சொல்புதிது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சொல்புதிது ஓர் இலக்கியச் சிற்றிதழ். 1998 முதல் 2004 வரை மும்மாதத்துக்கு ஒருமுறையாக வெளிவந்தது. ஜெயமோகன் இந்த இதழின் வழிகாட்டுநராக இருந்தார். முதலில் திருப்பூரில் இருந்து சூத்ரதாரியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. சூத்ரதாரி பின்னர் எம். கோபாலகிருஷ்ணன் என்ற பேரில் நாவலாசிரியராக ஆனவர். செந்தூரம் ஜெகதீஷ், க.மோகனரங்கன் ஆகியோர் இதன் பொறுப்பில் இருந்தார்கள். ஆறு இதழ்களுக்குப்பின் சூத்ரதாரி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார்

பின்னர் சரவணன் ஆசிரியத்துவத்தில் இவ்விதழ் வெளிவந்தது. கடைசி மூன்று இதழ்கள் சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியத்துவத்தில் வெளிவந்தன. மொத்தம் 14 இதழ்கள் வெளிவந்துள்ளன.

சொல்புதிது இலக்கியம், தத்துவம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வெளிவந்தது. எழுத்தாளர்களின் படங்களை பெரிய அளவில் அட்டையில் போட்டு வெளிவந்த சிற்றிதழ் இது. கலைக்களஞ்சியம் அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது. நித்ய சைதன்ய யதி, வேதசகாய குமார், அ. கா. பெருமாள் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். ஒவ்வொரு இதழிலும் ஒரு புத்தகப்பகுதி இருந்தது.

சொல்புதிது அ. முத்துலிங்கம், யுவன் சந்திரசேகர், பிரேம்-ரமேஷ் போன்றவர்கள் கதைகளை எழுதியிருக்கிறார்கள். தேவதேவன் சி மணி போன்றவர்களின் கவிதைகள் வெளிவந்தன. எம்.எஸ்.மொழியாக்கத்தில் முக்கியமான உலகச்சிறுகதைகள் அதில் வெளியாயின

யோகி ராம் சுரத்குமார், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாவண்ணன், யுவன் சந்திரசேகர், நீல. பத்மநாபன், பேராசிரிய ஜேசுதாசன், இசை ஆய்வாளர் நா. மம்முது போன்றோரின் மிக விரிவான பேட்டிகள் சொல்புதிதில் வெளிவந்தன. சொல்புதிது பேட்டிகள் ஜெயமோகன் - சூத்ரதாரி எழுதிய இலக்கிய உரையாடல்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்புதிது&oldid=1244254" இருந்து மீள்விக்கப்பட்டது