உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் அலுமினியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அலுமினியம் ஐதரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் அலுமினியம் ஐதரைடு
வேறு பெயர்கள்
சோடியம் டெட்ரா ஐதரோ அலுமினேட்டு
இனங்காட்டிகள்
13770-96-2 Y
EC number 237-400-1
InChI
  • InChI=1S/Al.Na.4H/q-1;+1;;;;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26266
  • [Na+].[AlH4-]
பண்புகள்
AlH4Na
வாய்ப்பாட்டு எடை 54.00 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்
அடர்த்தி 1.24 கி/செ.மீ3
உருகுநிலை 183 °C (361 °F; 456 K) (சிதையும்)
கரைதிறன் டெட்ரா ஐதரோ பியூரானில் கரையும். (16 கி/100 மி.லி -அறை வெப்பநிலையில்)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை −22 °C; −7 °F; 251 K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் அலுமினியம் ஐதரைடு (Sodium aluminium hydride) என்பது NaAlH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டெட்ரா ஐதரோ அலுமினேட்டு என்ர பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிற்து. வெண்மை நிறத்துடன் காற்றில் தானே பற்றிக் கொள்ளும் திண்மமான இது டெட்ரா ஐதரோபியூரானில் கரைகிறது. ஆனால் டை எத்தில் ஈதர் அல்லது ஐதரோகார்பன்களில் கரையாது. மீட்சியடையக்கூடிய ஐதரசனை சேமிப்பதற்கான ஒரு முகவராக இச்சேர்மம் மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கரிம சேர்மங்களின் வேதியியல் தொகுப்பு தயாரிப்பு முறைகளுக்கான ஒரு முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் அலுமினியம் ஐதரைடைப் போலவே இதுவும் பிரிக்கப்பட்ட சோடியம் நேர்மின் அயனிகளும் நான்முகி வடிவ அலுமினியம் ஐதரைடு எதிர்மின் அயனிகளும் கொண்ட உப்பு ஆகும் [1].

கட்டமைப்பு

[தொகு]

கால்சியம் தங்குதேட்டு கட்டமைப்பை ஒத்த சமகட்டமைப்பை சோடியம் அலுமினியம் ஐதரைடும் ஏற்றுக்கொண்டு படிகமாகிறது. இதன்படி நான்முக அலுமினியம் ஐதரைடு மையங்கள் எட்டு ஒருங்கிணைவு சோடியம் நேர்மின் அயனிகளுடன் (Na+) இணைக்கப்பட்டுள்ளன[2]

தயாரிப்பு

[தொகு]

டிரையெத்தில் அலுமினியம் வினையூக்கியைப் பயன்படுத்தி உயர் ஐதரசன் வாயு அழுத்தத்தில் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம், அலுமினியம், ஐதரசன் ஆகிய தனிமங்கள் சூடுபடுத்தப்பட்டு இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது:[3]

Na + Al + 2 H2 → NaAlH4

சோடியம் மற்றும் பொட்டாசியம் அலுமினியம் ஐதரைடுகளை அலுமினியம் குளோரைடுடன் முறையே சேடியம் ஐதரைடு மற்றும் பொட்டாசியம் ஐதரைடுகளை வினைபுரியச் செய்து தயாரிக்க முடியும். கரிம அலுமினியம் சேர்மங்கள் இவ்வினையை வினையூக்கம் செய்கின்றன.

வினைகள்

[தொகு]

ஒரு தொங்கலாக டை எத்தில் ஈதரில் சோடியம் அலுமினியம் ஐதரைடு இலித்தியம் குளோரைடுடன் வினைபுரிந்து பிரபலமான வினையாக்கியான இலித்தியம் அலுமினியம் ஐதரைடைக் கொடுக்கிறது.

LiCl + NaAlH4 → LiAlH4 + NaCl

நீர் போன்ற புரோட்டான் வழங்கும் கரைப்பான்களுடன் அதி தீவிரமாக கீழ்கண்டவாறு வினையில் ஈடுபடுகிறது. இச்சேர்மம் ஒரு வலிமையான ஒடுக்கும் முகவராகும்.

