. Meie Helvetica Chimica Acta, Volume 57 Issue 6, pp. 1533–1549, 10.1002/hlca.19740570608