சொற்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சொற்களஞ்சியம்[தொகு]

களஞ்சியம்[தொகு]

களஞ்சியம் என்றால் பொருள்களைச் சேமித்து வைத்து, தேவையானபொழுது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள உதவும் இடம் ஆகும். தமிழர் தானியங்களைச் சேமித்து வைக்கும் இடத்தைத் தானியக்களஞ்சியம் என்றழைத்தனர்.தானியக்களஞ்சியம்,கலைக்களஞ்சியம் எனக் களஞ்சியம் பலவகைப்படும்.

சொற்களஞ்சியம்[தொகு]

என்பது,மொழிகற்பவர்தம் மூளையில் சென்று பதிந்திருக்கக்கூடிய சொற்களின் சேமிப்பாகும்;பிறர் பேசக்கேட்கும்பொழுதும் நூல்களைப் படிக்கும்பொழுதும் நாம் அறிந்துகொள்ளக்கூடிய சொற்களின் தொகுப்பாகும்.மொழித்திறன் வளர அடிப்படையாய் அமைவது சொற்களஞ்சியப்பெருக்கமே ஆகும். சொற்களஞ்சியமானது அறிந்தசொற்களஞ்சியம்,பயன்படுத்தும் சொற்களஞ்சியம் என இருவகைப்படும்.

அறிந்த சொற்களஞ்சியம்[தொகு]

பிறரது பேச்சிலிருந்தும் நூல்களைப்படிப்பதனாலும் நாம் அறிந்துகொள்ளக்கூடிய சொற்கள் அறிந்த சொற்களஞ்சியம் எனப்படும்.

பயன்படுத்தும் சொற்களஞ்சியம்[தொகு]

நாம் பேசும்பொழுதோ எழுதும்பொழுதோ நம்முடைய அறிந்த சொற்களஞ்சியத்திலிருந்து எடுத்துக் கையாளக்கூடிய சொற்கள் பயன்படுத்தும் சொற்களஞ்சியம் எனப்படும்.

பார்வைநூல்கள்:[தொகு]

தமிழ்மொழி கற்பித்தல்-ஆசிரியர் கல்விப் பட்டயப்பயிற்சி வளநூல் இரண்டாமாண்டு, ப.எண்:48, முதற்பதிப்பு:2009,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்களஞ்சியம்&oldid=2418379" இருந்து மீள்விக்கப்பட்டது