சோங்குல்டக் மாகாணம்
சோங்குல்டக் | |
---|---|
ஆள்கூறுகள்: 41°19′14″N 31°44′01″E / 41.32056°N 31.73361°E | |
நாடு | துருக்கி |
மாகாணம் | சோங்குல்டக் மாகாணம் |
அரசு | |
• மேயர் | Muharrem Akdemir (CHP) |
பரப்பளவு | |
• District | வார்ப்புரு:Turkey district areas km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
மக்கள்தொகை | |
• நகர்ப்புறம் | வார்ப்புரு:Turkey district populations |
• District | வார்ப்புரு:Turkey district populations |
Climate | Cfb |
இணையதளம் | www.zonguldak.bel.tr |
சோங்குல்டக் மாகாணம் ( Zonguldak Province துருக்கியம்: Zonguldak ili ) என்பது துருக்கியின் மாகாணங்களில் ஒன்றாகும். இது துருக்கியின் மேற்கு கருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ளது. இந்த மாகாணம் 3.481 கிமீ 2 பரப்பளவு கொண்டு உள்ளது. மேலும் இதன் மக்கள் தொகையானது 619,703 ஆகும். அதன் அருகில் மாகாணங்களாக தென்மேற்கில் டோஸ், தெற்கே போலு, தென்கிழக்கில் கராபக் மற்றும் கிழக்கில் பார்ட்டன் ஆகியவை உள்ளன. மாகாணத்தின் தலைநகர் பகுதியாக சோங்குல்டக் உள்ளது.
மாகாணத்தில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, சோங்குல்டக் ஒரு பெரிய நிலக்கரி உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
மாவட்டங்கள்
[தொகு]சோங்குல்டக் மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
காணத்தக்க தளங்கள்
[தொகு]இந்த மாகாணப் பகுதியில் சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட பகுதிகளாக இலாக்சு, கபுஸ், கோபே கடற்கரைகள், தேசிய இறையாண்மை காடு, ஏரி (கோல்) மலை, பீடபூமி, கோகமான், போஸ்டனாசா, உவாமிலிக், பக்லாபோஸ்தான் மற்றும் கோர்லிக் வன பொழுதுபோக்கு பகுதிகள், குமயானே, கோசெலெல்மா, மென்சிலிஸ் குகைகள் போன்றவை உள்ளன.
அருங்காட்சியகங்கள்
[தொகு]ஈரெலி நகரில் அமைந்துள்ள எரெலி அருங்காட்சியகம் என்பது நகரத்தில் இமைந்துள்ள ஒரே அருங்காட்சியகமாகும்.
எரெலி
[தொகு]எரெரி கி.மு. 6 ஆம் நூற்றாண்டில். இதை ஃபிரைஜியர்களுக்கு பின்னர் ஆட்சிக் கட்டிலில் ஏறிய மரியாண்டினியர்களால் நிறுவப்பட்டது. எரெலி ஒரு முக்கியமான வணிக கப்பல் துறையாக (எம்பெரியன்) இருந்தது. இது புகழ்பெற்ற தொன்மவியல் வீரனான எர்க்குலிசு (ஹெராக்கிள்ஸ்) என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. இந்த நகரமானது உரோமர், பைசாந்தியப் பேரரசு, செல்யூக் அரசமரபு மற்றும் உதுமானியப் பேரரசின் காலங்களில் அதன் முக்கியத்துவத்தைப் பேணிவந்ததுது. இப்பகுதியில் முக்கியமான வரலாற்று இடிபாடுகளான அச்செரோன் பள்ளத்தாக்கு இடிபாடுகள் உள்ளன. இதில் செஹென்னெம் அஸே குகைகள் அமைந்துள்ளன, அவற்றுடன் கிரேக்கம், ரோமன், பைசாந்தியன் மற்றும் உதுமானியப் பேரரசு கால இடிபாடுகள், எரெலி கோட்டை, ஹெராக்கிள்ஸ் அரண்மனை, ஈஸ்டெப் லைட்ஹவுஸ் கோபுரம், பைசாந்தியன் நீர் தேக்கத் தொட்டிகள், கிரிஸ்போஸ் கல்லறை தேவாலயம் மற்றும் ஹலில் பானா மாளிகை போன்றவை உள்ளன.
கடற்கரைகள்
[தொகு]இங்கு உள்ள கடற்கரைகளில் சுமார் ஐம்பது மைல் (80 கி.மீ) நீளமுள்ள பல இயற்கை மணல் கடற்கரைகள் காணப்படுகின்றன. கிழக்கிலிருந்து தொடங்கி, இந்த கடற்கரைகளில் பின்வருவன அடங்கும்: சாஸ்காய், பிலியோஸ், தர்காலி, கோபே, ஹிசாரர்காசே, உசுங்கம், டெர்சேன், கபுஸ், கரகம், டீசிர்மெனாசா, இலாக்ஸு, கிரெலிக், அர்முடூக், கருங்கடல் எரெக்லா, மெவ்ரெலா, மெவ்ரேலா, மெவ்ரெலா ஆகிய கடற்கரைகள் உள்ளன.
வீதியுலா
[தொகு]இந்த பிராந்தியத்தில் உள்ள நகரவாசிகளின் தினசரி பொழுது போக்கானது நிதானமாக நடந்து சென்று பிரௌட்சு பகுதியைச் சுற்றிவருதல் ஆகும். இந்த பிரௌட்சு பகுதியானது இவர்களுக்கு பொழுதுபோக்கு பகுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிரௌட்சு என்பது குடிநீர் வழங்க அல்லது பிற தொழில்துறை நோக்கங்களுக்காக பயன்படும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட செயற்கை ஏரிகள் ஆகும். இந்த பிரௌட்சுகளாக: மையத்தில் உள்ள உலுட்டான் அணை ஏரி, கோசல்கபனர் அணை ஏரி, மற்றும் எரேலியில் உள்ள கெலி அணை ஏரி, சடலாஸ் பெருநகரத்தில் உள்ள டெரெக்கி குளம் மற்றும் கராபனர் பெருநகரத்தில் உள்ள அபோனோஸ்லு குளம் (18 ஹெக்டேர்.) ஆகியவை உள்ளன.
நகரத்தின் மிக முக்கியமான அருவிகள்: சென்டர் கோகாக்ஸு தளத்தில் உள்ள ஹர்மன்கயா, கோஸ்லு பெருநகரத்தில் உள்ள டெசிர்மெனேஸ் மற்றும் எரேலியில் உள்ள கெனெலி அருவிகள் போன்றவை ஆகும். மேலும் கெனெலி அருவிகளின் சுற்றுப்புறங்கள் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
குகைகள்
[தொகு]செஹென்னெமாஸ் குகை, கோகால், கோசெல்ல்மா, கினாக்சி மற்றும் குமயானி ஆகியவை குறிப்பிடத்தக்க குகைகள் .