சொல்லிசை அளபெடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். சொல்லிசை அளபெடை வினையெச்ச வாய்பாட்டை இசையாக்கி ஒலித்துக் காட்டும்.

ஏடுத்துக்காட்டு

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். [1]

அளவு என்பது அளவுதலைக் குறிக்கும் வினைச்சொல். 'அளவி' என்பது இதன் வினையெச்சம். 'அளவி' என எழுதியிருந்தாலும் செய்யுள் தளை தட்டாது. பொருளும் மாறுபடாது. அப்படி இருக்கும்போது 'அளைஇ' என இங்கு இசைச்சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைப்பது சொல்லிசை அளபெடை.

அடிக்குறி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லிசை_அளபெடை&oldid=3892962" இலிருந்து மீள்விக்கப்பட்டது