சோசியல் சயன்டிஸ்ட்
Appearance
சோசியல் சயன்டிஸ்ட் ( Social Scientist) என்பது புதுதில்லியிலிருந்து 1972 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் வெளிவரும் ஓர் இதழ் ஆகும். சமூக அறிவியல் இந்திய நிறுவனமும் துளிகா புக்சும் இணைந்து இந்த இதழை வெளியிடுகின்றன. [1]
பிரபாத் பட்நாயக் ஆசிரியராகவும், இராசேந்திர பிரசாத் மேலாண்மை இயக்குநராகவும் இருந்து இந்த இதழை நடத்தி வருகிறார்கள். சமூக அறிவியல், மனிதம் ஆகிய தளங்களில் கட்டுரைகள் பல்வேறு அறிஞர்களால் எழுதப் பெற்று இவ்விதழில் இடம் பெறுகின்றன. மார்க்சிய கொள்கை அடிப்படையும் சார்பும் கொண்டு இந்த இதழ் வெளியாகிறது.