சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் குளோரோபிளாட்டினேட்டு
இருசோடியம் பிளாட்டினம் அறுகுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
16923-58-3 ![]() | |
ChemSpider | 9309311 |
EC number | 240-983-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11134193 |
| |
UNII | Q7589P090H ![]() |
பண்புகள் | |
Na2PtCl6 | |
வாய்ப்பாட்டு எடை | 453.7742 கி/மோல் (நீரிலி) 561.86588 கி/மோல் (அறுநீரேற்று) |
தோற்றம் | ஆரஞ்சு நிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 2.5 கி/செ.மீ3 |
உருகுநிலை | 110 °C (230 °F; 383 K) |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H300, H301, H317, H318, H334 | |
P261, P264, P270, P272, P280, P285, P301+310, P302+352, P304+341, P305+351+338, P310, P321, P330, P333+313 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு சோடியம் அறுபுளோரோ அலுமினேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு அமோனியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு (Sodium hexachloroplatinate) என்பது Na2[PtCl6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். சோடியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. குளோரோபிளாட்டினிக்கு அமிலத்தின் சோடியம் உப்பு என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. சோடியம் நேர்மின் அயனியும் அறுகுளோரோபிளாட்டினேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு உருவாகிறது. காக்சு மற்றும் பீட்டர் விளக்கியது போல, மஞ்சள் நிறத்தில் இருக்கும் நீரற்ற சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு ஈரப்பதமான காற்றில் சேமிக்கப்படும் போது ஆரஞ்சு நிற அறுநீரேற்றை உருவாக்குகிறது. பிந்தையதை 110 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும் போது நீர்நீக்கம் செய்யலாம்.[1]
பிளாட்டினம்-195 அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையியல் ஆய்வில் மிகவும் பொதுவான வேதியியல் மாற்றக் குறிப்பாக இந்தச் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய கரைசலில் உள்ள பிற பிளாட்டினம் இனங்களின் மாற்றங்கள் பதிவாகின்றன.[2]
தயாரிப்பு
[தொகு]பிளாட்டினம் ஒருங்கிணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கையில் சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு ஓர் இடைநிலைப் பொருளாகப் பெறப்படுகிறது. பெரும்பாலும் இராச திராவகத்தில் பிளாட்டினத்தைக் கரைப்பதில் தொடங்கும் வினை அறுகுளோரோபிளாட்டினிக் அமிலத்தைக் கொடுக்கிறது. பின்னர் இது சோடியம் குளோரைடுடன் வினைபுரிந்து ஆவியாகி, உப்பை விட்டுவிட்டு சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு சேர்மத்தைக் கொடுக்கிறது.[3]
- Pt + 4 HNO3 + 6 HCl → H2[PtCl6] + 4 NO2 + 4 H2O
- H2[PtCl6] + 2 NaCl → Na2[PtCl6] + 2 HCl
வினைகள்
[தொகு]சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு சேர்மத்தை அம்மோனியம் உப்பாக மாற்றுவதன் மூலமும், அதைத் தொடர்ந்து வெப்பச் சிதைவு மூலமும் பிளாட்டினம் உலோகமாக மாற்றலாம். இதனால் ஆய்வக எச்சங்களிலிருந்து பிளாட்டினம் உலோகத்தை மீட்டெடுக்க முடியும்.
- Na2[PtCl6] + 2 NH4Cl → (NH4)2[PtCl6] + 2 NaCl
- 3 (NH4)2[PtCl6] → 3 Pt + 2 N2 + 2 NH4Cl + 16 HCl
சோடியம் ஐதராக்சைடு போன்ற ஒரு காரத்துடன் வினைபுரிந்து [Pt(OH)6]−2 அயனியை உருவாக்குகிறது.[4]
பயன்பாடுகள்
[தொகு]D2O கரைப்பானில் உள்ள சோடியம் அறுகுளோரோபிளாட்டினேட்டின் 1.2 மோலார் கரைசல், 195Pt அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையியலில் வேதியியல் மாற்றங்களுக்கு பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்படும் குறிப்பு சேர்மமாகும். இந்த உப்பு மற்ற பிளாட்டினம் சேர்மங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில் வணிக ரீதியாகக் கிடைப்பதால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் இது அதிக கரைதிறனைக் கொண்டிருப்பதால் நிறமாலையை விரைவாகப் பெறவும் உதவுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cox, Lawrence E.; Peters, Dennis G. (1972). "Disodium Hexachloroplatinate(IV)". Inorganic Syntheses. Vol. 13. pp. 173–176. doi:10.1002/9780470132449.ch34. ISBN 9780470132449.
- ↑ 2.0 2.1 Priqueler, Julien R. L.; Butler, Ian S.; Rochon, Fernande D. (2006). "An Overview of 195 Pt Nuclear Magnetic Resonance Spectroscopy" (in en). Applied Spectroscopy Reviews 41 (3): 185–226. doi:10.1080/05704920600620311. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-4928. Bibcode: 2006ApSRv..41..185P. http://www.tandfonline.com/doi/abs/10.1080/05704920600620311.
- ↑ Kauffman, George B.; Teter, Larry A. (1963). "Recovery of Platinum from Laboratory Residues". Inorganic Syntheses. Vol. 7. pp. 232–236. doi:10.1002/9780470132388.ch61. ISBN 9780470132388.
- ↑ Vasilchenko, Danila; Berdyugin, Semen; Komarov, Vladislav; Sheven, Dmitriy; Kolesov, Boris; Filatov, Evgeny; Tkachev, Sergey (2022). "Hydrolysis of [PtCl6]2− in Concentrated NaOH Solutions". Inorg. Chem. 61 (15): 5926–5942. doi:10.1021/acs.inorgchem.2c00414. பப்மெட்:35380806.