சோக்ரான் மம்தானி
சோக்ரான் மம்தானி | |
|---|---|
2025ல் மம்தானி | |
| Member of the [[நியூ யோர்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் State Assembly]] from the நியூ யார்க் மாநிலததின் 36வது (குயின்சு மாவட்டம்) சட்டமன்றத் தொகுதி district | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் சனவரி 1, 2021 | |
| முன்னையவர் | ஆரவெல்லா சிமோடாஸ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சோக்ரான் குவாமே மம்தானி அக்டோபர் 18, 1991 கம்பாலா, உகாண்டா |
| குடியுரிமை |
|
| அரசியல் கட்சி | ஜனநாயகக் கட்சி |
| துணைவர் | ரமா துவாஜி (தி. 2025) |
| பெற்றோர் |
|
| கல்வி | போடோயின் கல்லூரி, இளங்கலை பட்டம் |
| கையெழுத்து | |
| இணையத்தளம் | |
| வார்ப்புரு:Listen voice | |
சோக்ரான் குவாமே மம்தானி (Zohran Kwame Mamdani), {{efn|English pronunciation: /zəˈ(h)rɑːn ˈkwɑːmeɪ məmˈdɑːni/ (ⓘ)[1][2] (பிறப்பு:18 அக்டோபர் 1991), ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதியும், நியூ யோர்க் மாநிலத்தின் குயின்சு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் ஆவார்.[3][4] சோக்ரான் மம்தானி 2025ஆம் ஆண்டில் நியூ யார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
பிறப்பு, கல்வி & அரசியல்
[தொகு]உகாண்டா வம்சவளி அமெரிக்க கல்வியாளர் முகமது மம்தானி - அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் இந்தியா வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான மீரா நாயர் தம்பதியருக்கு உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவில் 18 அக்டோபர் 1991 அன்று பிறந்தவர் சோக்ரான் மம்தானி. ஐந்தாண்டுகள் கழித்து குழந்தை சோக்ரான் மம்தானியுடன் பெற்றோர் தென்னாப்பிரிக்காவில் குடிபெயர்ந்தனர்[5]. சோரான் மம்தானியின் ஏழாவது வயதில் பெற்றோருடன் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று நியூ யார்க் நகரத்தில் நிரந்தரமாக குடியேறினர்.[6] சோக்ரான் மம்தானி போடோயின் கல்லூரியில் ஆப்பிரிக்க படிப்புகள் தொடர்பாக 2014ஆம் ஆண்டில் இளங்கலை பட்டம் பெற்றார்[7][8].
பின்னர் நியூ யார்க் நகர அரசியலில் காதர் எல்-யாதீம் மற்றும் ரோஸ் பார்க்கன் போன்ற அரசியல்வாதிகளுக்கு அரசியல் மேலாளராக பணியாற்றினார். சோக்ரான் மம்தானி 2020ஆம் ஆண்டில் முதன்முறையாக நியூ யார்க் மாநில சட்டமன்றத்திற்கு குயின்சு தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்[9] . இவர் மீண்டும் 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நியூ யார்க் மாநில சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி வென்றார்.[10][11]
நியூ யார்க் மேயர் தேர்தலில்
[தொகு]சோக்ரான் மம்தானி ஜனநாயக் கட்சியின் சார்பில் 4 நவம்பர் 2025 அன்று நடைபெறும் நியூ யார்க் நகர மேயர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் சுயேச்சை வேட்பாளர் கர்டிஸ் சில்வா ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.[12][13] [5][14][15][16]
சோக்ரன் மம்தானி நியூ யார்க் நகர மேயர் தேர்தலில் வென்றால், அந்நகரத்திற்கான சிறப்பு நிதியுதவிகளை நிறுத்தி விடுவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.[17] [18]இருப்பினும் நியூ யார்க் நகர மேயர் தேர்தலில் சோக்ரான் அபார வெற்றி பெற்றார்.[19][20]
குடும்பம்
[தொகு]34 வயதான சோக்ரான் மம்தானி 2025ஆம் ஆண்டில் சிரியா நாட்டுப் பெண் ஓவியரான ரமா துவாஜியை மணந்து கொண்டு அஸ்டோரியாவில் வசிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zohran K. Mamdani – Assembly District 36 – Video. Assembly Member Directory. New York State Assembly. June 6, 2023. Retrieved June 26, 2025.
- ↑ Mamdani, Zohran (June 15, 2020). New York for the Many | Zohran Mamdani (Vote June 23). Event occurs at 00:12. Retrieved June 27, 2025 – via YouTube.
- ↑ Kaufman, Maya (June 9, 2020). "NYC Primary Election 2020: Zohran Mamdani Vies For Simotas' Seat". Astoria-Long Island City, NY Patch (in ஆங்கிலம்). Archived from the original on June 11, 2025. Retrieved July 22, 2020.
- ↑ Wynn, Jasmine (February 13, 2024). ""The People's Republic of Astoria" – A Delve Into America's Premier Socialist Stronghold". Harvard Political Review (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on June 14, 2025. Retrieved June 5, 2025.
- ↑ 5.0 5.1 Kitunzi, Yahudu (June 7, 2025). "Mamdani's mayoral goal puts Uganda on the map". Monitor. Archived from the original on June 9, 2025. Retrieved June 7, 2025.
- ↑ Haag, Matthew; Goldberg, Emma (June 27, 2025). "The Parents Who Helped Shape Zohran Mamdani's Politics" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து June 30, 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20250630082732/https://www.nytimes.com/2025/06/26/nyregion/zohran-mamdani-parents-mira-nair.html.
- ↑ Shoki, William (February 9, 2020). "Roti and Roses for All". Jacobin. Retrieved March 25, 2025.
- ↑ Sorkin, Emma (November 1, 2019). "Taking a stand: alumni run for office, with Bowdoin in mind". The Bowdoin Orient. Archived from the original on June 11, 2025. Retrieved March 17, 2025.
- ↑ Shankar, Soumya (November 4, 2020). "New York elects first South Asian Americans to state Assembly". NBC News. Archived from the original on July 8, 2021. Retrieved June 5, 2025.
- ↑ "2022 New York State Assembly Election Results". Courier & Press. November 8, 2022.
- ↑ Kaye, Jacob; Schwach, Ryan; Powelson, Noah (November 5, 2024). "Queens Dem incumbents sweep". Queens Daily Eagle. Retrieved June 5, 2025.
- ↑ NYC mayoral election live: Mamdani, Cuomo, Sliwa vie to lead New York
- ↑ NYC mayoral election results: Zohran Mamdani, Andrew Cuomo and Curtis Sliwa face off
- ↑ Marcelo, Philip (June 25, 2025). "Who is Zohran Mamdani? State lawmaker seeks to become New York City's first Muslim and Indian American mayor". AP News. Retrieved June 27, 2025.
- ↑ Zohran Mamdani emerges as front-runner as NYC Mayoral race enters final lap
- ↑ Trump on 60 Minutes: US President's surprising answer when asked what would he do if Zohran Mamdani becomes New York Mayor
- ↑ மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வென்றால் நியூயார்க் நகரத்துக்கான நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் மிரட்டல்
- ↑ New York mayoral election: Donald Trump's 'no funds' for NYC warning for voters if Zohran Mamdani wins; backs Andrew Cuomo in fiery pitch
- ↑ யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை
- ↑ நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி நபர் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவருக்கு காத்திருக்கும் சவால்கள்