சோகா நெல்
| சோகா நெல் (Joha rice Rice) | |
|---|---|
அசாமின் நறுமணமிக்க சோகா (ஜோஹா) நெல் வகை. படிமத்தில்: (கோலா ஜோஹா). | |
| குறிப்பு | சோகா நெல் என்பது அசாமில் பயிரிடப்படும் ஒரு நறுமண அரிசி (நெல்). |
| வகை | நறுமண அரிசி |
| இடம் | ஜோர்ஹாட், அசாம் |
| நாடு | |
| பதிவுசெய்யப்பட்டது | செப்டம்பர் 10, 2013 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindia.gov.in |
சோகா நெல் (சோகா சவுல்) Joha rice) என்பது; இந்தியாவில் வளர்க்கப்படும் ஒரு வகையான பாரம்பரிய நெல், அதன் நறுமணம், மென்மை மற்றும் சிறந்த சுவைக்கு குறிப்பிடத்தக்கது. அசாமில் இந்த நெல் மிகப்பெரிய வேளாண்மையாகவும், மற்றும் முதன்மையாகயாகவும் வேளாண் குடிகள் மூலம் வளர்க்கப்படுகிறது. காரோ மலைகளில் இது பரவலாக பயிரிடப்படும் இது, சகா நெல் அல்லது உள்ளூரில் மி சகா என்று அழைக்கப்படுகிறது.[1] மேலும் இதன் அரிசிக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம்
[தொகு]இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பயிரிடப்படும் நறுமண வகையான சோகா நெல், இரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதிலும் நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும், எனவே நீரிழிவு மேலாண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயனுள்ள ஊட்டச்சத்து மருந்தாகும் எனவும் கூறப்படுகிறது. சோகா என்பது அதன் குறிப்பிடத்தக்க நறுமணம் மற்றும் குறிப்பிடத்தக்க சுவைக்காக அறியப்பட்ட ஒரு குறுகிய தானிய கூதிர்கால நெல் ஆகும். சோகா அரிசியை (சோறு) உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் குறைவாக இருப்பதாக பாரம்பரிய கூற்றுக்கள் உள்ளன, ஆனால் இவற்றுக்கு அறிவியல் பூர்வமான சரிபார்ப்பு தேவை.[2]
விளக்கம்
[தொகு]அசாம் பிறப்பிட மையங்களில் ஒன்றாக இருப்பதால், நெல் சாகுபடியில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து பொதுவான சாகுபடிகளிலும், இந்த பிராந்தியத்தின் நறுமண அரிசிகளின் புகழில் முதலிடத்தில் உள்ளது. சோகா நெல் சாகுபடிகள் அதன் தனித்துவமான நறுமணம், மிக நுண்ணிய தானியம், நல்ல சமையல் குணங்கள் மற்றும் சிறந்த சுவைக்கு பெயர் பெற்றவை. நீள்வட்ட விகிதத்தைத் தவிர, அசாமின் சோகா சாகுபடிகள் இந்தியாவின் பிற நறுமண அரிசியைப் போலவே இணக்கமான நறுமணத்தையும் தரத்தையும் கொண்டுள்ளன. இருப்பினும், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக நறுமண நெல் வகையின் ஆராய்ச்சியாளர்களாலும், தொழிலாளர்களாலும் ஆய்வு செய்யப்படவில்லை. உள்ளூர் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சில ஆரம்ப இனப்பெருக்க பணிகள் மற்றும் திசு வளர்ப்பு மட்டுமே இன்றுவரை செய்யப்படுகின்றன. நற்பேறற்றதாக அவற்றில் இப்போது பல அழிந்துவிட்டன. இந்த மதிப்பாய்வில், அசாமின் சோகா நெல் சாகுபடிகள் பற்றிய சிதறிய தகவல்கள் மற்றும் தரவுகளை ஒன்றிணைக்க முயற்சிக்கப்படுகிறது, இந்த மதிப்புமிக்க மற்றும் உள்ளூர் நெல் வகையைப் பற்றிய மேலும் ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கவனத்தை அதில் பணியாற்ற ஈர்க்க உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.[3]
புவிசார் குறியீடு
[தொகு]இந்திய அரசின் கீழ் உள்ள புவியியல் குறியீட்டில் பதிவு செய்ய சோராட்டில் உள்ள அசாம் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சிவசாகரில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான சூசு சதீர்த்தா ஆகியவை சோகா நெல்லிற்கான விண்ணப்பத்தை முன்வைத்தன. சோகா நெல்லின் தனித்துவம், இப்பகுதியில் நிலவும் குறிப்பிட்ட காலநிலையின் நிலைமைகள், பல்வேறு பண்புகள் மற்றும் நெல் சாகுபடி முறை ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது உற்பத்தியில் நறுமணம் மற்றும் சுவையின் சிறந்த வெளிப்பாட்டைச் சேர்க்கிறது என்று அறிக்கையில் கூறியது. மேலும் அந்த அறிக்கையில், சோகா நெல்லின் சந்தைத் திறன் அறிந்து சோகா நெல்லின் பெயரில் வேறு இடங்களில் வளர்க்கப்படும் பிற சிறு தானிய நறுமண அரிசியை விற்க வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்களால் பாதிக்கப்படக்கூடும் என்ற நியாயமான கவலை வேளாண் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே உள்ளது.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Joha rice". grokipedia.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-12-02.
- ↑ "Joha rice - the Nutraceutical of choice in diabetes management". grokipedia.com (ஆங்கிலம்) - 23 JUN 2023 2:21PM by PIB Delhi. Retrieved 2025-12-02.
- ↑ "AROMATIC JOHA RICE OF ASSAM- A REVIEW" (PDF). arccarticles.s3.amazonaws.com (ஆங்கிலம்) - 1 - 10, 2010. Retrieved 2025-12-02.
- ↑ "Assam's aromatic Joha rice has finally got the GI (geographical indications) tag from the Union ministry of commerce.". Telegraphindia. 30.03.2017. https://www.telegraphindia.com/north-east/gi-tag-for-joha-rice/cid/1429771#goog_rewarded.