சோடியம் அலுமினியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் அலுமினியம் பாசுபேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈ541; அலுமினியம் சோடியம் உப்பு
இனங்காட்டிகள்
10305-76-7 N
Abbreviations SALP, SAlP
EC number 232-090-4
பப்கெம் 3032541
UNII 7N091Y877O N
பண்புகள்
NaH14Al3(PO4)8•4H2O
வாய்ப்பாட்டு எடை 144.943 கி/மோல்
தோற்றம் வெண் தூள்
மணம் நெடியற்றது
கரையாது
கரைதிறன் ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் அலுமினியம் பாசுபேட்டு (Sodium aluminium phosphate) என்பது பொதுவாக NaH14Al3(PO4)8•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் பாசுபேட்டுகளின் சோடியம் உப்புகள் சோடியம் அலுமினியம் பாசுபேட்டுகள் எனப்படுகின்றன. அலுமினா, பாசுபாரிக் அமிலம், சோடியம் ஐதராக்சைடு ஆகிய மூன்றையும் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இதை தயாரிக்கலாம்.

நீரேற்று வகையைத் தவிர கூடுதலாக நீரிலி வகை சோடியம் அலுமினியம் பாசுபேட்டும் அறியப்படுகிறது. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு Na3H15Al2(PO4)8.[1] ஆகும் (CAS#10279-59-1). இதில் பாசுபேட்டு, அலுமினியம், சோடியம் இவை மூன்றும் 8:2:3 என்ற விகிதத்தில் சேர்ந்துள்ளன. பொதுவாக, NaxAly(PO4)z (CAS# 7785-88-8) என்ற சோடியம் அலுமினியம் பாசுபேட்டு வாய்ப்பாடு நன்கு வரையறுக்கப்படாத விகிதாச்சாரத்தைப் பயன்படுத்துகிறது (NaxAly(PO4)z (CAS# 7785-88-8).[2].

அமில சோடியம் அலுமினிய பாசுபேட்டுகள் சுடப்பட்ட பொருட்களின் வேதியியல் புளிப்புக்குரிய பேக்கிங் பொடிகளுக்கு அமிலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பமடையும் போது இது சமையல் சோடாவுடன் இணைந்து கார்பன் டை ஆக்சைடை அளிக்கிறது. அறை வெப்பநிலையில் பிசைந்து அடித்து மாவை கலக்கும்போது இதன் பெரும்பாலான நடவடிக்கை சமைக்கும் வெப்பநிலையில் நிகழ்கிறது. சோடியம் அலுமினியம் பாசுபேட்டுகள் சாதகமானவையாகக் கருதப்படுகின்றன ஏனெனில் அவை நடுநிலை சுவையை அளிக்கின்றன.

ஓர் உணவு கூட்டுசேர் பொருளாக இதற்கு ஐரோப்பிய ஒன்றிய குறியீட்டு எண் ஐ541 என வழங்கப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது [3][4]. Na15Al3(PO4)8போன்ற கார சோடியம் அலுமினியம் பாசுபேட்டுகளும் அறியப்படுகின்றன. பாலாடைக்கட்டி தயாரிப்பில் இவை பெரிதும் உதவுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Klaus Schrödter, Gerhard Bettermann, Thomas Staffel, Friedrich Wahl, Thomas Klein, Thomas Hofmann "Phosphoric Acid and Phosphates" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_465.pub3
  2. Lampila, Lucina E. (2013). "Applications and functions of food-grade phosphates". Ann. N.Y. Acad. Sci. 1301: 37–44. doi:10.1111/nyas.12230. 
  3. Brooks, David W. "Leavening Agents". Teaching and Research Web Site. University of Nebraska - Lincoln. 2011-07-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-03-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "E541 : Sodium aluminum phosphate". Food-Info. Wageningen University. 2011-03-06 அன்று பார்க்கப்பட்டது.