4 H2O + NaAlH4 → "NaAl(OH)4" + 4 H2

பயன்பாடுகள்

[தொகு]

ஐதரசன் சேமிப்பு

[தொகு]

சோடியம் அலானேட்டு [4] ஐதரசன் தொட்டிகளில் ஐதரசனை சேமிக்க ஆராயப்படுகிறது[5]. இதற்கான பொருத்தமான வினைகள் வருமாறு:

3 NaAlH4 → Na3AlH6+ Al + H2
Na3AlH6 → 3 NaH + Al + 3/2 H2

200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது சோடியம் டெட்ரா ஐதரோ அலுமினேட்டால் 7.4 சதவீத அளவு ஐதரசனை வெளியிட முடியும். ஈர்ப்பு மிக மெதுவாக நிகழ்ந்து ஒரு சேபிப்புத் தொட்டியை நிரப்புவதற்கு பல நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். வெளியீடு மற்றும் உள்ளீர்ப்பு இரண்டு வினைகளும் தைட்டானியம் உலோகத்தால் வினையூக்கம் செய்யப்படுகின்றன[6].

கரிம வேதியியல் வினைப்பொருள்

[தொகு]

சோடியம் அலுமினியம் ஐதரைடு ஒரு வலிமையான ஒடுக்கும் முகவராகும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போலவும் டை ஐசோபியூட்டைல் அலுமினியம் போல சில செயல்பாடுகளிலும் இது கரிம வேதியியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது[7]. சோடியம் போரோ ஐதரைடைக்காட்டிலும் மிக அதிக வலிமை கொண்ட ஒடுக்கும் முகவராக இச்சேர்மம் கருதப்படுகிறது. ஏனெனில் இதிலுள்ள அதிக முனைவு அலுமினியம்-ஐதரசன் பிணைப்பு B-H பிணைப்பைக்காட்டிலும் வலிமை குறைந்தாகும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போல இதுவும் எசுத்தர்களை ஆல்க்ககால்களாக குறைக்கிறது.

பாதுகாப்பு

[தொகு]

சோடியம் அலுமினியம் ஐதரைடு மிகவும் எளொதில் தீப்பற்றி எரியக்கூடியதாகும். இது அறை வெப்பநிலையில் வறண்ட காற்றில் வினைபுரியாது, ஆனால் ஈரப்பதத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்டது. இது தண்ணீருடனான தொடர்பு ஏற்படும்போது பற்றிக்கொள்கிறது அல்லது வெடிக்கிறது. அரிக்கும் தன்மை கொண்டது என்பதால் காற்றுப்புகா கொள்கலன்களில் சேமிப்பது பாதுகாப்பானது ஆகும். தண்ணீர் அல்லது ஆல்ககாலை கவனமுடன் இதனுடன் சேர்த்தால் நடுநிலையாக்கம் செய்யலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. W. Lauher, D. Dougherty P. J. Herley "Sodium tetrahydroaluminate" Acta Crystallogr. 1979, volume B35, pp.1454-1456. எஆசு:10.1107/S0567740879006701
  2. Dougherty, D.; Herley, P. J.; Lauher, J. W. "Sodium tetrahydridoaluminate"Acta Crystallographica B (24,1968-38,1982) (1979) 35, p1454-p1456.
  3. Peter Rittmeyer, Ulrich Wietelmann "Hydrides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_199
  4. Computational Study of Pristine and Titanium-doped Sodium Alanates for ...[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Zaluska, A.; Zaluski, L.; Ström-Olsen, J. O. (2000). "Sodium Alanates for Reversible Hydrogen Storage". Journal of Alloys and Compounds 298 (1–2): 125–134. doi:10.1016/S0925-8388(99)00666-0. 
  6. "Researchers Solve Decade-Old Mystery of Hydrogen Storage Material". Phys.Org. 2008-02-27.
  7. Melinda Gugelchuk "Sodium Aluminum Hydride" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, John Wiley. எஆசு:10.1002/047084289X.rs039