சோகாக் கசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோகாக் கசி (Sohag Gazi) (பிறப்பு: ஆகஸ்டு 5,1991) , வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் வங்காளதேசட்ய்ஹ் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை சுழற் பந்து வீச்சாளரகவும் செயல்படுகிறார். இவர் வங்காளதேச தேசிய அணி தவிர வங்காளதேச அ அணி, வங்காளதேச துடுப்பாட்ட வாரிய அணி, பரிசல் அணி மற்றும் சியல்கோட் துடுப்பாட அணி ஆகிய அணிகளுக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

முதல்தரத் துடுப்பாட்டம்[தொகு]

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய லீக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் பரிசல் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.சனவரி 14, குல்னாவில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் சிட்டகொங் பகுதி துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் எட்டு ஓட்டங்கள் எடுட்து கம்ருல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் ஒன்பது ஓவர்களை வீசி 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இதில் ஒருஓவரை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 31 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்து கம்ருல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 19 ஓவரை வீசி 63 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.ஐந்து இலக்கினைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் சிட்டகொங் அணி 122 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[1]

பட்டியல் அ[தொகு]

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் பரிசல் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அக்டோபர் 26, போக்ராவில் உள்ள துடுப்பாட்ட மைதானத்தில் குல்னா துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் அரிமுகமானார். . இந்தப் போட்டியில் ஏழு பந்துகளில் ஆறு ஒட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் பந்துவீச்சில் ஒன்பது ஓவர்களை வீசி 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில்பரிசல் அணி 19ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2012 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 13, தாக்காவில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 47 ஓவர்கள் வீசி 145 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இலக்கினைக் கைப்பற்றினார். இதில் ஏழு ஓவர்களை மெய்டனாக வீசினார்.நான்கு பந்துகளில் நான்கு ஓட்டங்களை எடுத்து நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 23 ஓவர்கள் வீசி 74 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆறுஇலக்குகளைக் கைப்பற்றினாரிதிலிஒரு ஓவர்களை மெய்டனாக வீசினார்.பின் மட்டையாட்டத்தில் 38 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்து பெருமாள் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்துடுப்பாட்ட அணி 77 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[3]

ஒருநாள்[தொகு]

2012 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 30, குல்னாவில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநள் பபன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். இரு ஓவர்களை மெய்டனாக வீசினார். மட்டையாடவாய்ப்புகிடைக்கவில்லை . இந்தப் போட்டியில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி ஏழு இலக்குகளால் வெற்றி பெற்றது.இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[4]

சான்றுகள்[தொகு]

  1. "Full Scorecard of Barisal Division vs Chittagong Division, National Cricket League, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  2. "Full Scorecard of Barisal Division vs Khulna Division, National Cricket League One-Day, First Stage - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  3. "Full Scorecard of Bangladesh vs West Indies 1st Test 2012 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  4. "Full Scorecard of Bangladesh vs West Indies 1st ODI 2012 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகாக்_கசி&oldid=2848111" இலிருந்து மீள்விக்கப்பட்டது