சோசப் பிலிப்சு (வளைப்பந்தாட்டம்)
சோசப் பிலிப்சு (Joseph Phillips) (24 மார்ச் 1911 - 13 நவம்பர் 1987) 1936 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட இந்திய நாட்டைச் சார்ந்த வளைப்பந்தாட்ட வீரர் ஆவார். தங்கப் பதக்கம் வென்ற இந்திய வளைப்பந்தாட்ட அணியில் இவர் ஒரு உறுப்பினராக இருந்தார். மீண்டும் இவர் ஒரு போட்டியில் விளையாடினார்.[1]
வரலாறு
[தொகு]பிலிப்சு மகாராட்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வளைப்பந்தாட்ட வீரர் ஆவார். சோசப் 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்தியா 5 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றது. இந்திய தேசிய அணி மொத்தம் 38 கோல்களை அடித்தது. இந்தியா, அமெரிக்கா (7-0), யப்பான் (9-0), அங்கேரியை (4-0) வென்றது. 1936 கோடைகால ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய தேசிய வளைப்பந்தாட்ட அணியில் தியான் சந்த் (கேப்டன்), அலி தாரா, சையத் முகமது சாபர், குர்சரண் சிங், ரூப் சிங், முகமது உசேன், மிர்சா நசீர்-உத்-தின் மசூத், சப்பான் சகாப்-உத்-தின் ஆகியோர் இருந்தனர். சோசப் கலிபார்டி, அகமது சேர் கான், பாபு என். நிமல் மற்றும் லியோனல் சி. எம்மெட் மற்றும் பலர் செர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினர்.
இந்தியாவுக்கு ஆரம்பத்தில் 6 கோல்கள் சாதகமாக இருந்தது. போட்டி மிகவும் சவாலாகவும், பரபரப்பாகவும் இருந்தது. இறுதியில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் செர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது.
சோசப் பிலிப்சு, பாபூ நிமலுடன், 1936 இந்திய ஒலிம்பிக் அணியில் பங்கேற்ற புனே வீரர்களில் இருவரில் ஒருவர். 1936 ஒலிம்பிக் பயணத்திற்காக பிலிப்சு மற்றும் பாபுராவிடம் விடைபெறுவதற்காக அவரது உள்ளூர் நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் காட்கி ரயில் நிலையத்தில் தோன்றினர். சோசப் பிலிப்சு மற்றும் பாபுராவ் நரசப்பா நிமல் இருவருக்கும் இது மிகப்பெரிய கவுரவம். சோசப் பிலிப்சு 1986 ஆம் ஆண்டு தனது 75 ஆவது வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Joseph Phillips". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 29 March 2022.